ஜாதி படங்களால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் சுவாரஸ்ய தகவல்களை அளித்துள்ளார்.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஜாதிய படங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான தகவல்களை அளித்துள்ளார். அந்த வகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடிகர் நெப்போலியன் நடித்த “சீவலப்பேரி பாண்டி” திரைப்படத்தை வெளியிட முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தை வாங்கியவர்களுக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கமல்ஹாசன் நடித்த “விருமாண்டி” திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என பெயரிடப்பட்டு இருந்ததாகவும், அதனால் தென்மாவட்டங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் திரைப்படத்தின் பெயரை மாற்றுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் முக்குலத்தோர் நடிகர் சிவாஜி கணேசனை கொண்டாடியதையும், அதன்பிறகு கார்த்திக்கை கொண்டாடினார்கள் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் பிரசாந்தை மற்றொரு தரப்பினர் கொண்டாடியதாகவும் ஜாதிய பெயர்களுடன் பிரசாந்தின் ரசிகர் மன்றங்கள் வலம் வந்ததாக கூறியுள்ளார். இவ்வாறு சினிமாவில் யாரும் ஜாதியை பார்ப்பதில்லை அதேசமயம் ஜாதிய ரீதியாக கொண்டாடும் ரசிகர்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று கூறியுள்ளார்.