சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்திருக்கிறது. ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது. இந்தநிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. இதனையடுத்து இந்தமாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
Category: உலகசெய்திகள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஆவார். இவர் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு இருக்க மரியம் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றிற்காக தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்த வாரம் உம்ரா கடமையை […]
அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மரண வேதனையை அனுபவிக்கும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த ரேச்சல் மைரிக் (Rachel Myrick). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, அங்கிருந்த எட்டு […]
கோவிங்டனில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தவர் கெவின் பெர்லிங் (Kevin Berling). இவர் கடந்த 2019-ல் நடந்த தேவையற்ற பிறந்தநாள் விழா தனக்கு கவலையையும் பீதியையும் கொடுத்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். 29 வயதான அவர், 2018-ல் முதன்முதலில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, தனக்காக பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று அலுவலக மேலாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதாக அவர் பைஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார். பெர்லிங் கோரிக்கை விடுத்து இருந்தபோதிலும், […]
ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா இறப்புகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, நேற்று […]
ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மேலும் பொருளாதார தடைகளை விதித்தால் அவை எரிசக்தி வளங்களை பாதிக்கும் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து முக்கிய […]
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கிடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து இரு மாநிலத்தின் முதல் மந்திரிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அசாமின் முதல் மந்திரியான ஹிமந்த சர்மாவும், அருணாச்சல பிரதேசத்தின் முதல் மந்திரியான காண்டும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநிலங்களிலும் மாவட்ட அளவில் கமிட்டியை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமரான நவாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய அவர் நம் நாடு கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்க்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையிலான புதிய மந்திரி சபையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் […]
உக்ரைனுக்கு நான் செல்வேனா என்று எனக்கே தெரியாது என பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்வீர்களா என்று […]
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களுடன் இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து […]
ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஜெனரேட்டர்களை கொண்டு சேர்ப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்திருக்கிறது. மரியுபோலில் சுகாதார அமைப்புகள் மிகவும் மோசமாக கடுமையாகி பாதிப்புக்குள்ளாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் குறைந்தபட்சம் மின்னாற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஜெனரேட்டர் கள் உதவுகின்றன. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாக இருக்கும் அந்த பகுதிக்கு இப்போதைய […]
உக்ரைனின் இர்பின் நகரின் புதிய கல்லறையில் கொத்துக் கொத்தாக சடலங்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இரு தரப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பல பெண்கள், சிறுமிகள் ரஷ்யர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இர்பின் நகரில் உள்ள கல்லறையில் கொத்துக்கொத்தாக சடலங்கள் அறிகுறிகள் புதைக்கப்பட்டு […]
இலங்கை கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உணவு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் எரி பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வியட்னாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வரும் 30ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது. வியட்நாமில் Bach long என அழைக்கப்படும் இந்தப் பாலம் 2,73.5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற மறு ஒருங்கிணைப்பு தினத்தின்போது இந்த பாலம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் கின்னஸ் அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள […]
பாகிஸ்தானை புகலிடமாக கொண்டு, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்பட்டு வருகிகின்றது. அவற்றில் தெக்ரி-இ-தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் முக்கியமானவையாகும். இந்த அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. மேலும் சில தினங்களுக்கு முன், ஆப்கான் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் […]
பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பில்கிஸ் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். அதன் பின் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு […]
எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உளவு செயற்கைக் கோள் ஒன்றை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் உள்ளது. அங்கு வணிக ரீதியிலும், தங்களது சொந்த ஆராய்ச்சிக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. அதன்படி பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் அந்நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள வாண்டன்பெர்க் […]
ஷாங்காய் நகரில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுபடுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் அந்நாட்டின் 3 ஆவது விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மிக கடுமையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவ்வாறு போடப்பட்டிருக்கும் ஊரடங்கால் அந்நாட்டின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலை சீனா அந்நாட்டு ராணுவத்தின் 73 ஆவது […]
பல்கேரிய அரசு உக்ரைன் போர் விவகாரத்தால் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளது. உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. அதன்படி பல்கேரிய அரசு அதிரடியான தடை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதனை […]
இலங்கையில் அரசிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிடமாட்டோம் என அந்த நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக் கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை ராணுவம் பின்பற்ற வேண்டாம் என முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து […]
ரஷிய-உக்ரைன் படைகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 53வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போது குறித்த முக்கிய நிகழ்வுகள். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றன. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருக்கின்றன. மேலும் உக்ரைனின் […]
எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் வகையில் பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வரும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை […]
உக்ரைனின் மிக முக்கிய துறைமுகமான மரியுபோலை கைப்பற்றுவதற்காக பலவாரங்களாக கடுமையான தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் சனிக்கிழமையான (நேற்று) அதன் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைன் ராணுவ படைகளை துடைத்து எறிந்து விட்டதாக கூறியுள்ளது. இது பற்றி ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், அசோவ் கடலில் அமைந்திருக்கின்ற துறைமுகமான மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய ராணுவ படைகளை அகற்றிவிட்டதாகவும், சில வீரர்கள் மட்டும் அசோவ்ஸ்டல் உலோக ஆலையில் தஞ்சம் அடைந்து […]
ஷாங்காய் நகரிலுள்ள வீடுகளை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு அரசிடம் ஒப்படைக்கக் கோரி அந்நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 27,000 பேர் சீனாவிலுள்ள மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஷாங்காயிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவிலுள்ளார்கள். இந்நிலையில் ஷாங்காய் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது ஷாங்காயிலுள்ள வீடுகளை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு […]
உக்ரைனின் மரியு போல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனை குறித்த வீடியோ மரிய போல் நகர கவுன்சில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரியு போல் நகர சபையால் வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சிகள் நகரின் கிழக்கு குடியிருப்பு மாவட்டத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் அளிக்கப்பட்டு சிதைந்து கிடைப்பதை காட்டுகிறது. மேலும் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியு போல் ரஷ்யாவின் போரின் தொடக்கத்தில் இருந்து அதிக […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 37, 500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடைய உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் அறிவித்துள்ளது. இந்த 37,500 தன் பெட்ரோல் அடுத்த 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக இலங்கைக்கு […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கூடப்பட்ட சட்ட சபைக்கு வருகை புரிந்த துணை சபாநாயகர் மீது பிடிஐ கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இம்ரான்கானின கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் தங்களது ஆதரவை பி.எம்.எல். கியூ கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். ஆகையினால் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான உஸ்மான் புஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]
மூச்சு மாதிரியை வைத்து கொரோனாவை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், டாக்டர்கள் அறை போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம். 3 நிமிடங்களில் இது முடிவை தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர் மேற்பார்வையில் […]
ரஷ்யாவின் பாதுகாப்பு படையில் முக்கிய அங்கம் வகித்து வந்த மோஸ்கோ போர் கப்பல் கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள் வீரர்களுடன் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சூறாவளி காற்றினால் சேதமடைந்து மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு வெளியுறவு துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு துறையின் பலத்தை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும் கப்பல் உக்ரைன் மீதான படையெடுப்பில் கடற்படை தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளது. அதேவேளையில் தங்களது ஏவுகணை போர்க்கப்பலை தாக்கியதாக கிவ்விலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் […]
ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் தன் மகள் காரில் சிக்கியது கூட தெரியாமல் தாயொருவர் வேகமாக கார் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த பெண் டெல் பல்மர் (வயது 58). இவர் கணவர் வாரன் பல்மர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கெலி பெனித் (27). மதுக்குடிக்கும் பழக்கமுடைய டெல் பல்மரை அவரது மகள்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மே 2 ம் தேதி மாலை மதுபான […]
ரஷிய படைகள் எதற்காக பொதுமக்களை கொல்கின்றனர் என கவலையுடன் உக்ரைனியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே இருதரப்பிலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகள் தாக்குதலில் உக்ரைனிய மரியு போல் நகரம் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும் வெடிகுண்டுகளுக்கு இறையாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 10 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து இருக்கிறது. இதில் […]
உக்ரைன் போர் சம்மந்தமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, வரும் நாட்களில் ரஷ்ய உக்ரைன் தலைவர்களுடன் எங்கள் அதிபர் […]
அமெரிக்க விமானத்தில் நடுவானில் கதவை திறக்க முயன்ற பெண் பயணிக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டல்லாஸ் நகரில் இருந்து சார்லட் நோக்கி விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி பறந்து சென்றுள்ளது. நடுவானில் மிக உயரத்திற்கு விமானம் சென்றபோது, பெண் பயணி ஒருவர் எழுந்து சென்றிருக்கிறார். இதில், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் அவர் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தூக்கி விட விமான ஊழியர் ஒருவர் உதவி […]
நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிர்மல் சிங் என்ற 72 வயதான சிக்கிய நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது அதே பகுதியை சேர்ந்த மீண்டும் இரண்டு சீக்கியர்கள் நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து சில பொருட்களை திருடிச் […]
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 வார […]
அமெரிக்காவில் வைத்து போயிங் மற்றும் ரேதியான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சில முக்கிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதாவது அவர் வாஷிங்டன் […]
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு தேர்வானார்.
பிரான்ஸ் பிரதிநிதிகள் உக்ரைன் வந்தடைந்ததை உக்ரைனுக்கான பிரான்ஸ் தூதர் Etienne de Poncins தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கிவ்வைச் சுற்றி நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையில் உக்ரேனிய அதிகாரிகளுக்கு உதவ லிவிவ் வந்தள்ள பிரான்ஸ் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் gendarmes குழுவை வரவேற்பதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் gendarmes என்பது பிரான்சில் ஆயுதப்படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் பொலிஸ் படையாகும். இந்நிலையில் உக்ரைனுக்கு இதுபோன்ற உதவியளிக்கும் முதல் நாடு பிரான்ஸ் என குறிப்பிட்ட Etienne […]
பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம்முடிவடையவுள்ளது. இதனையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அந்த வகையில் புதிய அதிபரை […]
பாகிஸ்தானின் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன் க்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் […]
நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகின்ற நிலையில் நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நோட்டா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டா அமைப்பை வலுவடைய செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான்கானை பிரதமர் பதவியிலிருந்து […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடுமையான கொரோனா பரவலின் காரணமாக அவரது இறுதி சடங்கிற்க்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
4 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வகைக் கொரோனா பரவி வரும் நிலையில் அத்தொற்று முடிவுக்கு வருவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்று உருமாறி அனைத்து பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் […]
அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர். நேற்று […]
இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் பிரதமர் இம்ரான்கான் அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்துள்ளார். இதனையடுத்து […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இந்தியர்கள் சுயமரியாதைக் கொண்டவர்கள் என புகழ்ந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்துள்ளார். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து […]
உக்ரைன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 43 வது நாளாக நடத்தி வருகிறது. தலைநகராகிய கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போய் உள்ளது. இருப்பினும் ரஷ்யாவின் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்த படி இருக்கிறது. உக்ரைனும் கடுமையாக எதிர்ப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது.மேலும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு தடை இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் சபாநாயகரின் உத்தரவை அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் கூறியுள்ளது.