உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தது. இதனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஒடேசா நகரில் சுமார் 1.50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கிவ் மேயர் விட்டலி கிளிப் சோவின் […]
Category: உலகசெய்திகள்
பிரேசில் உலகில் 4-வது மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் ஜெயீர் அரசு மக்களிடம் விமர்சனங்களையும், கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டதால் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி ஜெயீர் 49.10 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். முன்னால் அதிபரான லுலு டா […]
ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டாஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வாகனநிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கு வேகமாக பரவிதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறைமுயற்சி மேற்கொண்டுள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். மேலும் உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் twitter நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7,500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தம்பா என்னும் பகுதியில் ஆர்டன் காட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தனது 9 வயதில் 1997 ஆம் வருடம் முதன்முதலாக ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின் பேக்ஸ் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்னும் பாப் இசை குழு உடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றியுள்ளார். இதில் அந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக்காட்டர் உறுப்பினராக இருந்திருக்கின்றார். இந்த சூழலில் வேலி […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் பசீராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் லாகூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்ரான் கான் மக்களை தவறாக […]
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் தென்கொரியா படைகளுடன் சேர்ந்து வருடம் தோறும் கொரிய எல்லை பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பையும் தாண்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு […]
சீனப் பிரதமர் லீ கெகியாங்க் விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருக்கின்றார். இந்த பயணத்தின் போது உயர்மட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவில் முதலீடுகள் பற்றியும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்திற்கான திட்டங்கள் பற்றியும் அவர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரிகின்றது. இந்த நிலையில் ஷெபாஸ் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றதற்கு […]
கடந்த 2020 ஆம் வருடம் மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த மரியானா வரேலா வெற்றி பெற்றுள்ளார். இவரும் போட்டோ ரிகோ நாட்டின் அழகி பாபியோலா வேலன்டினும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். அதன் பின் தன் பாலின ஈர்ப்பாளராக இருவரும் ஒன்றாகவே வாழ தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களது காதலை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் 28ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக இவர்கள் […]
வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதனை கண்டுகொள்ளாமல் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ந்து வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமான படைகள் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு விமானப்படைகளையும் […]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே வட மேற்கே இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக […]
ஸ்காட்லாந்தில் வீட்டு கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் மிராண்டா டிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2019 ஆம் வருடம் தனது பெற்றோரிடம் இருந்து ஒரு வீட்டை வாங்கி அதை இரண்டு வருடங்களாக புதுப்பித்து இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் அந்த வீட்டின் முன் பக்க கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்துள்ளார். இதன்பின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டர்களிடையே அந்த […]
பிலிப்பைன்ஸ் தாக்கிய புயலால் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை கடந்த வாரம் நால்கே என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை அதிலும் குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியுள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த புயலைத் […]
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். அந்த வரிசையில் உயரதிகாரிகள் நீக்கம் உள்ளிட்ட பல இன்னொரு அதிரடியையும் மஸ்க் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட (verified) கணக்கு வைத்திருப்பவர்களிடம் இனி மாதம் $20 (இந்திய மதிப்பில் 1600) ட்விட்டர் நிர்வாகம் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ் பெற்றவர்கள் உள்ளிட்டவர்களின் டுவிட்டர் பக்கம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் விதமாக ப்ளூ டிக் […]
ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி […]
பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 72 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது மலைகளின் இருபுறமும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதினால் வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. தொடர் கனமழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. […]
இத்தாலியில் மிலனின் புறநகரில் உள்ள அசோகோவில் உள்ள ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் அர்சனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட ஐந்து பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 46 வயதான தாக்குதல் நடத்திய அந்த நபர் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு பின் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஸ்பெயின் கால்பந்து விரர் […]
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளை அடுத்தடுத்து அதிரடி பணி நீக்கம் செய்துள்ளார். உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் ட்விட்டரை தான் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை இல்லை நானே வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கை கழுவும் தொட்டியை தூக்கிக் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அதை மேடையிலேயே ஜோபைடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் 79 வயதான ஜோ பைடன் ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்துள்ளார். அதாவது ரிஷி என்பதை ரிஷித் எனவும் சுனக் என்பதை சினூக் ஹெலிகாப்டரை நினைவுபடுத்தும் விதமாக சனூக் எனவும் மாற்றி […]
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நெருப்புவளையம் என அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகர்கின்ற இடத்தில் அமைந்து இருப்பதினால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லூசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகான் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு லூசோன் […]
மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஸஹ்ரா என்ற பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் விடிய விடிய தேடியும் அவர் கிடைக்கவில்லை இந்த […]
உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்யப்படைகள் அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வதை புதின் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் […]
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் இசை நிகழ்ச்சி கலந்து கொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று குண்டுகள் வந்து விழுந்து வெடித்ததாக தெரிவிக்கின்றனர் இதனால் கூட்டத்தினர் அலறி அடித்தபடி ஓட்டம் […]
நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உலகின் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா அழியாத இடத்தை பிடித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றால் சர்வதேச பொருளாதார ஆட்டம் கண்டது ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் வளர்ச்சி கண்ட நாடுகளான […]
இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டிருக்கின்ற அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தீபாவளி […]
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவில் அரசர் எட்வர்டு முனைப்பகுதியில் இருந்து இன்று காலை 5.43 மணி அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ட்விட்டரில் இன்று கூறியுள்ளது. மேலும் இந்த தீவில் கோடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் […]
கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்ப முடியாமலும்,பெற முடியாமலும் whatsapp பயனாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளிலும் whatsapp சேவை முடங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் whatsapp சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே whatsapp சேவை விரைவில் […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 150 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவில் ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் ராணுவத்தை குறிவைத்து அல்சபாத் பயங்கரவாத அமைப்பு அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த நாட்டின் கிஸ்மையு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த ஐந்தாம் தேதி லீஸ் டிரஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து லீஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14ஆம் தேதி நீக்கப்பட்டு ஜெரமி ஹண்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்னால் உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா கடந்த […]
சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவரே அதிபராக இருப்பார். இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி தலைநகர் பிஜிங்கில் தொடங்கியுள்ளது. ஒரு வார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடைபெற்ற […]
கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதித்திருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த சூழலில் உலக அளவில் சுற்றுலாவிற்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வேர்ல்டு டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை அது அதிலும் குறிப்பாக 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் […]
பாகிஸ்தானில் 16 சதவிகிதம் மக்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிவாரண முகாம்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது தவிர தோல் நோய், மலேரியா பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட […]
நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் […]
இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லீஸ் டிரஸ் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதனை கடன் வாங்கி சமாளித்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பிரதமரின் சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கின்ற நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து பிரதமர் லிஸ்ட் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் […]
சீனாவில் தற்போது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் அங்கு போராட்டம் என்பதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது சீன மக்கள் எப்போதும் இல்லாத விதமாக வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்த நாட்டின் தலைநகர் பீஜிங்கில் தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடைப்பிடித்து வரும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோவில் மற்றும் சர்வாதிகார […]
உக்ரைன ரஷ்யா இடையேயான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் எரிசக்தி தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கின்ற நிலையில் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையில்லாமல் எறிந்து கொண்டிருக்கும் விளக்குகளை தன்னார்வல இளைஞர்கள் சிலர் ஸ்பைடர் மேன்களை போல சுவற்றில் சகசரவென ஏரி அனைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றார்கள். […]
இந்தியாவில் 2005 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றனர். ஆனாலும் உலகிலேயே அதிக ஏழை மக்களை கொண்ட முதல் நாடாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐநா நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓபிஎஸ்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 2005 […]
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் […]
உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மீது ராணுவ விமான மோதி விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எய்ஸ்க் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து கட்டிடத்தில் முதல் தளத்திலிருந்து ஒன்பதாவது தளம் வரை தீப்பற்றி உள்ளது. இந்த விபத்தில் அனைத்து […]
நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியுள்ளது மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் […]
தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டிருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை ஏவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதனை […]
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடகே 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
நாளை தொடங்க இருக்கும் இருபதாவது கம்யூனிஸ்ட் தேசிய கட்சியின் மாநாட்டில் தொடங்கும் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் சட்ட திருத்தத்தை ஜின்பிங் கொண்டு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றார்கள் இதனால் நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக […]
பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் பிரச்சார குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு கடும் சவால் அளித்துவரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டி தீர்த்த ஜோபைடன் பாகிஸ்தான் பற்றியும் பேசி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பம்பாங்கா மாகாணத்தில் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு இளம்பெண் ஒருவர் அவர் நண்பருடன் சென்றுள்ளார். அதன்பின் அவர் வெளியே வந்த போது ஒரு கும்பலால் அவர் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண் இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கொண்ட வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்தி செல்லப்பட்டார் என போலீஸிடம் அவருடைய நண்பர் உடனடியாக தகவல் […]
நாட்டின் உயிர் மட்டத்தில் ஊழலை சட்டபூர்வமாகியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர்ஜாவேத் பசுவா பற்றி ட்வீட் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம் பி அசம்கான் சுவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டபட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெஹபாஸ் விடுவிக்கப்பட்டதை அடுத்து அசாம் கான் ட்விட்டரில் மிஸ்டர் பாட்ஷா உங்களுக்கு உங்களுடன் இருக்கும் சிலருக்கும் வாழ்த்துக்கள் ஏனென்றால் உங்கள் திட்டம் உண்மையில் வேலை […]
அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக மத்திய நிதி மந்தி நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்காக பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டரில் கூறியுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற […]