கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளையும் ஆகாது என நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஒருவித தயக்கம் நிலவி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து மாரடைப்பிற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என […]
Category: தடுப்பு மருந்து
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில தினங்களில் அந்த பெண்ணின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷியில்டு மற்றும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்ட பின்னரும் பலருக்கு கிருமி தொற்று ஏற்படுவதாக பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி கோவக்சின் தடுப்பூசியின் முதல் […]
அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் மெக்குவாரி பகுதியில் உள்ள 48 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகா மருந்து கடந்த 7ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே அந்த பெண்ணுக்கு அரிய வகையான ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை […]
ரத்தம் உறைதல் ஏற்படும் என அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு பல நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 மருந்துகளுக்கு பல நாடுகளில் தற்காலிக தடை விதித்து வருகின்றனர். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலருக்கும் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக அந்த நாடுகளின் […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர புதுச்சேரி முழுவதும் உணவக ஊழியர்கள், ஆட்டோ, டெம்போ, பேருந்து தொழிலாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி கடந்த 4 […]
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஸ்புட்னிக்-வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவோவாக்ஸ், இஞ்சாஸ்மல் உள்ளிட்ட தடுப்பூசிகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர […]
கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வரும் சென்னை மாநகராட்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி வருகிறது. சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் […]
நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 85 தினங்களே ஆனதால் குறைந்த தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பு செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயது மேற்பட்ட இணை பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், […]
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம் உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என […]
சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான சூரிச் மாகாணத்தில் தடுப்பூசி திட்டம் குறித்து மாகாண அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனக்கூறிய நிலையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]
இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு திருட முயன்றுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்களுக்கு போடும் பணி நடந்து வருகிறது. இதில் சீனா மற்றும் இந்தியா அதிக அளவு தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. குறிப்பாக 60 சதவீத […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]
உலக நாடுகள் அனைத்திற்கும் சமமாக தடுப்பு மருந்து கிடைக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கோவாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உருவாக்கியுள்ளது கோவாக்ஸ்(COVAX) என்பது கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு சமமாக பகிர்ந்து அளிப்பது ஆகும். இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆகும். இந்தத் திட்டத்தை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள்(UNICEF), உலக வங்கி(WORLD BANK) போன்றவைகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு(WHO) மற்றும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான கூட்டணி(GAVI) ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை […]
நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரனோ வைரஸ் அண்மையில் இந்தியாவிற்கும் பரவியது. அவ்வரிசையில் தென்னாப்பிரிக்கா , பிரேசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரேசில், தென்னாபிரிக்கா வகை […]
உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வழியே ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார் . அப்போது பேசுய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றனர் என்றும், இதுவரை ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். உலகின் மருந்தகம் என்று சுட்டிக் காட்டப்படும் இந்தியா, உலகின் கொரோனா தடுப்பூசி […]
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]
தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த தடுப்பூசி அமெரிக்காவின் சைபர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு சில […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது உயிரைக் கொல்லும் கொடிய நோயான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் தடுப்பூசி தயாரிக்கப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் உள்ள பிரேசில் நாடு, பல நாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பாரத் […]
இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி எலிசபெத் மற்றும் அவரின் கணவர் பிலிப் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .இவரின் மூத்த மகனும்,வாரிசுமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது பற்றி இங்கிலாந்து அரசி கூறுவது என்னவென்றால்”நான் […]
மாலத்தீவு, நேபாளம் உட்பட 6 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில் கொரானா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள் நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து மேலும் பல நாடுகளுக்கு கொரானா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் நார்வே நாட்டிலும் மக்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 23 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் 13 பேருக்கு பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தொற்றுக்கான தடுப்பு மருந்து போடப்பட்டதில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இன்று விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்தது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கோவில் சில்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு விமானம் மூலம் இன்று வந்தடைந்தது.விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசிகளை பல்வேறு பகுதியில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 5 மில்லி சிரிஞ்சிகள் தமிழ்நாட்டிற்கு 35 லட்சம் சிரிஞ்சிகள் அனுப்பப்பட்டுள்ளது.முதற்கட்டமாக […]
ஜனவரி 16ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி திங்களன்று சீரம் நிறுவனத்திற்கு மருந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஜனவரி 16 ஆம் தேதி […]
சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை […]
பெண் சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகளும் உடல்நல கோளாறுகளும் ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் போர்ட்டோ நகர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றி வந்தவர் தான் சோனியா அக்விடோ. […]
பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து […]
ஏழை நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது. ஏழை நாடுகளும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பெறுவதை உலக நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். அதுதான் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என பெர்லினில் நடந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் சுகாதார உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் தெரிவித்தார். அனைத்து […]
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் […]
மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயண சாமி குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் மீனவர்களுக்காக கட்டப்பட்ட பணிமனையை முதலமைச்சர் திரு நாராயண சாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் […]
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக முதன் முதலில் அறிவித்த ரஷ்யா, அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்ட சோதனை நடைபெற்ற போது ரஷ்யாவில் தடுப்பூசியை செலுத்திய நபர்களுக்கு […]
தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]
சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார். உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா சீனாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டது. உலக நாடுகள் முழுவதிலும் தொற்று தீவிரமாக பரவி வருவதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தொற்றை […]
நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இன்னும் மூன்று மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி யார் யாருக்கு போடப்பட […]
அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது. எந்த நிறுவனம் முதலில் […]
கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலர் டாக்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உட்பட பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் […]
மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உருவாக்கும் தடுப்பூசிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் […]
உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மறுஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது. 2000 பேருக்கு புதன்கிழமையன்று இறுதிக்கட்ட பரிசோதனை தொடங்கவிருந்த நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த முதல் நாடாக ரஷ்யாவை செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தற்போது 28 தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளது. இவற்றில் 3வது மற்றும் […]
நாடு முழுவதும் 225 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் தடுப்புமருந்து முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ” கோவிஷீல்டு ” என்ற கொரோனா தடுப்பூசியை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் […]
கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிவேகமாக பரவி ஏராளமான உயிர் வெளியே எடுத்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. இதனிடையே கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து முடித்துவிட்டதாகவும், பரிசோதனையில் […]
தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் முதல் பட்டியலில் இருப்பது அமெரிக்கா. இங்கு நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 39 இலட்சத்தை கடந்து விட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,42,000 ஐ தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே மூடி மறைத்து பிற நாடுகளுக்கு பரவ விட்டுள்ளது. சீனா […]
கொரோனா உடையவர்களில் இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். முழு பரிசோதனை முடிந்து தடுப்பூசிகள் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை செய்தியாளர்களிடம் போட்டியிலே பரிந்துரைத்தார். இந்த […]
இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மாடர்னா தயார் செய்தகொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் சாத்தியக்கூறு பற்றிய செய்திகள் கடந்த புதனன்று வெளிவந்தது. அச்செய்தியை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிபுணர் பாசி கூறுகையில் “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கால அட்டவணை குறித்து நான் சரியாகவே உணருகிறேன். சீனா அதன் ஆய்வில் முதல் மருந்தை கண்டு […]
சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபட்டது என்ற தகவல் வைரலாகி வருகின்றது. உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது. உண்மை […]
கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக […]