Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அண்ணன் மீது உள்ள முன்பகையில்… தம்பியின் ஆட்டோவை சேதப்படுத்திய… 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஆட்டோவை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் கார்த்திக்(24) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சொந்தமாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இதனையடுத்து கார்த்திக்கின் அண்ணன் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொம்மை குரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த பொம்மை குரு மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கார்த்திக்கின் ஆட்டோ உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொம்மைகுரு கூட்டாளிகளான முருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான பொம்மை குருவை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |