Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…. போலீசார் அதிரடி….!!!

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் நடிகை யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது முதற்கட்ட விசாரணையில் நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததாலேயே விபத்து ஏற்பட்டிருக்கிறது என கண்டறிந்துள்ளனர். ஆகையால் நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |