Categories
சினிமா தமிழ் சினிமா

புதுப்படத்திற்கு ஆர்வமாக பணியில் இறங்கிய நடிகை பிந்து மாதவி…!!

நடிகை பிந்து மாதவி தான் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கு டப்பிங் பணிகளை ஆர்வமாக தொடங்கியுள்ளார். 

கழுகு 2 படத்திற்கு அடுத்து பிந்து மாதவி நடித்திருக்கும் படம் யாருக்கும் அஞ்சேல். புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய படங்களுக்கு அடுத்தாக ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிந்து மாதவியுடன் இணைந்து தர்ஷணா பாணிக் நடிக்கிறார். கொரோனா பிரச்சினைக்கு முன்னரே, படக்குழு முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டது என்றாலும், பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், தொடர்ந்து தயாரிப்புப் பணிகளைத் தொடர இயலவில்லை.

தற்போது படக்குழு டப்பிங் வேலைகளை  தொடங்கி, பிந்து மாதவியின் குரல்பதிவு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. பிந்து மாதவி உற்சாகமாக தனது பணியை தொடங்கியுள்ளார். சமூக இடைவெளி மற்றும் அரசு விதித்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியான வகையில் பின்பற்றி மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் வேலைகளையும் தொடர்ந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறுகையில், “ஊட்டியில் உள்ள தங்களுடைய பாரம்பரிய சொத்தை விற்பனை செய்ய  வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகள், மற்றும் அவர்கள் அதை எவ்வாறு கையாண்டு  போராடுகிறார்கள் என்பதையும் விறுவிறுப்பாக விளக்கும் படம் இது”. என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |