இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் மாவட்டம் பீம்பர் காலி பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய […]
Category: இராணுவம்
நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சதீஷ்கர் மாநிலம் சுக்மா, பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள பாதுகாப்பு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 4 போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1500 வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்தக் காட்டுப் பகுதியை […]
மியான்மரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பல்வேறு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அந்நாட்டு ராணுவம் […]
ராணுவ வீரர்களை தாக்கியதால் அமெரிக்கா ஈரானின் ராணுவ தளத்தை முற்றிலுமாக அழித்து பதிலடி கொடுத்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைத்தளங்கள் மீது சமீப காலத்தில் ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதை காரணமாக கொண்டு எதிராளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு நேற்று சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் படை தளங்களின் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலினால் அப்பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. […]
நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]
தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார். ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்ததில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை கம்ராசிபோரா கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதன் பிறகு ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. அதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ […]
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்பொழுது, அதனை மீறி செயல்படும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய […]
ரஜோரி மாவட்ட கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், ” நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவம் […]
இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி அந்நாட்டு ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீன ராணுவத்துடன் தோன்றிய மோதல் விளைவாக லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, அந்த […]
தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ஆப்கான் ராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப் படை தாக்குதலில் அந்த நாட்டைச் சேர்ந்த 8 ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர். இது பற்றி ராணுவம் தரப்பில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள மைதன் மாகாணத்தில் சையத் அபாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 ஆப்கன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் […]
சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று தைவான் நாட்டு அதிபர் சாய் இங் வெண் அறிவித்துள்ளார். தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா தன் ராணுவ படைகளின் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் முறையாக அதிபராக உள்ள சாய் இங் வெண் சீனாவின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார் இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அந்நாட்டின் தைச்சுங்க கடற்கரையில் நடந்த ராணுவ ஒத்திகையில் எப்-16 […]
நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருக்கும் செயலிகள் வேண்டுமென்றால் ராணுவத்தை விட்டு விலகி விடலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ராணுவ அதிகாரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “பேஸ்புக் செயலியை நீக்குங்கள், இல்லையென்றால் ராணுவத்தை விட்டு விலகிச்செல்லுங்கள்” என காட்டமாக கூறியது. சமீபத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, லெப்டினன்ட் கர்னல் பி.கே.சவுத்ரி, டில்லி […]
இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியில் செல்லக்கூடாது என்று அவர்கள் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாமென வீரர்களின் குடும்பத்தினரிடம் சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில்இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் […]
இணையதளத்தை உபயோகப்படுத்த ராணுவ வீரர்களுக்கு அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களான “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ அதிகாரியான பி.கே.சவுத்ரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில் ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை பிரிந்து தொலை தூரங்களில் கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலையில் பணிபுரிகிறார்கள். இச்சூழ்நிலையில் குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி […]
இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு ரோந்து பணியில் இந்திய விமானப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா,எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் , கடந்த மாதம் 15-ம் தேதி சீன ராணுவர்கள் அத்துமீற முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ந்து சிலர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில் 35-க்கும் மேலான வீரர்கள் பலி ஆகியுள்ளனர். இதனால் எல்லையில் சீனா கூடுதலானா படைகளை குவித்திருந்தது. சீனாவை சமாளிக்க இந்தியாவும் தங்களது படைகளை […]
நாட்டிற்காக பாடுபடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் நாட்டையே தன் வீடாக நினைக்கிறான். ஒரு வீரன் தான் ராணுவத்தில் இணைந்து இருப்பதை எப்படி பெருமை அடைகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்நியம். அவன் மனதின் எண்ணங்களே இந்த தொகுப்பு. அனுதினமும் போர்க்களம், அனுக்கனமும் போர், எந்த நேரமும் தயார் நிலை, 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் ஓய்வு அறியாமல் உழைத்து கொண்டு இருக்கின்றனர் ராணுவ வீரர்கள். எப்பொழுது மரணிப்போம், எப்பொழுது உயிர் பிழைப்போம் என்று அவர்களுக்கே […]
இந்திய ராணுவம் ஒரு பார்வை….. கரடு முரடான மலை சிகரங்கள், கடும் குளிர் மற்றும் பனி மலைகள், சுட்டெரிக்கும் பாலைவன வெயில், மழை, வெள்ளம், புயல், விஷக்கிருமிகள், மிகக் கொடிய வனவிலங்குகள், விஷப்பாம்புகள் என இயற்கை சீற்றங்கள் எல்லாம் தாண்டி மனம் தளராமல் நாட்டைக் காக்க உறுதியோடு போராட தன் வீடு சுகம் துக்கம் சோகம் என அனைத்தையும் மறந்து போராட்டமே பொழுதுபோக்காக கொண்டவர்கள்தான் ராணுவ வீரர்கள். வீரம் என்ற வார்த்தைக்கான இலக்கணம் இவர்கள் தான். தேசத்தை […]
ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும் நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம் பாசம் குடும்பங்கள் எல்லாம் மறந்து நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான நமது இராணுவ வீரர்கள்தான். தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நமது வலிமை வாய்ந்த இந்திய ராணுவ வீரர்கள், நம் தேசம் மட்டுமின்றி பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகி இருந்தால் கூட அங்கும் சென்று […]
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது . அமெரிக்காவிடமிருந்து கூடுகள் தொலைவு சென்று தாக்கும் வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் அண்மையில் வாங்கியது. அந்த குண்டுகளை அமெரிக்காவின் m777 நவீன ரக பீரங்கி மூலம் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவம் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்தது. ஜெனரல் ரவி பிரசாத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரங்கி மூலம் […]
பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது . பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான வான்வழி சேவை வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது . மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் […]
காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]
சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய போராட்டக்காரர்கள் மீது நடந்த ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் […]