திமுக ஆலேசனை கூட்டத்தில் தொண்டர்களை காக்க கழகம் நேரடியாக களம் இறங்கும் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என்பது காணொளி மூலமாக நடைபெற்றது. இதில், நேற்றைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் கைது நடைபெற்றது சட்டப்போராட்டம் நடத்தி அவர்கள் விடுதலை பெற்றதும் ஜாமீன் பெற்றதை பற்றி பேசியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி கேட்டதற்கு அவர் மீது வழக்கு போட்டிருக்காங்க, அமைச்சர் வேலுமணி ஊழலை தட்டிக் கேட்டதற்காக கோவை மாநகர மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் மீது வழக்கு போட்டுள்ளனர்.
அதே போல திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை கைது செய்வதுள்ளனர். கோவை மாவட்ட விவசாய அணி என தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக திமுகவினர் மீது வழக்குகள் தொடர்வது அதிகார துஷ்பிரயோகம் என கூறி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சராக இருக்கும் வேலுமணி காவல்துறை அதிகாரிக்கு கட்டளைஇடுவது இன்று இனபமாக இருக்கலாம் ஆனால், அதற்கு சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டும் என்றும் பேசியுள்ள திமுக தலைவர், மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகள் மீது புனையப்படும்வழக்கை சந்திக்க திமுக வழக்கறிஞ்சர் குழு அமைக்கப்படும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.
ஒரு மாவட்டத்தில் திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட அந்த மாவட்ட சட்டத்துறை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல மாவட்ட வாரியாக அதிமுக செய்யும் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.