அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ஒன்று மாநகராட்சிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல் கால்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.பி வேலுமணி சார்பில் வாதிடப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து, இன்று இதற்கான தீர்ப்பை அளித்தது. டெண்டர் முறைகேட்டில் எஸ்பி வேலுமணி மீதான வழக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல சொத்து குவிப்பு வழக்கில் ரத்து செய்ய வேண்டும் என்ற எஸ்.பி வேலுமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.