அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக செலவு செய்து விட்டனர்.
பிபி&டியில் வங்கி ஏடிஎம்யில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் செயல் பிழை காரணமாக வில்லியம்ஸ் தம்பதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சரியான வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிய வங்கி மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தம்பதிகள் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் பணத்தை இரண்டு வாரங்களில் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
முதலில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய தம்பதிகள் பின் தகவல் தொடர்பை துண்டித்து கொண்டதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மீது திருட்டு, திருடிய பொருளை வைத்திருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதையடுத்து ரூ18 லட்சம் ரூபாய் செலுத்தி தம்பதிகள் ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.