Categories
இந்திய சினிமா சினிமா

“தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியல”…. நடிகை அமலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாண்ட்யா பிரதர்ஸ் உடன் நடிகர் யாஷ்… கேஜிஎஃப்-3 நடிக்கிறார்களா..?

கேஜிஎப் ஹீரோ மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் விரைவில் இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், ஹர்திக் பாண்டியா மற்றும் சகோதரர் குர்ணால் பாண்ட்யா உள்ளிட்டோர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் அஜித்தின் துணிவு பட விநியோக உரிமையை முக்கிய ஏரியாக்களில் கைப்பற்றிய தில் ராஜு….. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா,  கேங்ஸ்டா போன்ற பாடல்கள் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்ரே பண்ணுங்க….. “#love ஒயிட் ஹாட்”…. விபத்தில் சிக்கிய பண்ட்…. இன்ஸ்டாவில் நடிகை ஊர்வசி ரவுடேலா போட்ட பதிவு…. என்னது?

ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

என் அம்மா ஸ்ரீதேவி செய்தது ரொம்ப தப்பு…. உண்மையை உடைத்த மகள் ஜான்வி கபூர்…!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.  இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசிய ஜான்வி கபூர்,  “என் அம்மா (ஸ்ரீதேவி) 13 வயதில் அப்பாவுடன் ஹீரோயினாகவும், 21 வயதில் மகனுக்கு அடுத்தபடியாகவும் நடித்தார். அப்படி செய்வது மிகவும் தவறு என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுக்கமான உடை அணிய சொல்லி அறைந்த கணவர்… மாமியார் கொடுமை.. விவாகரத்து பெற்ற நடிகை பேச்சு..!!!

இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் தொழிலதிபரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்தும் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் கணவர், மாமியார் மீது வரதட்சனை வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த துயர சம்பவங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நான் 23 முறைக்கு மேல் காதலிச்சு இருக்கிறேன்”… ஓபனாக பேசிய பிரபல நடிகை..!!!

பிரபல நடிகை காதல் குறித்து பேசி உள்ளார். நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா மும்பையைச் சேர்ந்தவர். இவர் சென்ற 2001 ஆம் வருடம் வெளியான எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானா.ர் இதன் பிறகு 2003 ஆம் வருடம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தொகுப்பாளராகவும் இருக்கின்றார். பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அந்த மாதிரி பாட்டு மட்டும் தான் இருக்கு”…. பாலிவுட்டுக்காக தென்னிந்திய சினிமாவை குறை சொன்ன ராஷ்மிகா…. வைரல் வீடியோ…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில், குட்பை படத்தை தொடர்ந்து தற்போது மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகை ராஷ்மிகா பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மும்பையில் சொந்த வீடு”…. சிறு வயது கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே….!!!!!

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிடம் நடித்த வரும் நிலையில் தமிழில் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் தற்போது புதிதாக சொந்த வீடு வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சி தருணத்தை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். எனக்கு சிறு வயது முதலே சொந்த வீடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு”…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் இந்தி சீரியல் நடிகையான துனிஷா சர்மா(21) சென்ற 24-ம் தேதியன்று சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்” என்ற தொடரில் தன் முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் மீது துனிஷா சர்மாவின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின் சென்ற 25-ம் தேதியன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

3 idiots படத்துக்காக…. முதல் முதலில் ஆடிஷன் சென்ற அனுஷ்கா சர்மாவுக்கு…. வாய்ப்பு கிடைத்ததா?…..!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர் ஆவார். இவர் பாலிவுட்டின் மிஸ்டர் பெர்பெக்ஷனிஸ்ட் என அழைக்கப்படும் அமீர்கானுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முதல் முதலில் ஆடிஷன் போனார். எனினும் அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது அவர் த்ரீ இடியட்ஸ் படத்துக்காக ஆடிஷன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 5 வருடங்களுக்கு பின் அனுஷ்கா, அமீர்கானுக்கு ஜோடியாக பிகே படத்தில் நடித்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

உச்சக்கட்ட ஆபாசத்தில் “பதான்” படம்…. ஆனால் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பெரும் தொகையா?…. வெளியான தகவல்….!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியது. பா.ஜ.க-வினர் மற்றும் இந்துமத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அப்பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகாபடுகோனும் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை குறிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வலைதளத்தில் ஆபாச மார்பிங்”… என் மகளை கூட விட்டு வைக்கவில்லை…. நடிகை ரோஜா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார். இவர் அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் சினிமா மற்றும் அரசியலில் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து இருக்கிறேன். ஆனால் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG!!….. பட்டப் பகலில் நடு ரோட்டில் பிரபல நடிகை சுட்டுக் கொலை….. பின்னணி என்ன….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்களுடைய 3 வயது மகளுடன் கவுரா தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா நோக்கி ‌காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் குமார் காரை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் பிரகாஷ் குமாரிடம் வழிபறியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாகுமாரி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பர்த்டே பார்ட்டி: முன்னாள் காதலிக்கு “முத்தம்” கொடுத்த சல்மான் கான்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் தன் 57-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை பூஜாஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து சல்மான் கான் மற்றும் அவரது மருமகன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதற்கிடையில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரே கலரில் ஆடை […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பாலிவுட் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார்…!!!

பாலிவுட்டின் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார். போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூத் ஆகிய ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நிதின் மன்மோகன் இறந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் நடிகர் வல்லபனேனி ஜனார்தன் காலமானார்…. தெலுங்கு திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் தெலுங்கு நடிகரும் இயக்குனருமான வல்லபனேனி ஜனார்தன் காலமானார். சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனார்த்தன் உடல்நிலை மோசமடைந்ததால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

விரைவில் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள்…. வெளிவரும் தகவல்கள்….!!!!

கடந்த சில ஆண்டுகளாகவே தென் இந்திய சினிமாவில் நடிப்பேன் என்று ஜான்பி கபூர் கூறி வருகிறார். இவர் மறைந்த பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஆவார்.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை ஜான்பி கபூர் ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். இவர் சென்னையில் நடந்த நிக்ழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஜான்பி கபூரிடம் அடுத்த படங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பவால் விரைவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தென்னிந்திய நடிகைகளை அரசு புறக்கணிக்கிறது”…. நடிகை ஜெயசுதா கடும் வேதனை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசுதா. இவர் அண்மையில் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தென்னிந்திய நடிகைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக நடிகை ஜெயசுதா ஆதங்கம் தெரிவித்தார். அதன் பிறகு வெறும் 10 படங்களில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளது. ஆனால் உலகில் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த விஜய் நிர்மலாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மானின் 58வது பிறந்தநாள்…. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்…. போலீசார் தடியடி….!!!!

பாலிவுட் நடிகர்களில் பிரபலமான ஒருவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நேற்று தனது 58 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மும்பையில் உள்ள இவரின் கேலக்ஸி வீட்டில் முன்பு ரசிகர்கள் இவருக்கு நிறைய பதாகைகளுடன் கூடினர். அப்போது நடிகர் சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் சேர்ந்து தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. சூப்பர்…. அசத்தும் உடையில் ரசிகர்களை கவரும் ராஷ்மிகா மந்தனா…. டிரெண்டாகும் புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நடிகை துனிஷா ஷர்மாவின் இறுதிச் சடங்கில் திடீரென மயங்கிய தாய்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா (20) கேராவனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலை விவகாரத்தில் காதலன் ஷீசன்‌ கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துனிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவருடைய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் துனிஷா சர்மாவின் இறுதிச் சடங்கின் போது அவருடைய தாயார் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி சென்றுள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

சூப்பர் ஹிட் அடித்த தளபதி விஜய்யின் 2 படங்கள்…. தெலுங்கு வெர்ஷனில் ரீ ரிலீஸ்…. வெளியான தகவல்…..!!!!!

தளபதி விஜய் நடித்த கில்லி அவரது சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக தமிழில் கில்லி படம் உருவாக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகிலும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஒக்கடு, தற்போது திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி “ஒக்கடு” திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

#RIP: பிரபல ஜமைக்கா பாடகர் காலமானார்…. ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல்…!!!

இசைக்கலைஞர் ஸ்டீபன் மார்லியின் மகனும், ரெக்கே ஜாம்பவனான பாப் மார்லியின் பேரனுமான ஜோசப் ஜோ மெர்சா (31) காலமானார். பிரபல பாடகரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் மெர்சா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜமைக்காவின் அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச்சும் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சுஷாந்த் சிங் தற்கொலை செய்யல”… முக்கிய பிரபலத்தின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருப்பதிக தகவல் வெளியாகி இருக்கின்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு தாராள மனசு தான் பா”…. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த விஜய் தேவரகொண்டா…. என்ன தெரியுமா?….!!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லைகர் திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. எனினும் அவர் குஷி திரைப்படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதை சென்ற 5 வருடங்களாக அவர் செய்து வருகிறார். அதன்படி இந்த வருடம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார். இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கூறியதாவது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை கங்கனா வெறும் 10 படங்களில் நடித்ததற்கு பத்மஸ்ரீ விருதா….? நடிகை ஜெயசுதா விமர்சனம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“டியர் டெத்” படம்: இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும்?…. இயக்குனர் பிரேம்குமார் ஸ்பீச்….!!!!

எஸ்.என்.ஆர் பிலிம்ஸ் சார்பாக சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டியர் டெத்”. சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி உள்ளார். இந்த படத்தை பிரேம் குமார் இயக்க, அசோக் சாமிநாதன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார். தற்போது படம் பற்றி இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது “இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ்வாக தான் பார்க்கப்படுகிறது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடத்தில் பேசினால் எப்படியிருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி!!…. தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் கே.பி ஷசி திடீர் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்….!!!!

மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நல குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இலையும் முள்ளும் என்ற பிரபலமானவர் கே.பி சஷி. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் பாலிவுட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“புஷ்பா” பட இயக்குனருடன் இணையும் பிரபாஸ்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய “பாகுபலி” திரைப்படத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தின் 2ஆம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் பிரபாஸ் பான் இந்தியா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் சூப்பர் ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார்” படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா!!… ரூ. 7000 கோடி வசூலை எட்டிய அவதார் 2…. பாக்ஸ் ஆபீஸில் வேற லெவல் கலெக்ஷன்…..!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த  16-ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்த படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளிவரும் புது பரபரப்பு தகவல்கள்…. நடந்தது என்ன?…!!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான துனிஷா சர்மா, தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். அண்மையில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த துனிஷா சர்மா மும்பை அருகில் சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துனிஷா சர்மா சாவுக்கு காதலன் ஷீசன்கான் தான் காரணம் என புகார் பெறப்பட்டது. அதன்பின் ஷீசன்கான் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

செய்தியாளர் கேட்ட அந்த கேள்வி….! நான் உங்கள் மனைவியா….? நடிகை உர்ஃபி சுருக் கேள்வி…!!!

வித்தியாசமான ஆடைகள் மூலம் தினமும் செய்திகளில் அடிபடுபவர் பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவித். இவருடைய பெயரை கேட்டாலே அவருடைய ரசிகர்கள் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவார்கள். இன்றைக்கு என்ன வீடியோ வந்திருக்குமோ என்ற அளவிற்கு உற்சாகம் அவர்களை தொற்றிக் கொள்கிறது. அந்த அளவிற்கு தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஹாட்டான வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவது உண்டு. இவர் துபாயில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

கூகுளில் 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால், 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டை google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின்படி அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. நடிகை காஜலுக்கு  இந்த வருடம் நீல் என்ற ஆண் குழந்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியல்”…. இடம்பிடித்த இந்திய குறும்படங்கள்….!!!!

ஆஸ்கர் விருது இறுதிசுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியாகிய “செல்லோ ஷோ” படமும் தேர்வாகி உள்ளது. இது தவிர்த்து “ஆல் தட் ப்ரீத்ஸ்” ஆவணப்பட பிரிவிலும், “தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்” ஆவண குறும்பட பிரிவிலும் தேர்வாகி இருப்பதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்து உள்ளது. இவற்றில் தி எலிபெண்ட் விஸ்பரஸ் குறும்படத்தை கார்த்திசி கோன்சலஸ் இயக்கியுள்ளார். 95-வது ஆஸ்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய சினிமாவில் மிக பிரபலமான ஹீரோயின்கள்….. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை ஒவ்வொரு மாதமும் ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கான பிரபலமான நாயகிகளின் லிஸ்ட்டை ஆர்மிக்ஸ் மீடியா தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின் படி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா பிடித்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இருக்கிறார். அதன் பிறகு 3-ம் இடத்தில் நயன்தாராவும், 4-ம் இடத்தில் காஜல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இளம் நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. பிரபல நடிகர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20). இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகையின் மரணம் குறித்து போலீசார் கூறும்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா கழிவறைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: நடிகை தற்கொலை வழக்கில் நடிகர் கைது…!!!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அவரது சக நடிகரான ஷீஜன் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷீஜன் கான் மீது துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு போக தடை…. காரணம் என்ன?…. நீதிமன்றம் அதிரடி….!!!!

பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீப காலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதில் சுகேஷிடமிருந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த நகைகள் பரிசுப் பொருட்களை பெற்றுள்ளதாக ஜாக்குதலின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின், பஹ்ரைனுக்கு போகவேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது விசாரணைக்கு வந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இம்மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

வாக்கிங் சென்ற “காஷ்மீர் பைல்ஸ்” பட இயக்குனர்…. பாதுகாப்புக்கு சென்ற ஓய் பிரிவு அதிகாரிகள்…. வெளியான புகைப்படம்….!!!!

நடப்பு ஆண்டு துவக்கத்தில் ஹிந்தியில் காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி அரசியல் அரங்கில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் பண்டிட்டுகள் பல பேர் கொல்லப்பட்டது மற்றும் அங்கிருந்து பலர் அகற்றப்பட்டதன் பின்னணியை மையமாக கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. விவேக் அக்னிகோத்ரி இயக்கிய இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதே நேரம் இத்திரைப்படத்திற்கு எதிரான கருத்துக்களும் கிளம்பியது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு சில கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என் உயரம் தனக்கு துயரமாக மாறியது!… சீனியர்களிடம் அடியும், திட்டும் வாங்கினேன்…. மனம் திறந்த அமிதாப் பச்சன்….!!!!

பாலிவுட்டில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இதில் அமிதாப் பச்சன் என்றாலே 6 அடி உயரத்துக்கும் அதிகமான அவரது தோற்றம் தான் முதலில் நினைவுக்கு வரும். திரையுலகில் கூட அவருக்கு உயரம் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. எனினும் மற்றவர்கள் நினைப்பது போன்று உயரம் எனக்கு எப்போதும் பிளஸ் பாயிண்டாகவும், எந்நேரமும் மகிழ்ச்சியையும் தந்தது இல்லை என அமிதாப் பச்சன் அண்மையில் ஒரு பேட்டியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூத்த பாலிவுட் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார்…. சோகம்…!!!

மூத்த பாலிவுட் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார். இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மூளை பக்கவாதம் ஏற்பட்டதால், உடல் அசைக்க முடியாத நிலையில் இருந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி அவருக்கு திடீரென மூச்சு திணறலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,நேற்று இரவு 10.15 மணிக்கு அவர் காலமானார்.

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் நடிகை படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு…!!!

பாலிவுட் இளம் நடிகை துனிஷா சர்மா(20) இன்று மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இவர் ‘பார் பார் தேகோ’, ‘தாதபங்க்’ உள்ளிட்ட படங்களிலும், பல இந்தி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

“பற்றி எரியும் இன்ஸ்டாகிராம்”…. ரசிகர்களை பதறவிட்ட பூஜா ஹெக்டே…. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!

தமிழில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் போதிய அளவு வரவேற்பை பெறாத நிலையில், தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG!!… படப்பிடிப்பு தளத்தில் 20 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை துனிஷா சர்மா‌ (20). இவர் அலிபாபா என்ற சீரியலின் மூலம் பிரபலமான நிலையில் instagram-ல் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் நடிகை துனிஷாவை பின் தொடர்கிறார்கள். இன்று படப்பிடிப்புக்கு சென்ற துனிஷா தான் மேக்கப் போடும் புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மேக்கப் அறைக்குள் சென்ற நடிகை துனிஷா நீண்ட நேரம் வெளியே வராததால் பட குழுவினர் சந்தேகம் அடைந்து மேக்கப் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!!… படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாகினி புகழ் நடிகை…. பரபரப்பு சம்பவம்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தி வெர்ஜின் ட்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்க, சன்னி சிங், பாலக் திவாரி போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மவுனி […]

Categories
இந்திய சினிமா சினிமா

WOW!!… ஹீரோயின் போல் ஜொலிக்கும் நடிகர் மகேஷ்பாபுவின் மகள்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில், நடிகர் மகேஷ்பாபுவின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்பிறகு நடிகர் மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவருடைய மகள் சித்தாராவுக்கு தற்போது 10 வயது ஆகிறது. இந்நிலையில் சித்தாரா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 1 […]

Categories
இந்திய சினிமா சினிமா

10 வருடத்திற்கு பிறகு தந்தையாகும் மகிழ்ச்சியில் ராம் சரண் கொடுத்த கிறிஸ்துமஸ் பார்ட்டி…. வைரல் புகைப்படம்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் ராம்சரண் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையாக போகும் மகிழ்ச்சி தகவலையும் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவி உபாசனா கர்ப்பமாக இருப்பதை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில்”…. இடம்பிடித்த 4 இந்தியப் படைப்புகள்…. வெளியான தகவல்….!!!!

ஆஸ்கர் விருதுக்குரிய தேர்வு பட்டியலில் “செல்லோ ஷோ”, ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் உருவாகிய “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவண குறும்படமும் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த ஆவணத் திரைப்படத்துக்கான பட்டியலில் “ஆல் தட் பிரீத்ஸ்”, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” போன்றவையும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதின் 4 தேர்வு பட்டியல்களில் இந்திய படைப்புகள் இடம் பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னை யாருமே அப்படி சொல்ல முடியாது!… என் சுயசரிதையை நானே எழுதுவேன்…. ஓபனாக பேசிய ஆலியாபட்….!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியாபட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியாபட் பேட்டி அளித்ததாவது “சிறுவயது முதல் தற்போது வரை எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நான் மறந்ததே இல்லை. எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் உடனே என் செல்போனை எடுத்துக்கொண்டு அதில் என் சிறுவயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய படங்களை பார்ப்பேன். திரையுலகில் நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். இதற்கிடையில் ஆலியாபட் செட்டுக்கு தாமதமாக […]

Categories

Tech |