சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறையை மீறி வெளியில் சுற்றியிருந்த 2 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே சத்திரம், புழுதிபட்டி ஆகிய பகுதியில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புழுதி பட்டியை சேர்ந்த அருண் ( 20 ), தர்மபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ( 21 ) ஆகிய 2 வாலிபரும் காரணம் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து புழுதிபட்டி காவல்துறையினர் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேர் மீதும் கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.