தென் அமெரிக்காவில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தென் அமெரிக்க நாட்டில் பெரு என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த நகரத்தில் அமைந்துள்ள காஜமாரகா மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்பு பணியினர் மீட்டு வருகின்றனர். இதனை அடுத்து […]
Category: உலகசெய்திகள்
வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபட்டுள்ளது. வட கொரியா நாட்டில் இருந்து செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையானது முற்றிலுமாக அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு இதற்கு முன் சோதித்து பார்த்திடாத வகையில் தனது இலக்கை சரியாக தாக்கி அழிக்கும் Hwasongpho-17 வகை ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் என்ற விமான நிலையத்திலிருந்து செலுத்தியுள்ளது. […]
கண்ணாடியால் கட்டப்பட்டுள்ள வீட்டின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டன் நாட்டில் ரிச்மாண்ட் பகுதியில் ஒரு வீடு கண்ணாடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளன. இந்த வீடு 2015 ஆம் ஆண்டு வரை சாதாரணமாகத்தான் இருந்ததுள்ளது. பின்பு கட்டிடக்கலை நிபுணர் ஒருவரால் கண்ணாடியை வைத்து சிறு துளை கூட தெரியாதபடி அழகாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டது. மேலும் இந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வீட்டிற்குள் இருந்த படி பார்க்க முடியும். இந்த கண்ணாடி வீடு காண்போரை […]
இங்கிலாந்தில் வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை மக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் வசந்தகாலம் தொடங்கியதன் எதிரொலியாக மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலையும் நிலவி வருகிறது. கடந்த மாதம் வரை பனிப்பொழிவு கொட்டித் தீர்த்து கடும் குளிர் நிலவி வந்துள்ள, சூழ்நிலையில் தற்போது வசந்த காலம் தொடங்கி 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்ப நிலை காணப்படுகிறது. இந்த சீதோஷ்ணம் பொதுமக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிதமான வெப்பத்தில் மத்தியில் லண்டன் […]
உக்ரைன் போரை அடுத்து மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடியாக ரஷ்யா தனது வான் பரப்பு வழியை செல்ல ஐரோப்பிய நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்றவற்றின் விமானங்களுக்கும் தடை விதித்திருக்கிறது. இதனால் லண்டன், ஹெல்சிங்கி, ப்ராங்க்பர்ட் நகரங்களில் இருந்து டோக்கியோ, சியால் நகரங்களுக்கு விமானங்கள் ரஷ்யாவை சுற்றி செல்கிறது. டோக்கியோவிலிருந்து ரஷ்யா வழியே லண்டனுக்கு செல்வதைவிட வட பசுபிக், அலாஸ்கா, கனடா தீவு, கிரீன்லாந்து வழியாக செல்ல கூடுதலாக இரண்டரை மணி நேரம் ஆகிறது. சுற்றுப் […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு […]
நோட்டோ அமைப்பு உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் 8 படை குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேனின் அண்டை நாடுகளில் கூடுதல் ராணுவப் படைகள் கொண்ட குழுக்களை நிறுத்த நோட்டோ அமைப்பு முடிவெடுத்துள்ளது. இது குறித்து நோட்டோ அமைப்பின் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூரியாதவது ” பால்டிக்கடலில் தொடங்கி கருங்கடல் வரை 8 படை குழுக்களை நிறுத்த வேண்டும் உக்ரைனின் அண்டை நாடுகளில் நிறுத்த உள்ளோம். இதனைத்தொடர்ந்து பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா போன்ற ஐரோப்பிய […]
உக்ரைன் போரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர்ஒக்சனா பவுலினா. இவர் ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி இன்சைடரில் பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை கீவ் நகரில் போடியில் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் இருவர் […]
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் போன்றோர் இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் […]
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்கள சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர் ரஷ்யாவிற்கு சீனா […]
காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 இடங்களை இந்தியா நகரங்கள் பெற்றுள்ளது. IQAir என்ற நிறுவனம் உலகில் காற்று மாசடைந்து நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி என்ற நகரமும் இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தும் உள்ளது. மேலும் நான்காவது இடத்தை பிடித்த தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்த நகரங்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து மிகவும் காற்று மாசடைந்த நகரங்களில் 63-க்கும் மேற்பட்டவை […]
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நோட்டா அமைப்புகளின் அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நோட்டா அமைப்பின் அவசர உச்சிமாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் அவர் […]
கார்க்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் அங்கு 1,143 கட்டிடங்களை அளித்துள்ளதாக அம்மாநில மேயர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து 25 ஆவது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகிறது. அதே போல் உக்ரைன் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான […]
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலிலிருந்து மக்கள் வெளியேறி உதவியை பாலம் தரைமட்டமாக்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றனர். இந்த நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. மேலும் இங்கு பொதுமக்கள் வெளியேற உதவும் முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டு வீசி அளித்திருக்கின்றனர். இந்த பாலம் தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய உதவியது. மேலும் இந்த பாலம் அங்கு உள்ள டெஸ்னா ஆற்றை கடந்து செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன் இணைகிறது. […]
பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் தனது குழுவினர், இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாராகுவேவுக்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரை இரக்கப்பட்டு இருந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் மின்னல் தாக்கிய காட்சிகளை வெளியிட்டு உள்ளார். அதில் எங்கள் […]
தைவான் நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தைவான் நாட்டில் நேற்று திடீரென 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இது கடற்கரை நகரங்களில் சராசரி 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சீனாவிலுள்ள புஜியன் மாகாணத்திலும் உணரப்பட்டது. இதனால் […]
வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 மாகாணங்களில் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதும் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு இருந்தது. […]
உக்ரேன் நாட்டை சேர்ந்த புதுப்பெண் தன் கணவனை பிரிந்து வேறு நாட்டிற்கு அகதியாக செல்லும் அவலம் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த 26 வயதுடைய நசர் போரோ என்பவர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் உக்ரைனை சேர்ந்த 21 வயதுடைய தஷா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரின் போது, நசர் அமெரிக்காவில் இருக்க தஷா உக்ரேனில் இருந்து வேறு நாட்டிற்கு […]
விமானம் விபத்து ஏற்பட்ட இடத்தில் காட்டு தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்- க்கு சொந்தமானது போயிங் 737 ரக விமானம். இந்த விமானம் நேற்று குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு புறப்பட்டது. இதில் 133 பேர் பயணித்த்துள்ளனர். இந்த விமானமானது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தின் போது விமானம் […]
சீனாவில் கொரோனா தொற்று காரணமாக டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அங்கு இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் முடிந்தவரை மக்கள் […]
உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார். ரஷ்யாவைச் சேர்ந்தவர் டிமிட்ரி முரடேவ்(60). இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். நோவாயா காஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நோபல் பரிசு தொகையினை அவர் மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார். […]
கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனவர்கள் பலியாகியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் வடக்கு தீவில் கைதயா நகருக்கு அருகிலுள்ள கடலில் 10 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு புயல் காற்று வீசியதால் தன்நிலை தடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இந்த சம்பவத்தை அறிந்த கடலோர காவல் படையினர் மீட்புப் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியும் […]
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவு ரஷ்யா ராணுவம் வணிக வளாகத்தின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிவ்வில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் போரில் நேற்று இரவு ரஷ்ய இராணுவம் […]
பெண் ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் இருந்த 8 சென்டிமீட்டர் கண்ணாடி டம்ளரை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் துனிசியாவை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருக்கு தனது சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக எண்ணி டாக்டரை அணுகி உள்ளார். அவரின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுநீர்ப்பை கல்லால் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணின் உடலை ஸ்கேன் செய்தபோது 8 சென்டிமீட்டர் அளவிலுள்ள கண்ணாடி டம்ளர் உள்ளே இருப்பது தெரியவந்தது. இந்த பெண் […]
கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில் என்ற இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை அணிவகுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் அணிவகுப்பு திருவிழா நேற்று காலை நடைப்பெற்றது. இதில் சுமார் 150 – க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் ஒரு கார் வேகமாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் மீது மோதியது. […]
வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது. உலக நாடுகளின் தடைகளை மீறி வடகொரியா ராணுவம் எதிரி நாட்டின் இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி சோதனையிட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரிய ராணுவம் ஏராளமான கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வந்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தெற்கு பியோங்கன் மாகாணத்தில் வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை […]
