Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 180 பேர் மீது வழக்கு… 25 பேரிடம் அபராதம் வசூல்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 180 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்ததாக 180 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 29 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாத  25 பேரிடம் அபராதம் விதித்து வசூலித்துள்ளனர்.

Categories

Tech |