அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம். இந்நிலையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக […]
Category: கொரோனா
காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுரை படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக […]
அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது. எந்த நிறுவனம் முதலில் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 8 கோடியே 89 […]
செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை நீடித்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று உலகில் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்நூலைப் பற்றிய பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதிலும், புதுப்புது சிகிச்சை முறைகளை கண்டறிவதிலும் விஞ்ஞானிகள் முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.அதன்படி செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 4 வாரங்கள் […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு 3 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் ஊகன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 லட்சத்து 90 ஆயிரத்து தாண்டியுள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிர் இழந்து விட்டனர். இரண்டாவது […]
பெலுடா எனப்படும் புதிய பரிசோதனை முறை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக பிசிஆர் எனப்படும் பரிசோதனை முறை நடைமுறையில் உள்ளது. இந்த பரிசோதனையில் ஒரு பரிசோதனைக்கு ரூபாய் 2400 வரை செலவாகும். மேலும் இப்பரிசோதனையில் கோரானோ முடிவினை தெரிந்துகொள்ள இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். தற்போது இந்திய […]
கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலர் டாக்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உட்பட பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் […]
தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப்க்கும், அவரது மனைவி மெலோணியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கடந்த ஒன்றாம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். […]
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 559 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் திங்கட்கிழமை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் மேளகாவி மற்றும் கலப்பூரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயின்று வந்த 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களை பெற்றோர் முற்றுகை இட்டனர். கொரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத தினசரி அதிகபட்ச எண்ணிக்கை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தினசரி நோய் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 நெருங்கி வருகிறது. இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை தலைமை செயலகம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை செயலகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி இன்றும் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 73 ஆயிரத்து 272 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக […]
காற்று மாசும்… கொரோனா வைரசும்…!!
காற்றில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்தால் covid-19 வைரஸின் வீரியம் அதிகரிக்கலாம் என அமெரிக்காவில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 3 ஆயிரத்து 122 மாவட்டங்களில் காற்று மாசு காரணிகளை கண்காணித்து ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய காற்று மாசு காரணிகளான நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓசான் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. குறுகிய மற்றும் நீண்ட கால காற்று மாசுபாட்டினால் மனித உடலில் நேரடியாக பாதிப்பு ஏற்படுவதாக இக்கட்டுரை தெரிவித்துள்ளது. ஆய்வின் முடிவில் […]
நாடு முழுவதும் இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் 48 சதவீத உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும், குணமடைவர் எண்ணிக்கை 84 சதவீதமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் 48% 25 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும். […]
கேரளாவில் கடந்த சில தினங்களாக நாட்களாக கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக கேரளாவில் கட்டுக்குள் இருந்தது ஆனால் கடந்த சில தினங்களாக ஒருநா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புறாவிற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 1871 பேருக்கு புதியதாக கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 87 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி […]
அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்தியஅரசு திரையரங்குகள் திறப்பதற்கு வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான சில பாதுகாப்பு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது .அதாவது […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து கடந்த 3ஆம் தேதி […]
தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய கொரானோ தொற்று நாளடைவில் விஸ்வரூபத்தை காட்டத்தொடங்கியது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானோ தொற்றின் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் அடுத்த கட்டமான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வினை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது தமிழக அரசு.எனினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்டு வரும் தடையானது தொடர்ந்து […]
உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பத்து மாத காலத்தில் உலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐநா சபை பொது செயலாளர் அண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
கொரோனா தொற்றை ஒன்றரை மணி நேரத்தில் துல்லியமாக கண்டறியும் மருத்துவ உபகரணத்தை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த உபகரணத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் சோதனை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் பரிசோதனை முடிவுகளை பெற ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை தேவைப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ள பிக்குவின் பயோடெக் என்ற […]
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். அதோடு கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ரயில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனைகள் பங்கேற்கின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து […]
சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 […]
கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருந்த விக்ரமராஜாவின் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். கோயம்பேட்டில் கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருக்கும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா மீது விசாரணை கமிஷன் மற்றும் வெள்ளை அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அருண்குமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு ஒரு முறை […]
சென்னையில் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தை தொடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார். கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கிய போதிலும் புறநகர் ரயில்சேவை மட்டும் இன்னும் தொடங்கபடாமலேயே உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை டிஐஜி அருள்ஜோதி விரைவில் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறினார். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் […]
கொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால் பரவும் டெங்கு நோய்களைத் தடுப்பது குறித்து ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆரம்பம் முதலே கொரோனா வைரசை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்து உள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனவைரசை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி […]
எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபட சீனாவுக்கு எண்ணமில்லை என அந்நாட்டு அதிபர் திரு ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் உரையாற்றி வருகின்றனர். அதன்படி சீன அதிபர் திரு ஜீ ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபடும் […]
உலக அளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பரவல் வேகம் எடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை […]
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கினால் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியவில்லை என பிரபல நடிகை மிகுந்த கவலையுடன் கூறியுள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். ஊரடங்கு அனுபவத்தை பற்றி பூஜா ஹெக்டே கூறுகையில் “சினிமா துறையை சார்ந்தவர்கள் எப்போதுமே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் தற்போது அனைவரும் வீட்டில் தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய பாரம்பரியத்தை தான் பார்க்க […]
மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உருவாக்கும் தடுப்பூசிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் […]
அமெரிக்காவில் இரு வாரங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அனைத்து நாடுகளையும் பாடாய்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா சென்ற இரு வாரங்களில் பெருமளவு பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. தினமும் 43,000 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததை விட இப்பொழுது 21 விழுக்காடு குறைவாகவே வைரசின் தாக்கம் உள்ளதாக ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள […]
உலக அளவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் மனித இழப்பை கொடுத்து வருகிறது. இந்நிலையில் நாளுக்குநாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். என்னதான் முழு ஊரடங்கு போடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் வைரஸின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை தாண்டியுள்ளது. சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகப்படியான மனித பலியை வாங்கி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். இந்தக் கொடிய வைரஸ் தன்னுடைய தாக்கத்தை ஒருபக்கம் காட்டிக் கொண்டு வந்தாலும் தன்னலமில்லாத மருத்துவர்களின் சேவையால் கோடிக்கணக்கான மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்பொழுது வரை […]
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கொரோனா எப்போது சரிஆகுமென கூறியுள்ளார். உலகெங்கும் கொரோனா நோய்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கின்றது. உலகெங்கிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்குள் முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.உலகமயமாக்கல் காரணமாக உலகம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.உலகமயமாக்கல் காரணமாக நாம் […]
கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ள காரணத்தால் மாஸ்க் அணிவது அவசியமில்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் சீனா நாட்டின் வுஹான் நகரில் பரவத்தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் உஷாரான சீன அரசு ஊரடங்கு முறையை அமல் படுத்தியும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தும் செயல்பட்டது. மேலும் சீன மக்கள் தங்களை வீடுகளில் தனிமையில் படுத்துக்கொண்டோம் விழிப்புணர்வோடும் இருந்தமையால் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சீன அரசு […]
நடிகர் சூரி எஸ்பிபி விரைவில் நலம் பெற்று வருவதற்கு மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரி […]
நடிகர் சிவகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் கொடுத்த அவருடைய உடல் ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பி பூரண நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில் அவர் […]
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். திரைத்துறையில் ஒரு சில நடிகர், நடிகைகள் கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய பிறந்தநாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் என்ற இரண்டு கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான “சகோ” […]
எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டதை தொடர்ந்து, சிகிச்சைப் பிரிவிலிருந்து மருத்துவமனையில் ஆறாவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது. மருத்துவர்களும் அவருக்கு அளிக்கப்படும் […]
தன் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “தனது இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை கொடுக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]
நடிகர் மோகன் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் மோகன் கூறியதாவது ” திரையுலகிற்கு வரும் முன்பிருந்தே எஸ்பிபி அவர்களின் ரசிகன் நான். பெங்களூரில் இருந்த காலகட்டங்களில் அவரின் குரலும், பாடலும் என்னை மிகவும் ஈர்த்தது. அவருடைய பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ […]
பின்னணி பாடகர் வேல்முருகன் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் நேற்று அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிக்கையை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர். எஸ்பி உடல் நலம் பெற வேண்டி சினிமா பிரபலங்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். திரையுலகின் பிரபல நடிகை நடிகர்கலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா போன்ற பலர் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அந்த வரிசையில் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இவர் வசிக்கிறார். டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, […]
உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மறுஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது. 2000 பேருக்கு புதன்கிழமையன்று இறுதிக்கட்ட பரிசோதனை தொடங்கவிருந்த நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த முதல் நாடாக ரஷ்யாவை செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தற்போது 28 தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளது. இவற்றில் 3வது மற்றும் […]
பிரபல நடிகரான நிதின் திருமண விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் தற்போது எளிமையாக நடைபெற்று வருகின்றன. திரையுலகின் பிரபலங்களின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகழும் இதுபோன்றே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் நடைபெற்றது. […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்ற 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தனக்கு லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், பரிசோதனையின் முடிவில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், முந்தைய நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் […]