கேரள மாநிலத்தில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து ஷோர்னூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அதாவது ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் இரவு 10.30 மணி அளவில் அந்த சரக்கு ரயிலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகன்கள் தடம் புரண்டது. இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு ரயில் நிலையங்களிலும் சில ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ரயில் சேவைகளில் […]
Category: கேரளா மாநிலம்
கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில் இருந்து […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது. இந்த மழையால் கேரளாவில் 10- கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு […]
கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள எரூர் கிராமத்தில் ஷாஜி பீட்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாயமானதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மாயமானதாக எல்லோரும் நம்பினர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் […]
கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் […]
மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 வீடுகளில் தங்கி இருந்த 34 குடும்பத்தைச் சார்ந்த 82 பேர்களில் பலி 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தேடலின் போது குவி […]
கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடகரை என்ற பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் ஸ்கூட்டரின் பின் அவர்களது வளர்ப்பு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த நாய் கீழே விழுந்துள்ளது. மேலும் அதனை இழுத்து சென்று கொண்டே சென்றதால் உடல் முழுக்க காயமடைந்து நாயின் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட […]
கேரளாவில் பெண் வங்கி மேலாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தோக்கிலங்காடி கனரா வங்கியில் ஸ்வப்னா என்ற 38 வயது பெண் கிளை மேலாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா திடீரென்று நேற்று முன்தினம் வங்கியிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். அப்போது வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் காலை 9 மணியளவில் பணிக்கு வந்துள்ளார். அங்கு ஸ்வப்னா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்துபோனார். இதனைத்தொடர்ந்து […]
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேசை சுங்க சட்டம் 108 படி கேரள உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முந்தைய தூதரகம் மற்றும் சட்ட விரோத நாணய […]
திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளாடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சூர்யா வயது (14) அக்ஷய கிருஷ்ணா வயது (14), இவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை சூர்யா ,அக்ஷய கிருஷ்ணா ஆகிய இருவரும் தங்களின் நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு, வில்லியனூரில் […]
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் […]
திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர் ஜாஹீர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணத்தால் சொந்த ஊர் திரும்பிய ஜாகிர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இவர் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன் அதிக கோபம் கொண்ட […]
கேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் நெஹ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நெஹ்யா தன் பிறந்தநாளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் நண்பர்களுடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். அதன் பின்பு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது நெஹ்யா வழக்கமாக காலையில் ஏழு மணியளவில் […]
ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால் தொடங்கப்பட்ட நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, தனது நிறுவன பணியாளர்களுக்கு 700 கோடி மதிப்புள்ள […]
இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் […]
28 வயது கணவர் தனது 51 வயது மனைவியைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் கோர கோணம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஷஹாகுமாரி மற்றும் அருண். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால் ஷஹாகுமாரிக்கு 51 வயது மற்றும் அருணுக்கு 28 வயது என்று இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் […]
காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக அனிஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அனிஷ் சரமாரியாக […]
காவல் துறையினரால் மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதர் ஆண்ட்ரே மாரிஸ் ஹில் ( 47). இவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு வீட்டின் கேரேஜில் இருந்துள்ளார். அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்தின் போது அங்கு வந்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் மாரிஸை சுட்டுக் கொன்றுள்ளார். இவரை சுட்டுக்கொன்ற காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காட்சியில் காவல்துறையினர் வீட்டிலிருந்து வெளியே வரும்படி மாரிஸை எச்சரிக்கின்றனர். உடனே மாரிஸ் தன் செல்போனை […]
கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது மதபோதகர்ருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவை நேரில் கண்டதாக கேரளா மாநிலம் கோட்டயத்தில் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்பவர் 28 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மதபோதகர் தாமஸ்க்கும் இரண்டாம் குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு […]
கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு […]
கேரள மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். காடுகளின் அழிவு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்காங்கே காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மிகப்பெரிய பேரிடர் வருங்காலத்தில் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து பல நாடுகள் மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர். இந்தியாவிலும், பல பகுதிகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் பல, மரங்களை வளர்க்க ஊக்குவிக்கும் விதமாக, தனி காடுகளை வளர்த்து நிர்வாகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலம் […]
மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் கேரள மாநிலத்தில் இருக்கும் மலப்புரத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்த போது நான்கு பேரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு […]