Categories
உலக செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்… இளம் பெண்ணின் மோசமான செயல்… விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!!

கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நிறுத்தாமல் கார் ஓட்டி சென்ற இளம்பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கனடாவில் உள்ள Meadow Lake என்ற பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த 27 வயது இளம்பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக ட்ரக் ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளவர். பின்னர் அந்த இளம் பெண்ணுடைய காரின் மேற்கூரை பறந்து போய் விட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காரில் உள்ள முன்பக்க கண்ணாடியும் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் அந்தப் பெண் காரை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சென்றுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் காரை வீடு ஒன்றின் முன்பு நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் மதுபானம் அனுமதிக்கப்பட்ட அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அவருடைய காரினுள் ஒரு மதுபாட்டில் பாதியளவும், ஆறு மதுபாட்டில்கள் காலியாகவும் இருந்துள்ளது. இதையடுத்து அளவுக்கதிகமாக மது அருந்தியது, விபத்து ஏற்படுத்தியது, காரை நிறுத்தாமல் சென்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த இளம்பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |