Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில்… 8 பேர் பலி…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவரின் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. 7 பேர் படுகாயம் அடைந்தனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது “தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாங்கள் தீயணைப்பு வீரர்களுடன் சென்றோம்.

பின்னர் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்தனர்.  மேலும் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் . மேலும் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |