Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைல இன்னும் கண்டிப்பு வேணும்…. நீதிமன்றத்தில் புதிய வழக்கு …!!

சென்னையில் கண்டிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் முழுமையான ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்த கோரிக்கை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழரசு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி 1,24,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  1,24,429 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,200 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் 8ஆம் தேதி வரை 33,229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 286பேர்  உயிரிழந்ததாக சுகாதார துறை தெரிவித்திருந்தது. கொரோனா  தொற்று பரவுவதை தடுக்க ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதும் சென்னையில் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றது. சென்னையில் மட்டும்  தொற்றினால் 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு  பதில் கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”  என  வழக்கறிஞர் தமிழரசு  மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு விரைவில்  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |