Categories
உலக செய்திகள்

நிழல் உலக தாதா மீது வழக்குப்பதிவு…. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு…!!!

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேல் சட்டவிரோத  தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேல் ஹவாலா பணம் போன்றவற்றின் மூலமாக இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது மற்றும் பல குற்றச் செயல்களை செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தேசிய புலனாய்வு அமைப்பானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையை தொடர்ந்து தாவூத் இப்ராஹிமின் மீதும் அவரின் கூட்டாளிகள் மீதும் உபா என்ற சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |