அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.