ஹைதராபாத் அருகே வரவேற்பு நிகழ்வின் போது மேடையில் வைத்தே மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நிஜாமாபாத் அருகே திருமண வரவேற்பின் போது இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு ஆடல் பாடலுடன் திருமண வரவேற்புவிழா கொண்டாடப்பட்டது. மறுநாள் கல்யாணம் என்பதால் அதிக அளவிலான உற்சாகத்தில் ஆடியுள்ளார் மாப்பிள்ளை.
அப்போது உறக்கம் இல்லாததாலும், அதிக சத்ததினாலும் ஏற்பட்ட மன இறுக்கத்தில் கல்யாண மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் தூக்கிச் செல்ல அங்கு அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண்வீட்டார் கண் கலங்கி நின்றனர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வரவேற்பு நிகழ்வில் மாப்பிள்ளை இறந்து, திருமண நிகழ்வு நின்றுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.