உக்ரைன் நாட்டிடை சேர்த்த 2 வயது மோப்பநாய் 90க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் 90-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் ரஷ்ய இராணுவத்தால் உக்ரைன் நாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாக் ரசல் என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்று தன்னுடைய மோப்ப சக்தியால் உக்ரைன் நாட்டில் புதைக்கப்பட்ட அனைத்து கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்துள்ளது. இந்த மோப்ப நாயின் பெயர் பேட்ரன். மேலும் இதன் வயது 2 ஆகும். […]
அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது, அமெரிக்காவும் ஐரோப்பியாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா கடும் நெருக்கடியில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு இடையே ரஷ்யா தள்ளுபடி விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்து உள்ளது. ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிற்கு அதிருப்தியே ஏற்படுத்தியது. […]
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும், இறக்குமதி செய்யவும் அந்நாட்டு […]
பெட்ரோல் பங்க்கில் கார் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டில் சியாரா என்ற பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் ஃபோக்ஸ்வேகன் கார் கேஸ் நிரப்புவதற்காக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த காருக்கு பெட்ரோல் பங்க்கில் உள்ள ஊழியர் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் திடீரென்று வெடித்து சின்னாபின்னமாக சிதறியது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநரும் பெட்ரோல் பங்க் ஊழியரும் […]
மரிய போல் நகரில் ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான் தாக்குதளுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சூழலில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷ்யாவின் ரோஸ் டோவ் பகுதியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதனை “கலீஜ் டைம்ஸ்” நாளிதழ் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்க்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது […]
2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. இதில் 40 நாடுகளின் அழகிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பியலவுஸ்கா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இவர் 2021 ஆம் ஆண்டில் உலக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் உலக அழகிப் போட்டி […]
ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 22 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு கிடைக்காத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் […]
ஈரான் கடற்கரையில் 30 பேர் பயணித்த ஐக்கிய அரபு அமீரக சரக்கு கப்பல் ஒன்று திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அஸ்ஸலுயே துறைமுகத்திலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் அந்த கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஈரான் வானிலை மையம், பாரசீக வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. எனவே கப்பல் மூழ்கியதற்கு இந்த […]
ஸ்புட்னிக் வி தடுப்பூசி மீதான மதிப்பீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. அதில் ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரானா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் பின் ரஷ்யா உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் […]
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என ஐநா உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த விவாத கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியினை ரஷ்யா நெருங்கியுள்ள நிலையில், ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாற்றி உக்ரைன் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறது.
கனடா அண்டாரியோ மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனடா அண்டாரியோ மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா கூறியுள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய மாணவர்கள் சென்ற வேன் முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் […]
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இன்று காலை 9 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவானதாக நில அதிர்வு காண தேசிய மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் டிட்லிபூர் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் சுமார் பத்து […]
வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறிய கூகுள் நிறுவனம் உக்ரைன் அரசுடன் இணைந்து புதிய சேவையை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 18 வது நாளாக நீடித்திருக்கிறது. ரஷ்யா உக்ரேன் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் உக்ரைனுக்கு உதவும் வகையில் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் படியான அப்டேட் ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. இதுக்குறித்து கூகுள் நிறுவனம் […]
உக்ரேனின் துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள மசூதி ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் […]