Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”… ஆதாரத்தோடு சிக்கிய ட்ரம்ப்…. அதிகரித்த சட்ட நெருக்கடி…!!!

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிற்கு பல வழக்குகளால் அதிக சட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 6 ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக பதிவு செய்யப்பட்டது.
இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் தன் ஆதரவாளர்களிடம் கலவரத்தை தூண்டக்கூடிய விதத்தில் கருத்துக்கள் பரப்பினார் என்று பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எனவே, அவர் இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கலவரத்தை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டதற்கு ஆதாரங்கள் இருக்கிறது என்றும் முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக அவருக்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துவிட்டார். இதற்கிடையில் ட்ரம்ப்பின் பண்ணை வீட்டில் அமெரிக்க அரசாங்கத்தினுடைய ரகசியமான ஆவணங்கள் இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ட்ரம்ப் மற்றும் அவரின் மகன்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்தது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எனவே, டிரம்ப் அவரின் மகன்களோடு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |