Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய கோரிக்கை…. ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க சதி திட்டமா…? வழக்கறிஞர் குற்றச்சாட்டு…!!!

இலங்கை நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்று பணிகளை தொடங்கியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜினாமா செய்து, புதிய பிரதமர் பதவியேற்ற பின்பும் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படவில்லை. கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் கொழும்பு நகர நீதிமன்றத்தில் கலே, டெம்பிள் ட்ரீஸ் ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட ஏழு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.

Categories

Tech |