தனுஷின் ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ‘தி கிரே மேன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை அந்தோணி, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இணைந்த மற்றொரு இந்திய நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மராட்டிய நடிகையான ஐஸ்வர்யா சோனார் இப்படத்தில் நடிக்க தேர்வாகி உள்ளார். அடிசன் மூலம் […]
Category: ஹாலிவுட் சினிமா
அமெரிக்காவில் நடைபெறும் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வென்றவர்களின் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 93 வது ஆஸ்கார் வழங்கும் விழா இன்று காலை ஏழு மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறந்த இயக்குனருக்கான விருதை நோ மேட் லாண்ட் படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் வெற்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜூடாஸ் […]
முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தனுஷ் கடந்த மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். “தி கிரே மேன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். மேலும் இப்படத்தில் பிரபல நடிகர்களான கிறிஸ் ஈவான்ஸ், லா லா […]
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் இளம் பெண் ஒருவரை ஐந்தாவதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் நிக்கோலஸ் கேஜ் தற்போது ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 57 வயதாகும் நிக்கோலஸ் 26 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்களது திருமணத்தை செய்துகொண்டனர். இதற்கு முன்னதாக நடிகர் நிகோலஸ் கேஜ் 1995 முதல் 2001 வரை நடிகை […]
2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் க்ளோப் சிறப்பு நடிகருக்கான விருதினை புற்றுநோயால் உயிரிழந்த சாட்விக் போஸ்மேன் வென்றுள்ளார். சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப்ஸ் என்ற விருதை வென்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜார்ஜ்சி உல்பி இயக்கத்தில் வெளிவந்த மா ரெயினியிஸ் பாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பட்டியலில் தி கிரவுன் […]
987 வது தடவையாக லயன் கிங் பார்ப்பதாக ட்வைன் ஜான்சன் தெரிவித்துள்ளார். ராக் என்று அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன் நடிப்பில் கடைசியாக Jumanji: The next level திரைப்படம் ரிலீஸானது. அடுத்ததாக Jungle Cruise திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட நாள் காதலி Laura Hashian-க்கு ஜாஸ்மின் என்ற மகள் பிறந்தபிறகு அவரை, கடந்த ஆண்டு திருமணம் ட்வைன் ஜான்சன் திருமணம் செய்துகொண்டார். மகள் ஜாஸ்மினுடன் லயன் கிங் படம் பார்க்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ட்வைன் […]
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ட்ராப் சிட்டி ‘ ஹாலிவுட் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி . பிரகாஷ் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் அடங்காதே , ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ,4G, ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் முதல் முதலாக ஜி.வி. பிரகாஷ் ஹாலிவுட்டில்’ட்ராப் சிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் […]
பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998ஆம் ஆண்டு வோஹ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் […]
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் ஷான் கானரி காலமானார். 1930 ஆம் ஆண்டு பிறந்த ஷான் கானரி தனது 90வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். உலக புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடித்தவர் இவர்தான்.இந்நிலையில் இவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகம், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கையாண்ட யுக்தி ஊரடங்கு உத்தரவு தான். தற்போது பல மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஹாலிவுட்டை […]
இன்றைய சமூகத்தில் காதல் என்பது உணர்ச்சியைத் தாண்டி பொழுதுபோக்கான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு விட்டது. நடப்பு வாழ்க்கையில் சந்தோஷத்தை அளிக்க கூடிய காதல், பிற்காலத்தில் அதாவது திருமண வாழ்க்கைக்கு பின் கசப்பான நிகழ்வாக மாறி விடுகிறது. அதற்கான காரணம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒருவித ஈர்ப்பின் காரணமாக நேசித்து விட்டு, பிறகு ஒத்துப் போகாமல் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். நீதிமன்றங்களில் வரக்கூடிய சாதாரண வழக்குகளை விட, […]
ஹாலிவுட் படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி நாளை வெளியிட உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகதிறமைகளை கொண்டவர். இவர் ‘ ட்ராப் சிட்டி’ எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கை பா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக விக்கி ப்ருச்சல் இயக்கும் இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடிக்க உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதையை இந்த டிராப் சிட்டி. […]
ஹாலிவுட் பிரபல நடிகர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை பல்வேறு திருமணம், விவாகரத்து, லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதும் சாதாரணம். அதோடு ஹாலிவுட் சினிமாவில் இது மிகவும் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமாவின் ஸ்டாரான சீன் பெண் இளம் நடிகை லைலா ஜார்ஜை திருமணம் செய்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் […]
ஹாலிவுட் படமான பையர் டுவிஸ்டர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அக்னி அசுரனாக வெளியாக உள்ளது. வெற்றி பெற்ற பல ஹாலிவுட் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்வது வழக்கமான ஒன்று. 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் “பையர் டுவிஸ்டர்”. இப்படத்தை தமிழில் “அக்னி அரக்கன்” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. சிறுவாணி என்ற படத்தை இயக்கிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், இந்தப்படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்ய உள்ளார். மேலும் அவரது மருதமலை பிலிம்ஸ் சார்பில் […]
கொடூர கொரோனாவிற்கு அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் மக்களின் உயிர்களை குடித்து வருகிறது. ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் பலி தீர்க்கிறது. அந்த வகையில் கொரோனாவிற்கு 53 வயதான பிரபல அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்டு உடல்நலம் சரில்லாமல் போனது. உடனே செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை தீவிரமாக போராடி வருகின்றன. அண்மைகாலமாக கொரானாவினால் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டு வந்த நிலையில் ஒருசிலர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஹாலிவுடில் உருவான பிரம்மாண்ட படமான ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் இறப்பு அவரது ரசிகர்களை […]
பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை அனைவரும் கண்டிருப்போம். அந்தவகையில், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படம் குவாண்டம் ஆப் சோலஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்ஒல்கா கரிலெங்கா. இவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான்கு வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். அனைவரும் உங்களது […]
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது நியூயார்க் நீதிமன்றம், பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு(67) புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹார்வி, முன்னாள் தயாரிப்பு உதவியாளர் மிமி ஹேலியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், முன்னாள் நடிகை ஜெசிகாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் நடிகை ஏஞ்சலினா […]
சீனாவின் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176 லிருந்து 1,26,139 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ரிடா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும், வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் […]
இணையத்தில் மீம்ஸ்களின் கிங் என்றால் அது நடிகர் வடிவேலு தான் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இவருக்கு அடுத்த படியாக மீம்ஸ்களில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட யார் என்று பார்த்தால் ஒசிட்டா ஐஹூம் ஆவார். இவரின் புகைப்படத்தை மீம்ஸ்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு கூட இவர் யாரென்று தெரியாது. இந்நிலையில் ஒசிட்டா ஐஹூம் தனது 38 வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். பெரும்பாலானோர் நினைப்பது போல இவர் சிறுவன் கிடையாது 1982 ஆம் […]
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வரிசையில் விரைவில் வெளிவரவிருக்கும் ’நோ டைம் டு டை’ திரைப்படத்தின் தீம் பாடல், அமெரிக்க பாப் இசை உலகின் பிரபலம் பில்லி ஈலிஷ் இசையில் தற்போது வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வரிசையில் 25ஆவது திரைப்படமாக வெளிவரவிருக்கும் ’நோ டைம் டு டை’-இன் தீம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க பாப் இசை உலகின் பிரபலம் பில்லி ஈலிஷ், இந்தத் தீம் பாடலுக்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளைக் […]
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த […]
இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் பிரமாண்ட திருவிழாவான 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தென் கொரிய மொழிப்படமான ‘பாராஸைட்’ திரைப்படம் வென்றது. இதன் மூலம் ஆங்கில மொழிப்படங்கள் அல்லாமல் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் வெல்லும் முதல் படம் […]
ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிக்கருக்கான விருதினை வென்ற நடிகர் வகீன் ஃபீனிக்ஸ், பாலின பேதம், நிறவெறி, குடிமக்கள் உரிமை, விலங்குகள் நலன் என உலகில் நடக்கும் அனைத்து அநீதிகள் குறித்தும் குரலெழுப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வகீன் ஃபீனிக்ஸ் ஆஸ்கர் மேடையில் அனைத்துத் தரப்பு அநீதிகளுக்கும் எதிராகக் குரலெழுப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்ட […]
‘அமெரிக்கன் ஃபேக்டரி’ என்ற பெயரில் தனது முதல் தயாரிப்பில், வெளியான ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதால், அதன் இயக்குநர்களுக்குப் பாராட்டு தெரிவித்து ‘திறமையானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்களை ஆஸ்கர் விருது வென்றதற்காகப் பாராட்டியுள்ளார். ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்கள் ஸ்டீவன் பொக்னர், ஜூலியா ரிச்சர்ட் ஆகியோரை ட்விட்டரில் பாராட்டி […]
இளவரசர் சார்லஸின் தொண்டு நிறுவனமான பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தத் திட்டத்தின் தூதராக கேட்டி பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வருபவர் கேட்டி பெர்ரி. இவரைச் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனங்களில் […]
ரிக்கி பர்செல் இயக்கியுள்ள ‘ட்ராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் […]
‘1917’ திரைப்படம் பாஃப்டாவில் ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. 73ஆவது பிரிட்டிஷ் திரைப்பட அகாடமி (பாஃப்டா) விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள, ராயல் ஆல்பர்ட் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து வெளியான ‘1917’ திரைப்படம் ஏழு பிரிவுகளின் கீழ், பாஃப்டாவில் விருதுகளை வென்றுள்ளது. இந்த ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, […]
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. உலகளவில் பிரபலமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படம், 2001ஆம் ஆண்டு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சி, கார் ரேஸ் என்று அதிரடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்புப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒன்பதாவது பகுதி, எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ‘வின் டீசல்’ டாமினிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஃபாஸ்ட் அண்ட் […]
அனிமேஷன் திரைப்படமான “தி லயன் கிங்” விஷுவல் எஃபெக்ட்ஸ் சமூக விருது நிகழ்ச்சியில் 3 விருதுகளை அள்ளியது. அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி தத்ரூபமான காட்சிகளால் விலங்குகள் வாழும் காட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்ற “தி லயன் கிங்” திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக மூன்று விருதுகளை வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. இதையடுத்து, கேளிக்கை துறையில் பணியாற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் […]
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. ‘மார்வல்’, ‘ஹாரி […]
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தன் மனைவி ஹெய்லி பால்ட்வினுடனான தன் திருமண உறவு குறித்து, சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பால்ட்வினை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த ஜஸ்டின் பீபர், சமூக வலைதளங்களில் தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்களை இன்றுவரை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பீபரிடம், மனைவி பால்ட்வினுடனான திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் தன் காதலை […]
ஜேம்ஸ் பாண்ட் பட படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது. ஜேமஸ் பாண்ட் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயத்துக்கு உரிய இழப்பீடு தர படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 2015இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜேமஸ் பாண்ட் சீரிஸ் படம் ‘ஸ்பெக்ட்ரே’. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் டெர்ரி மேடன். ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஸ்பெக்டரே படத்துக்கான அதிரடி சண்டைக் காட்சி […]
35 வருட டேட்டிங் உறவிலிருந்து திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளனர் ஹாலிவுட் பிரபலங்களான பமீலா ஆண்டர்சன் – ஜோன் பீட்டர்ஸ். ஹாலிவுட் நடிகையும், மாடலுமான பமீலா ஆண்டர்சன் – தயாரிப்பாளர் ஜோன் பீட்டர்ஸ் ஆகியோர் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 35 ஆண்டு காலம் டேட்டிங்கில் ஈடுபட்டுவந்த பமீலா ஆண்டர்சன் – ஜோன் பீட்டர்ஸ் ஜோடி கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள மாலிபு நகரில் ஜனவரி 20ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களது காதல் வாழ்க்கையிலிருந்து திருமண உறவுக்கு […]
குரங்கிடம் கடி வாங்கி கடுமையாக காயம்பட்டாலும், தைரியமாக மீண்டும் படப்பிடிப்பில் நடித்த சுவாரஸ்யக் கதை பற்றி கூறியுள்ளார், நடிகை சல்மா ஹயேக். குரங்கிடம் கடிவாங்கி காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார், ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான வோக், 53 வயதாகும் சல்மா ஹயேக்கின் மிகவும் சிறப்பான ஃபேஷன் தருணங்களைக் குறிப்பிடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் 1996ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனது 13 வித்தியாசமான தோற்றங்கள் குறித்து […]
இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கப்படும் படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கும் இத்திரைப்படம், பாப் டைலன் எப்படி ஒரு சாதாரண இசைக்கலைஞராக இருந்து மிகப் பெரிய நாட்டுப்புற இசைக்கலைஞனானார் என்பதை குறித்து இருக்கும் என […]
பாண்ட் படங்களுக்கு பிரியா விடை கொடுத்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது என்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ்: ‘நோ டை டூ டை’ படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்ட பிறகு எமோஷனலாக விடைபெற்றார் தற்போதைய பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாக ‘நோ டைம் டூ டை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக வலம் வரும் டேனியல் கிரேக், […]
வாஷிங்டன்: 2005ஆம் ஆண்டு பிரிவுக்குப் பிறகு விடுமுறை நாளில் ஒன்றாக இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் ஜெனிபர் அனிஸ்டன் – பிராட் பிட் : நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னாள் காதலர்களான ஜெனிபர் அனிஸ்டன் – பிராட் பிட் மீண்டும் தங்களுக்குள்ளான உறவை புதுப்பித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திர காதலர்களாக வலம் வந்த அனிஸ்டன் – பிராட் பிட் 2000ஆவது ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதையடுத்து 2005ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகை […]
ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் செம மாஸ் யாரும் மிஸ்பண்ணாதிங்க…!! ஸ்பென்சர், மார்தா, பிரிட்ஜ், பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜியை விளையாடிவிட்டு இனிமேல் இந்த விளையாட்டில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று அதை உடைத்துவிட்டு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் தவிக்கும் ஸ்பென்சர், மீண்டும் இந்த ஜுமான்ஜி உலகத்திற்கு போகவேண்டுமென்று உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு சென்றுவிடுகிறார். ஸ்பென்சரை தேடி அவனது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்குள் போய்விடுகின்றனர். எதிர்பாராமல் ஸ்பென்சரின் தாத்தாவும் […]
தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெயின் ஜான்சன் கூறியுள்ளார் . ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் புகழ்பெற்ற ராக் என அழைக்கப்படுபவர் த்வெயின் ஜான்சன். இவர் ஒரு முன்னாள் குத்துசண்டை வீரர் என்பது ஆவர் . மேலும் இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்நிலையில் அடுத்து ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் இவரது நடிப்பில் வெளியாக […]
கால் கடோட் நடிக்கும் ‘வொண்டர் வுமன் 1984’ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2009இல் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கால் கடோட். இஸ்ரேல் மாடல் அழகி, மிஸ் இஸ்ரேல் என்ற அடையாளத்துடன் ஹாலிவுட் திரையுலகில் தடம்பதித்த இவர், பேட்மேன் v சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். கிரிமினல், திரிப்பிள் 9, வொண்டர் வுமன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் […]
ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கின் போது காயமடைந்த பிரபல நடிகை ஹாலே பெர்ரி, தனது தற்போதைய நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி. இவர் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டை அனதர் டே’ படத்தில் நடித்திருந்தார். அது தவிர சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான ‘எக்ஸ் மேன்’ படங்களில் ஸ்டோர்ம் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார்.53 வயதான ஹாலே பெர்ரி தற்போது தற்காப்பு கலையை மையமாக கொண்டு உருவாகிவரும் ‘ப்ரூயிஸ்ட்’ […]
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து, தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 45 வயதான ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, பருவ நிலை மாற்றம் குறித்தும் வெப்ப மயமாதல் குறித்தும் தனது கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவார். இந்நிலையில், அவர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ள டெல்லி காற்று மாசு குறித்த கவலைகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காற்று மாசு […]
நடிகை அமலா நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் திரைத்துரையில் அடி எடுத்து வைக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க நடிகை அமலா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கடந்த 1980-ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் […]
பிரான்ஸ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுதிய நடிகை,கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்று பெயர் பெற்ற அமெரிக்க நடிகை ஜீன் செபர்க் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. அவரது அரசியல் ஈடுபாட்டால் எஃப்பிஐயின் உளவு வளையத்துக்குள் சிக்கி பல்வேறு டார்ச்சர்களை அனுபவித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் செபர்க் என்ற படத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். இந்தப் படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ்: எஃப்பிஐ-ஆல் உளவு வளையத்துக்குள் […]
கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உயரம், கருமையான தலை முடி என அச்சு அசல் சூப்பர்மேனாக காட்சியளிக்கும் கிறிஸ்டோபர் டென்னிஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரியல் லைஃப் சூப்பர்மேனாக பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். ஹாலிவுட் பவுல்வர்ட் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்துவந்த கிறஸ்டோபர் டென்னிஸ் மறைந்தார். அவருக்கு வயது 52. கோலிவுட் சினிமாவுக்கு கோடம்பாக்கம், பாலிவுட் சினிமாவுக்கு மும்பை என்பது போல் ஹாலிவுட் சினிமாவுக்கு தாய்வீடாக லாஸ் ஏஞ்சலிஸ் […]
டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு : ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, லின்டா ஹாமில்டன், கேப்ரியல் லூனா, மெக்கன்ஸி டேவிஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் வெளியானது. டெர்மினேட்டர் பட வரிசையில் வெளியான இத்திரைப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இம்முறை கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். டிம் மில்லர் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டெர்மினேட்டரை […]
குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மைத்துனிக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை தண்டனை. த்ரீ கிங்ஸ், ஓசன்ஸ் லெவன், ஸ்பை கிட்ஸ், தி அமெரிக்கான், கிராவிட்டி உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜார்ஜ் க்ளூனி. ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் நடிகர்கள் பலர் இருந்தாலும் ஸ்டைலிஷ் ஆன நடிகர்கள் என்று ஒரு சிலரையே குறிப்பிட முடியும். அந்த வரிசையில் டாம் க்ரூஸிற்கு அடுத்த இடத்தில் ஜார்ஜ் க்ளூனியே உள்ளார்.இவர் தனது கேஷுவலான […]
2019ம் ஆண்டுக்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் ஜூன் 2018 […]