கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை இன்ஜினுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புளோரிடா மாகாணம் டேடோனா கடற்கரை பகுதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
Category: விபத்து
உளுந்தூர்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேருந்துகளை பயிற்சி பெரும் ஓட்டுநர் வைத்து இயக்குகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே வைத்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றொரு பேருந்து […]
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூதாட்டியின் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சீனியம்மாள், இவரது கணவர் வீரப்பெருமாள் வயது 80. இவர்கள் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். சீனியம்மாள் அவரது வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு தனது வீட்டின் முன்பு அமர்ந்து அவரது கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக வந்த வாகனம் சீனியம்மாள் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து அங்கு […]
கோயம்புத்தூரில் 50 வயது நபர் ஒருவரின் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் மீது டெல்லி-திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் ஒன்று அவர் மீது மோதியது. ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். பின்பு இந்த தகவலை கோயம்பத்தூர் ரயில்வே காவலரிடம் […]
பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேருந்தில் திருமண கோஷ்டியினர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். காசர்கோடு மாவட்டம் ராஜபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின் சாலையோரம் உள்ள பள்ளதினுள் விழுந்த பேருந்து அங்கிருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் […]
டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடியை சேர்த்தவர்கள் சீனுசாமி, பவுன்ராஜ், குமார், சின்னச்சாமி. இவர்கள் நால்வரும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துகுள்ளனது. பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் என்னும் ஊர் அருகே தம்மை குறுக்குச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சீனுசாமி என்பவர் சம்பவ […]
லாரி-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்உயிரிலாண்டித சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் […]
கண்சிகிச்சைக்காக மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சித்தூர் மாவட்டம் எல்லம் பள்ளியை சேர்ந்த பெத்த.வெங்கட்ரமணா( வயது 60) நேற்று கண் குறைபாட்டால் சிகிச்சை பெறுவதற்காக தனது மகனான முன்ஜித்குமாருடன் மதனப்பள்ளியை அடுத்த சின்னதிப்பசமுத்திரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் அவர்களுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதனால் முதியவரான […]