Categories
மாநில செய்திகள்

“கலப்பு திருமணம்” செய்யும் பெற்றோர்களின்…. குழந்தைகளுக்கு சாதிசான்றிதழ்…. புதிய அரசாணை…!!

கலப்பு திருமணம் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவிப்பின்படி சாதிசான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்பு திருமணம் செய்யும் தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் தொடர்பான முக்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வெவ்வேறு சாதிகளை சார்ந்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில் தந்தையின் சாதி அல்லது தாயின் சாதியை சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுவார்கள் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திரமோகன் அரசாணை வெளியிட்டு உள்ளார்.

அதில் பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதும் அந்த குழந்தைக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பொருத்தமான சாதி சான்றிதழ் வழங்குமாறு அரசு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. மேலும் குடும்பத்தில் உள்ள முதல் குழந்தைக்கு எந்த சாதியை சேர்ந்தவர் என்று சான்று வழங்கப்படுகிறதோ அதே போன்று தான் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |