கழிவறை என்பது நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும். காலை எழுந்த உடன் கழிவறை சென்று விட்டு தான் மற்ற வேலைகளை ஆரம்பிப்போம். ஆனால் இந்தோனேஷியா நாட்டில் ஒரு வித்தியாசமான நடைமுறையை அந்த நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். என்னவென்றால் இந்தோனேஷியாவில் திருமணமான முதல் மூன்று நாட்கள் புதுமண தம்பதிகளுக்கு கழிவறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திடாங் பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத நடைமுறையை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று நாட்களில் கழிப்பறையை பயன்படுத்தினால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் […]
Category: உலகசெய்திகள்
இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில கூறி இருப்பதாவது. நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது. நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே […]
இலங்கை கடுமையான பொருளாதார நிலையை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 ரூபாயாக இருக்கிறது. மேலும் சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எங்கு பார்த்தாலும் வறுமை, பசி, பட்டினி என மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை […]
பில்கேட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்-க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொள்ள போகிறேன்” என்று அந்த […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது […]
ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரைவுபடுத்தும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரிவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்தி வாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மேலும் புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக […]
இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்கு ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே மகிந்த ராஜபக்சே வெளியேறினார். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போராட்டகாரர்கள்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மோதல் காரணமாக இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உள்பட இதுவரை 7 பேர் பலி பலியாகியுள்ளனர். போராட்டக் களத்தில் இருந்த 220க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
யூடியூப் ஆர்வலர் பெஞ்சமின் ரீச் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளி மையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் ரீச். இவர் யூடியூபில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கஜகஸ்தானில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன வெளி மையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்து இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த […]
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மிகவும் பயங்கரமான எல்லைகளில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையும் ஒன்று. எல்லைகளில் பலவிதமான போர்கள், சாகசங்கள் நடந்திருக்கிறது. இந்தநிலையில் டிசம்பர் 5 2011 அன்று இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டது. அத்துமீறி நுழைந்ததாக சிமியன் என்ற வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் தங்க வைக்கப்பட்டது. ஒரு விலங்காக பார்க்கவில்லை. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உளவாளியாக பார்த்ததால் செய்துள்ளனர். எல்லை […]
இம்ரான் கான் பாக்கிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அதில் அவர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்புகின்றேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவு கொள்கைக்காகவும் நமது நாட்டை பலியிட கூடாது. மேலும் […]
பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் இதயம் செயல் இழந்து விட்டதால் செயற்கை இதயத்தை பெட்டியில் சுமந்தவாறு உயிர் வாழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழிகளை இயற்கை அமைத்துக் கொடுக்கின்றது. பலர் தங்கள் வாழ்க்கையில் துன்பங்களை மட்டும் பெரிதாக எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் தற்கொலை இறுதியான தீர்வு அல்ல […]
இந்த உலகில் அழகான விஷயங்கள் எவ்வளவு உள்ளதோ அந்த அளவிற்கு அசிங்கமான விஷயங்களும் உள்ளன.நீங்கள் பார்க்கக் கூடிய விஷயம் உங்களுக்கு பிடித்து இருந்தால் அது உங்களது கண்ணுக்கு அழகாகத் தோன்றும், அதுவே பிடிக்கவில்லை என்றால் அசிங்கமாகத் தோன்றும். அதனைப்போலவே ஒருவரின் முகத்தை பார்த்தால் அவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்று நம்மால் எளிதாக சொல்ல முடியும். அப்படி சொல்வது அவரது வெளிப்புற தோற்றத்தை வைத்து தான். நீங்கள் அதிகமாக இருக்கிறார் என நினைக்கும் நபர் உங்கள் வாழ்க்கைக்கு […]
பாகிஸ்தான் நாட்டில் உள்ள 4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகி இருக்கிறது என அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்ற நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் இருக்கின்றது. பருவகால மாற்றம், வெள்ளம், வறட்சி போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐநா பிரதிநிதி ஒருவர் […]
இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும், எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக இதனை தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நம்மில் நிறைய பேருக்கு இவரைப் பற்றி முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் கால்பந்து உலகத்தில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவருடைய ஒரு வருட வருமானம் மட்டும் 700 கோடி. இப்படிப்பட்ட இவர் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தான் வாங்கிய அவார்டை கள் அனைத்தையும் தனது நண்பர் ஆல்பர்ட்- க்கு சமர்ப்பிப்பதாக சொல்லியுள்ளார். […]
பிரான்ஸ் நாட்டில் 14 வயதுடைய peyo என்ற குதிரையை ஒரு ஹாஸ்பிடலில் டாக்டர் போல் பயன்படுத்துகிறார்கள். அதாவது குதிரை பிறந்ததிலிருந்து மிகவும் சுறுசுறுப்பாகவும், மனிதர்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையது. இதன் காரணமாக peyo வின் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிரபல ஹாஸ்பிட்டலுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் குதிரையை அழைத்து செல்வார். இந்த குதிரை மருத்துவமனையில் இருக்கும் மன நோயாளிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மிகவும் அன்பாக பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். இந்த குதிரை ஒருநாள் […]
உலகிலேயே தனிமையான வீடு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். டிராபிக் ஜாம், ஒர்க்கு பிரஷர், டென்ஷன் என எதுவும் இல்லாமல் தனியாக இருக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு. கடலுக்கு நடுவே சிறிய தீவில் குட்டியாக வீடு கட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வீடு ரியல் எஸ்டேட் இணையதளமான Zillow தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கனடா எல்லைக்கும் அகாடியா தேசிய பூங்காவுக்கும் இடையே உள்ள டக் லெட்ஜஸ் தீவில்தான் இந்த வீடு […]
நம்மில் சிலருக்கு ஒரு எண்ணம் உள்ளது. அது என்னவென்றால் கருப்பாக இருப்பவர்களை காட்டிலும் வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள் என்று, இந்த ஒரு ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதும் நீடித்து வருகின்றது. சில நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக நாட்டிற்குள் சண்டையும் ஏற்பட்டு வருகின்றது. அப்படி இந்த உலகிலேயே மிகவும் கறுப்பான பெண்மணியை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜாக்கும் கெட் பேஜ் என்ற பெண் தான் […]
காரைத் திருடிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஜோஹல் ரத்தோர். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரேஞ்ச் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையில் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். மேலும் அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர். ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் […]
ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதலாவதாக ஜெர்மனி சென்றிருக்கின்றார்.தலைநகர் பெர்லினில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் பிரதமர் மோடி போய் சேர்ந்துள்ளர். இந்நிலையில் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக அந்த அதிகாலை […]
நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டது. இதில் ஒரு […]
எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை எதற்காக வாங்கினார் என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளார். இவர் 44 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளார். இவர் இந்த கம்பெனியை எதற்காக வாங்கியுள்ளார் என்பது குறித்த 2 காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ட்விட்டரில் ஒரு சிலருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் இருப்பதாகவும், இந்த சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் […]
பிரபல நாட்டில் கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அது பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சுவிட்சர்லாந்து நாட்டில் கார் ஓட்டுனர் உரிமம் பெரும் பயிற்சியில் 3 முறைக்கு மேல் தோல்வி அடைந்தால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அதன்பிறகு மனநல மருத்துவர் கார் ஓட்டுனர் உரிமம் பெறும் பயிற்சியில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூறுவார்கள். அதன்பிறகு மருத்துவர் தரும் மருந்துகளை முறையாக கடைபிடிக்க […]
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் சிலி நாட்டில் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் தென்பட்டதால் இதனை இந்தியாவில் காணமுடியவில்லை. சிலி நாட்டில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 4.08 மணி வரை நீடித்தது. மேலும் அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நிகழ்கின்றது. […]
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கின்ற நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இந்த நாட்டை சுற்றியும் சாட், சூடான், தெற்கு சூடான், காங்கோ, கேமரூன் போன்ற நாடுகள் இருக்கின்றன. இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆண்டுகளாக அரசிற்க்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் அரசுப்படையினருக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், அந்நாட்டின் பங்கஸ்சூவ் […]
ரஷ்யா நரகத்தின் கதவை திறந்தார்கள் என கூறப்படுகிறது. அது பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ரஷ்யா கடந்த 1960-ம் வருடம் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்ய வேண்டும் என எண்ணியது. இதற்காக 14 கிலோமீட்டர் அளவுக்கு சிபிரியா என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய குழியை தோண்டியுள்ளது. அதாவது ஒரு செல்போன் டவரில் இருந்து குதித்தால் கூட ஒரு சில நிமிடங்களில் நாம் தரையில் வந்து அடைந்து விடுவோம். ஆனால் ரஷ்யாவில் தோண்டப்பட்ட […]
டைட்டானிக் விபத்து குறித்து 14 வருடங்களுக்கு முன்பே ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து 14 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படி ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. அதாவது Margon Robertson என்பவர் கடந்த 1898-ம் ஆண்டு The wreck of the Titan என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்த புத்தகத்தில் டைட்டன் […]
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல தொழில்கள் செய்தாலும் மோட்டார் சைக்கிள் உருவாக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. உலகத்திலேயே நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஏராளமான பிசினஸ் செய்கிறார். ஆனால் அவர் எவ்வளவு தொழில்கள் செய்தாலும், இதுவரை மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் எலான் மஸ்க்கிடம் ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஒரு பதிலைக் கூறினார். அதாவது சிறுவயதிலிருந்தே எலான் மஸ்க்குக்கு மோட்டார் சைக்கிள் மீது […]
ஒரு வாலிபர் தனக்கு விருப்பமான பீட்சாவை திருமணம் செய்துள்ளார். இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ரைஸ் குக்கர் சாதம் மட்டும் தான் தருகிறது. அதைத் தவிர வேறு எதுவும் தரவில்லை எனக் கூறி விவாகரத்து செய்து கொண்டார். இந்த முட்டாள்தனமான செயலை பலரும் அறிந்திருப்பர். இதேப்போன்று ரஷ்யாவை சேர்ந்த 22 வயது வாலிபர் அவருடைய விருப்பமான பீட்சா கடையில் இருந்த ஒரு பீட்சாவை தன்னுடைய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் […]
உலகத்திலேயே மிக உயரமான மனிதன் தன்னுடைய கைகளினால் 2 உயிர்களை காப்பாற்றியுள்ளார். கடந்த 2006-ம் வருடம் உலகத்திலேயே மிக உயரமான மனிதன் என்று பவோர்சிஷன் என்பவர் அழைக்கப்பட்டார். இவர் தன்னுடைய உயரமான கைகளை பயன்படுத்தி 2 டால்பின்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு சீனாவில் உள்ள டால்பின் வளர்ப்பகத்தில் உள்ள 2 டால்பின்கள் பிளாஸ்டிக்கை முழுங்கியுள்ளது. இந்த 2 டால்பின்களின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக்குகளை […]
பெரும்பாலான மக்கள் பேருந்தில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது அசந்து தூங்கி விடுவார்கள். சிலர் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி இடத்தை பிடித்து தூங்கிவிடுவார்கள். இப்படி பலரும் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்து செல்லும்போது தன்னை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்படி தூங்குவதற்காகவே ஒரு பஸ் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை… ஹாங்காங் நாட்டில் தூக்கம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த டபுள் […]
ஒரு அழகான பெண் சைக்கோவாக மாறி தனது சொந்த தாயை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இசபெல்லா என்ற பெண் தன்னுடைய தாய் தந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளார். ஆனால் திடீரென ஒருநாள் இசபெல்லா வின் தாயும் தந்தையும் பயங்கரமாகச் சண்டை போட்டுள்ளனர். அதன்பிறகு சிறிது நாட்களில் இசபெல்லாவின் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து ஆன சிறிது நாட்களிலேயே […]
சவுதி அரேபியா இந்த நாடு இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனது. ஒன்று எண்ணெய் வள பொருளாதாரம், மற்றொன்று அங்கு நிலவும் மதரீதியிலான கட்டுப்பாடுகள். இவை இரண்டும் தற்போது பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. முதன்முதலாக 1938 ஆம் ஆண்டு சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முதல் அதிக அளவில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி காணப்பட்டது. தீவிரமாக வேரூன்றி தொடங்கிய வஹாபிய கோட்பாடு சமூக ரீதியாக பெரும்இறுக்கத்துக்குள் ஆழ்த்தியது. பெண்கள் பர்தா அணியாமல் […]
இந்திய முறைப்படி தயார் செய்த உணவை சுவைத்து பார்த்த ஆஸ்திரேலிய சிறுமியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு வகையான நில அமைப்புகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை காரணமாக இந்தியாவை துணைக்கண்டம் என்று அழைக்கின்றனர். இவை எல்லாம் தாண்டி பொதுவாக நாம் இந்தியர் என்று அடையாளப் படுத்தப்படுவது போல் நம்மிடையே நமது உணவு பழக்க வழக்கங்களும் பொதுவாக இருக்கிறது. இந்தியர்கள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள மக்கள் அனைவரும் […]
ஆஸ்திரேலியாவில் மதுபான கடை ஒன்றில் திடீரென கங்காரு நுழையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட விலங்கு கங்காரு. அவை ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். எனவே பொது இடங்களில் மக்கள் மத்தியில் கங்காருக்கள் வருகை புரிவது அங்கு இயல்பானதாகும். ஆனால், இது கொஞ்சம் புதிதானது. அதாவது கங்காரு மதுபானக் கடைக்கு வருகை புரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அழையா விருந்தாளியாக கங்காரு ஒன்று வருகை புரிந்ததுள்ளது. வாடிக்கையாளர் வரிசையில் […]
அமெரிக்காவிலுள்ள சிறிய நகரத்தின் மேயராக பெரிய கண்களையுடைய பூனை ஒன்று பதவி ஏறியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஹெல் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நிர்வாகம் 100 டாலர் பணம் செலுத்தி விட்டு அதன் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பெரிய கண்களுடனும், உடல் குறைபாடுகளுடனும் பிறந்த பூனை ஜிங்ஸ்ஸின் உரிமையாளர் ஹெல் நகர நிர்வாகத்திற்கு 100 டாலர் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து […]
ஜப்பானில் இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள குழந்தை ரோபோ ஒன்றை பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக உருவாக்கியுள்ளார்கள். ஜப்பானில் பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பிடியாராய்டு என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை ரோபோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரோபோ மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களிடமிருந்து வரும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது இதய செயலிழப்பு மற்றும் வலிப்பு […]
அமெரிக்காவிலுள்ள பிச்சைக்காரர் ஒருவர் விலை உயர்ந்த வைர மோதிரத்தை உரியவரிடம் திருப்பி தந்ததால் அவருக்கு உலகமெங்கும் பாராட்டும் நிதி உதவியும் குவிந்தது. அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த சாரா டார்லிங்என்பவர் ஒரு பிச்சைக்காரருக்கு தன் கைப்பையில் இருந்து பணத்தையும் பொருட்களையும் எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்கு அடுத்த நாள் தன் விரலில் இருந்த வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார். பிச்சையிட்ட போது அந்த மோதிரம் […]
ஓலா மின்சார ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில்உள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்க்கு காரணம் உலக நாடுகளில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்ததாக கூட இருக்கலாம். இந்நிலையில் இந்திய நாட்டில்மட்டும் 4இடங்களில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவங்களை தொடர்ந்து பரிசோதனை பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெற இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. […]
சுமார் 30,000 விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு மேல் சுற்றி வருவதால் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்புடைய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது கடந்த காலங்களில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பும் அவை விண்வெளியில் சுற்றி வருகின்றது. இந்த வின்வெளி குப்பைகள் தற்போது செயல்பாட்டிலிருந்து வரும் செயற்கைக் கோள்களுடன் மோதுவதற்கு 50% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். மேலும் இந்த குப்பைகள் பல வழிகளில் […]
ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்தாண்டில் உலக நாடுகளின் பாதுகாப்புத் துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு உலக நாடுகளின் பாதுகாப்பு துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பீட்டின்படி 162 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது குறித்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த […]
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக இருந்த 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் கொடி பொருந்திய RwaBee என்ற சரக்கு கப்பலில் 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளார்கள். அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவர்களை கடத்தி சென்று மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக வைத்துள்ளார்கள். இதனையடுத்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அவர்கள் தற்போது […]
பிரான்சின் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் வெடிபொருட்களை வீசியுள்ளார்கள். பிரான்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரான்ஸின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் 58.8 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். இதற்கு உலக தலைவர தங்களது வாழ்த்துக்களை அதிபர் இம்மானுவேலுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் […]
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் சுமையில் சிக்கி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச […]
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி உக்ரைனைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைகிறது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல இருக்கிறார். அதனைதொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். அதைத்தொடர்ந்து […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்த யோசனையை பிரதமர் […]
அமெரிக்காவில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாநிலத்தில் வேன் நெஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அதனை செய்த நபரை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். அந்த நபர் அப்பகுதியிலேயே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் […]
பாகிஸ்தானின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் மந்திரிகளை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் ஷெபாஷ் ஷெரீப் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இம்ரான்கான் ஆட்சியிலிருந்த மந்திரிகளின் மீது ஊழல் புகார்கள் உள்ளதால் அவர்களை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு […]
உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கவரப்படுத்தினார். இதுதொடர்பான செய்தி ஜப்பானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ […]
ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல இருக்கிறார். உக்ரைன் மீது ரஷியாவின் போர் தொடர்ந்து 59-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சிசெய்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன. இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல இருக்கிறார். மேலும் ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை […]