சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் அஜித், விஜய்,சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் மதியம் 2 மணி அளவில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது ஓட்டை பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும், மனிதர்கள் தான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.