பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சுற்றி திரிந்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் அந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.