Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் கண்களில் பாதிப்பு….. 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாணவர்கள், மடிக் கணினி மற்றும் மொபைல் போனில் நீண்ட நேரம் உட்காருவதால் அவர்களது உடல் பாதிப்பு ஏற்படும் எனவும், நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டதோடு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசிடம் விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |