விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று சமூக தளங்கள் எல்லாம் கருத்துகள் வந்தன. இந்த நிலையில் தன்னுடைய ஆதரவை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான வன்மம் நிறைந்த அணுகுமுறையை காட்டுவது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக கூட்டணிக்கு கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என வாய் பிளந்து இருக்கு மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது எனவும், பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் திமுக அரசு செய்த சாதனை போல எந்த அரசும் செய்ததில்லை எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையை தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது காவல்துறைக்கு கண்டனம். அம்பேத்கர் – பெரியார் கூறிய பெண்ணடிமை குறித்து அம்பேத்கர் கூறிய தன் வரலாற்றுப் பின்னணியை தான் திருமாவளவன் தெரிவித்தார். என இதுபோன்ற பல்வேறு விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்.