Categories
தேசிய செய்திகள்

“அதானி நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு” உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம், குவாஹாத்தி, ஜெய்ப்பூர், மங்களூரு, அகமதாபாத், லக்னோ, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லியை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விமான நிலைய பராமரிப்பு பணிகள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தை பராமரிக்கும் பணி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், கேரள அரசும், தொழில்துறை மேம்பாட்டு கழகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீடு மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதிகள் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் குறைந்தபட்சம் 25 சதவீதம் பங்குகள் இருக்கும் நிறுவனத்திற்கு 10% என்ற வரம்பின் அடிப்படையில் ஏலத்தில் முதல் மறுப்புரிமை வழங்கப்படும் என்று கூறினர்.

அதன்படி கேரளாவில் தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு கழகத்தில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏலத்தில் ஒரு பயணிக்கு 168-ம், அதானி நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏலத்தில் ஒரு பயணிக்கு 135-ம் இருந்தது. கேரள தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 சதவீதம் தொகை குறைவாக கேட்கப்பட்டதால் தான், அதானி குழுமத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. எனவே கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

Categories

Tech |