Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்!

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 24ம் தேதி முதற்கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடந்து கொரோனோவின் தாக்கம் குறையாததால் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விவரம் :

சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ள்ள ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த வருவாய் பெறுபவர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இதை வைரஸ் பரவல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

ஆனால் தென்கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் முழு ஊரடனாகை அறிவிக்காமல் அதேசமயம் வைரஸ் தொற்று பரவாமல் தடுத்துள்ளது. எனவே தற்போது வருவாய் இல்லாமல் வாடும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஜூன் 15ம் தேதி ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |