பள்ளிகளில் மாணவர்கள் கையில் ஜாதி கயிறு கட்டும் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் புரட்சியாளர் புரட்சிக் கவிஞன் பாரதியார்.சாதி எனும் மாயம் குழந்தைகளை பாதித்து விட்டால் எதிர்காலத்தில் வளமான ஒரு சமுதாயம் உருவாகாது என்பதற்காகத்தான் அவர் அப்படி பாடினார் ஆனால் பாரதியின் இந்த கூற்றுக்கு நேரெதிராக நவீன வடிவில் சாதிக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள முசோரியில் IAS அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற்றது. அதில் தமிழக பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் தங்கள் கைகளில் கட்டும் கயிறுகள் மூலம் சாதி வேறுபாடு அடையாளப்படுத்தப்படுகின்றது என்ற விவாதம் எழுந்துள்ளது .
இந்தமோசமான செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று IAS அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுக்கப்பட்டது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அவர் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சாதி வேறுபாடுகளை உருவாக்கும் செயல் அதிர்ச்சியை அளிக்கின்றது. சாதி மனநிலை கொண்ட நபர்கள் சிலரால் , ஆசிரியர்களாலும் இது போன்ற சம்பவங்கள் ஊக்குவிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் நடக்கும் பள்ளிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.