கேரளாவிற்கு விடுமுறைக்கு வந்துள்ள பாலிவுட் நடிகை சன்னி லியோன் இடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம், பெரம்பவூரைச் சேர்ந்த ஆர் ஷியாஸ் என்பவர் நடிகை சன்னி லியோன் மீது பணமோசடி புகார் அளித்தார். தனது புகாரில் சன்னி 2 நிகழ்ச்சியில் பங்கேற்க உறுதி அளித்ததாகவும், அதற்காக 29 லட்சம் பணம் பெற்றதாகவும், அதன்படி குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை என்று தனது புகாரில் குறிப்பிட்டார்.
இந்த புகாரின் அடிப்படையில் சன்னி லியோனே நேற்று இரவு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். நோய்த்தொற்று சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சிகளை தவறவிட்டதாக சன்னிலியோன் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஐந்து முறை ஒத்தி வைத்தும் அவர்களால் அதை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் புகார்தாரர் மற்றும் சன்னிலியோனுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.