நாம் எங்கேயாவது செல்வதற்கு புறப்படும்போது திடீரென்று பூனை குறுக்கே செல்லும். இதனால் அபசகுணம் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று கூறுவார்கள். உண்மையிலேயே பூனை குறுக்கே போனால் அபசகுணமா…? நம்முடைய பண்டைய காலத்தில் எங்கேயாவது வெளியே போக வேண்டுமென்றால் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ போவார்கள். அந்த சமயத்தில் குறிப்பாக இரவு நேரத்தில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ சென்று கொண்டிருக்கும்போது பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் நின்றுவிட்டு தான் செல்வார்கள்.
அதற்கான சரியான காரணம் என்னவென்றால் இரவு நேரத்தில் பூனையின் கண்கள் ஒளி வீசும். அதனை பார்க்கும் மாடுகள், குதிரைகள் பயந்து மிரண்டு போய் விடக் கூடாது என்பதற்காக தான் வழியிலேயே வண்டியை நிறுத்தி சிறிது நேரம் நின்று விட்டு செல்வார்கள். இதனை தெரிந்து கொள்ளாத நாம் இன்று வரையிலும் எங்காவது சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று பூனை குறுக்கே சென்றால் அபசகுணம் என்று நினைக்கிறோம்.