Categories
அரசியல்

கொரோனாவை பரப்பியதாக குற்றசாட்டு: மதகுருமார்கள் உட்பட 66 பேர் மீது பாய்ந்தது வழக்கு

கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டு மதகுருமார்கள் உட்பட  66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

டெல்லி நிஜாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிகப்படியானோர் பங்கேற்றுள்ளனர்.  சிலர் மாநாடு முடிந்த பின்னர் மதம் தொடர்பாக பிரசங்க உரை நிகழ்த்த வெளிநாட்டு மத குருமார்களை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் அலட்சியத்துடன் செயல்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்துள்ளனர் என அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் விதியை மீறி மதப் பிரசங்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனடிப்படையில் மதுரை, சேலம், செங்கல்பட்டு, ஈரோடு முதலிய பகுதிகளில் தாய்லாந்து, இந்தோனேசியா, வங்கதேசத்தை சேர்ந்த 33 மதகுருமார்களின் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் மற்றும் தமிழகத்திற்கு அழைத்து வந்தவர்கள் உட்பட  33 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |