Categories
மாநில செய்திகள்

“சதி திட்டம்” இந்து அமைப்பு தலைவர்களுக்கு ஆபத்து….. தமிழகத்தில் 17 பயங்கரவாதிகள் கைது…!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு  மாற்றப்பட்டுள்ளது.

அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரில்  மூன்று பயங்கரவாதிகளை சென்னையில் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்  அடிப்படையில் பெங்களூர் சாம்ராஜ்நகரில் பதுங்கியிருந்த பாட்சா உட்பட இந்து பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

அதில் கைதானவர்கள் தென்னிந்தியாவில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்யவும் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும்  சதி திட்டம் தீட்டி இருந்தது சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, 17 பயங்கரவாதிகள் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு  மாற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |