Categories
சினிமா தமிழ் சினிமா

Flash News: ஜெயலலிதா ‘தலைவி’ படத்தின் செம டிரைலர்..!!

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் இயக்கத்தில் கங்கனா அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தலைவி. இந்தப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் நடிகர் நகுல் கலந்து கொள்கிறாரா?… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்துகொள்வதாக பரவிய தகவலுக்கு அவரே விளக்கமளித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க இருப்பதாகவும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் நகுல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் கனி உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்… மு க ஸ்டாலின்..!!

தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முகஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் படத்தை இயக்கிய வெற்றிமாறனை குறிப்பிட்டு ” அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்” அனைவரும் மென்மேலும் சிறப்பாக வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம்…. டி.இமான் மகிழ்ச்சியுடன் ட்விட்…!!

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்று டி.இமான் தெரிவித்துள்ளார். 67 வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள இசை பிரியர்களின் ஆதரவால் இது நடந்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு அறிவித்திருப்பதால் நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின்…. படிப்பு செலவை ஏற்கிறேன்…. ராகவா லாரன்ஸ் உருக்கம்…!!!

தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் காலமானார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீப்பெட்டி கணேசன் மறைவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை தீப்பெட்டி இறைவனடி சேர்ந்தார் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ணன் டீசர் குலைநடுங்க வைக்கிறது…. பிரபல இயக்குனர் எச்சரிக்கை…!!

கர்ணன் டீசரை பார்த்தால் குலை நடுங்குகிறது என்று பிரபல இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த டீசரை ஏற்கனவே பார்த்துள்ள இயக்குனரும், நடிகருமான சுப்ரமணியம் சிவா அவரது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா விழிப்புணர்வு… மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்த நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நதியா மாஸ்க் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் திரையுலக பிரபலங்களும் தங்கள் சமூக வலைத்தளங்களில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ் திரையுலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்தது “வலிமை” அப்டேட்…. ரசிகர்கள் உற்சாகம்…!!

திடீரென வெளிவந்த வலிமை அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராஃபி என பல திறமைகளையும் கொண்டவர். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்டு வந்த அஜித் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்றார். இந்நிலையில் அஜித்தின் வலிமை பட அப்டேட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி… பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு…!!!

மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி செய்வேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் தீப்பெட்டி கணேசன் ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் . இதை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, நீர்பறவை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பு படத்திற்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது எப்படி…? கங்கை அமரன் சொன்ன சுவாரஸ்ய தகவல்…!!

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு எப்படி விருது கிடைத்தது என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே அனைவரிடமும் பேசுவார். மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது மற்றும் சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருதை கைப்பற்றும் முன்னணி நடிகர்கள்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தேசிய விருதுக்கான பட்டியலில் பிரபல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். 67 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் “அசுரன்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகராக தனுஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி தகவல்… ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… ரிலீஸ் தேதியில் மாற்றமா?… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Many of our friends are asking […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் சரவணன் மீனாட்சி மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இழப்பு சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்ன இப்படி மாறிவிட்டார்?… கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட்  புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.  தமிழ் திரையுலகில் நடிகை  கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து  நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: அசுரன் படத்திற்கு தேசிய விருது… குதூகலத்தில் படக்குழு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் மையத்தில் இயக்குனர் ஷாவி என்.கரூன் தேசிய விருதுகளை அறிவித்து வருகிறார். திரைத்துறை க்கான சிறந்த மாநில விருது சிக்கிம்முக்கு வழங்கப்பட்டது. சிறந்த சினிமா விமர்ச ருக்கான தேசிய விருதை கொல்கத்தாவை சேர்ந்த சோஷினி சட்டோபத்யாயா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரீட் தான்… ‘டாக்டர்’ படத்துக்காக இணைந்த ‘மாஸ்டர்’ காம்போ… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அறிவு  இருவரும் ‘டாக்டர்’ படத்தின் பாடலுக்காக  இணைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, டோனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தாயார் மறைவு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

பிரபல இயக்குனரின் தாயார் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் எடுத்த முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை அளித்தது. தற்போது அவர் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ரவிகுமாரின் வீட்டில் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள படத்தில் நடித்து வரும் ஏ.ஆர்.ரகுமான்…. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்…!!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியான “ரோஜா” திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து உலக மக்களை தன் இசையால் கட்டி வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இதை தொடர்ந்து இவர் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கப் பெண்ணே பாடலின் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடித்திருந்தார். குறிப்பாக அவர் நடித்த முதல் படமும் இதுவே என்று கூறலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் நான் எதிர்கொண்ட சவால்”…. “தலைவி” படத்தில் நடித்த கங்கனா ரனாவத் ட்விட்…!!

ஜெயலலிதாவின் தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவாலை நடிகை கங்கனா ரனாவத் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் திருமணம் எப்போது தெரியுமா…? அவரே சொன்ன பதில் இதோ…!!

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்த தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.இதை தொடர்ந்து முண்டாசு பட்டினம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நடராஜனின் மகளை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கின்றனர். அதன்பின் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையோரத்தில் அஜித்தின் ரீல் மகள் சிம்பிள் போட்டோ ஷூட்…. குவியும் லைக்ஸ்…!!

அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சிம்பிள் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அனிகா அவ்வப்போது போட்டோ ஷூட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் காதல் ஜோடிகளின் “ரொமான்டிக்” புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்த படி போட்டோ ஷூட்களையும், நெருக்கமாக இருக்கும் செல்பிகளையும் எடுத்து அவர்களது வலைத்தள பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரீமேக்காகும் “மாநகரம்”…. விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா…?

மாநகரம் ரீமேக்கில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்றது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப் போகும் “மாஸ்டர் செஃப்”…. பிரம்மாண்ட ப்ரமோவை வெளியிட்ட சன் டிவி…!!

சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ பட டீசர் ரிலீஸாகும் நேரம் இதுதான்… அதிரடியாக அறிவித்த படக்குழு… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீஸர் ரிலீஸாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் கௌரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. Set your alarm clock at 7:01 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்ல…. பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்…. குவியும் லைக்ஸ்…!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை துளிகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சுய மரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் தனியாக வாழ்ந்து வரும் கண்ணாமா கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதனைப் போலவே கண்ணம்மாவிற்கு மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கும் சௌந்தர்ய லக்ஷ்மியும் அவரது திறமையான நடிப்பை காட்டி வருகிறார். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் சௌந்தர்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டம்… விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் பிக்பாஸ் ஆரி… வெளியான புகைப்படம்…!!!

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலில் பிக்பாஸ் பிரபலம் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து நான்காவது சீசனும் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். மேலும் பாலாஜி முருகதாஸ் 2-வது இடத்தையும், ரியோ ராஜ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் யார்….? கமலா அல்லது சிம்புவா….? வெளியான தகவல்…!!

விஜய் டிவியில் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அரசியலில் மும்முரம் காட்டி வருவதால் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸின் ஐந்தாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநகரம் ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… விஜய் சேதுபதியின் ஸ்டைலிஸ் லுக்… தெறிக்கவிடும் புகைப்படம்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘மும்பை கார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெவ்வேறு சீரியல்நடிகைகள் ஒன்றாக செல்ஃபி…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

வெவ்வேறு சேனல்களில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கென எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மாபெரும் வெற்றி அடைந்து வருவதால் அதனை வேறு மொழிகளில் ரீமேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இதுதான் கலக்கல் காம்பினேஷன்…. அல்லு அர்ஜுனின் அதிரடி திரைப்படம்…. வில்லனாக என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்….!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் பிரபல மலையாள நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BREAKING: மிகப் பிரபல இளம் தமிழ் நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிக பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சற்றுமுன் காலமானார். உடல்நலக் குறைவினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று காலமானார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BREAKING: மிக பிரபல இளம் தமிழ் நடிகர் திடீர் மரணம் – பெரும் சோகம்…!!

பிரபல தமிழ் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் காலமானார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காலமாகியுள்ளார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம விஜய் டிவி பிரியங்காவா….? எப்படி இருந்துருக்காங்க பாருங்க…. வைரலாகும் புகைப்படம்…!!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் ஆரம்ப கால புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 போன்ற பல்லவேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் இவர் விஜய் டிவிக்கு அறிமுகமாகிய ஆரம்ப கால கட்டத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் திடீர் தகராறு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்யாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப் போகும் “மாஸ்டர் செஃப்”…. பிரம்மாண்ட ப்ரமோவை வெளியிட்ட சன் டிவி…!!

சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவின் அணைப்பு தான் எனக்கு பாதுகாப்பான இடம்…. நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் வெளியிட்டுள்ள பழைய புகைப்படம்…!!

நடிகை ராதிகா சரத்குமாரின் பழைய புகைப்படம் ஒன்றை அவரது மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா.இதைத்தொடர்ந்து அவர் சீரியல்களிலும் நடித்து வந்தார்.சில நாட்களுக்கு முன்பு நடிகை ராதிகா அவரது கணவர் சரத்குமாருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட இருப்பதால் நடிப்பில் இருந்து விலகுவதாக கூறினார். இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகளான ரயானே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவும் அவரும் சேர்ந்து இருக்கும் பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் சர்ப்ரைஸ்…. மகளுக்காக சஞ்சீவ் அளித்த கிஃப்ட்….இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் அவரது குழந்தைக்கு கார் பரிசாக வழங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் அந்த சீரியலில் நாடக ஜோடிகளாக இணைந்து அதன் பின் ஏற்பட்ட காதலால் நிஜ வாழ்க்கையிலேயே ஜோடி ஆகிவிட்டனர். திருமணம் முடிந்த அவர்களுக்கு தற்போது ஐலா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது. இதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 60” படத்தில் இணைந்த இளம் ஒளிப்பதிவாளர்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

“சியான் 60” படத்தில் இளம் ஒளிப்பதிவாளர் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. விக்ரமின் சியான் 60 படத்திற்கான அப்டேட்டும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் டான்ஸ்…. கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகயர் திலகம் படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.இதை தொடர்ந்து அவர் நடித்த பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் ரங் தே, குட்லக் சகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு இடத்தை பிடிக்கும் குக் வித் கோமாளி புகழ்…. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு…!!

குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள அனைவரும் காண்போரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக புகழின் காமெடிக்கு அளவே இல்லை. புகழ் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று வந்தார். தற்போது அவர் குக் வித் கோமாளி மேடையை சரியாக பயன்படுத்தி […]

Categories
தமிழ் சினிமா

“மாற்றம் ஒன்றே மாறாதது” விஜய் டிவியில் ஹீரோவான நடிகர்…. சன் சீரியலில் நடிக்கப் போவதில்லை….!!

பிரபலம் சின்னத்திரை சீரியல் நடிகர் முன்னா சன் டிவி தொடரில் இருந்து விலகி விஜய் டிவி தொடரில் தன்னுடைய பயணத்தை தொடர போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளித்திரை பிரபலங்களை போலவே சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும். சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும்  மக்களிடையே அதிக வரவேற்பு கொண்டுள்ள தொலைக்காட்சிகள் ஆகும். இந்த இரண்டு தொலைக்காட்சி  சீரியல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது சின்னத்திரை சீரியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 மில்லியனை நெருங்கிய “வாத்தி கம்மிங்” .. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

தளபதி விஜய் நடித்து கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு கொரோனா காரணமாக 50 சதவீத இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. அதாவது 250 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாராவது கவனித்தீர்களா…? சித்ராவின் கையிலிருக்கும் காயம்… இன்ஸ்டாகிராமில் ரசிகர் பதிவேற்றிய புகைப்படம்…!!

சின்னத்திரை நடிகை சித்ரா கையில் காயத்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தில் அவரது ரசிகர் ஒருவர் கவனித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.  பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் முக்கிய தொடரான  பாண்டியன் ஸ்டோர்-சில்  முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த VJ சித்ராவுக்கு என்று மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும்  திருமணம் நடைபெற இருந்த நிலையில்  கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5: இனி கமலுக்கு பதில் பிரபல தமிழ் சூப்பர் ஸ்டார்…? – WOW…!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 1 முதல் பிக்பாஸ் 4 முதலான நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலையில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் அரசியலில் தீவிரமாக இருபதால் தொகுப்பாளர் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சீரியலில் பிக்பாஸ் பிரபலங்கள்…. சுவாரஸ்யமாக போகும் எபிசோடுகள்…!!

விஜய் டிவி சீரியல்களில் பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பலபேர் அவர்களது பொழுதுபோக்கை கழிப்பதற்காக சீரியல்களை பார்க்கின்றனர். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இரண்டு சீரியல்களை இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பப்படுகிறது. அதன்படி பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் இணைக்கப்பட்டுள்ளது.இப்படி இணைக்கப்படும் போது நிகழ்ச்சியை சுவாரசிய படுத்துவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன்…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன் எடுத்துள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதைத்தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து இருந்தார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அவரது திறமையான நடிப்பையும் அழகான புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்களின் மனதில் ஷிவானி நாராயணன் கனவு கன்னியாகவே இடம் பிடித்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது இவரா…? வெளியான தகவல்…!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசன் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி விளங்கிய படத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம்…. யார் தெரியுமா…!!

விஜய் சேதுபதி விலகிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் “புஷ்பா”. சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் […]

Categories

Tech |