Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரியின் அடுத்த படம்… வில்லனாக நடிக்கும் சரத்குமார்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து ஆரி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு டைட்டிலை வென்றார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் நடிக்கும் புதிய படத்தை புதுமுக இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் தளபதியின் வெறித்தனத்தை பாருங்க… போடு ரகிட ரகிட…!!!

தமிழ் சினிமா உலகில் வசூல் நாயகன் ரஜினிகாந்த் இடத்தை தற்போது தளபதி விஜய் தட்டிப்பறித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய இன்னல்களுக்கு பிறகு மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகியது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் வசூல் நாயகனாக வலம் வந்தது அனைவரும் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி – 35வேட்பாளர்கள் அறிவிப்பு ….!!

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் ஒருங்கிணைந்த சோழ மாவட்டத்திலுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தற்போது தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.  இந்த தாங்கள் வெற்றி பெற்றால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் ? மக்களிடம் எது போன்ற செயல்பாடுகளை சென்றடையவேண்டும் ? தேர்தலில் எதுபோன்ற வியூகம் அமைக்க வேண்டும் ? உள்ளிட்ட வாக்குறுதி குறித்து ஒவ்வொரு வேட்பாளர்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியின் சர்ப்ரைஸ் விசிட்… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி தனது ரசிகர் ஒருவர் வீட்டுக்கு சர்ப்ரைசாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . நடிகர் கமலஹாசன் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றவர் ஆரி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் . நேர்மையோடும் ,மன உறுதியோடும் விளையாடி டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆரியை நேரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா… வருத்தத்துடன் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா வருத்தத்துடன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் குக்குகளாக பவித்ரலட்சுமி ,சகிலா, கனி ,பாபா பாஸ்கர், மதுரை முத்து, தர்ஷா குப்தா, அஸ்வின் ,தீபா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . மேலும் புகழ், பாலா ,சிவாங்கி, மணிமேகலை, சரத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஆர்பி யில் ‘சூரரைப் போற்று’ படத்தை முந்திய பிரபல நடிகரின் படம்… சூர்யா ரசிகர்கள் ஷாக்…!!!

டிஆர்பி யில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ‌. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியிருந்தது . அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . மேலும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு பதிலடியா…? டுவிட்டர் பயோவை Asuran/Actor என மாற்றிய தனுஷ்…!!

நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டரில் பயோவை அசுரன் நடிகர் என மாற்றியதையடுத்து AsuranDhanush ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் இந்த பொங்கலுக்கு வெளியானது. அந்த படத்தில் “நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காக்க வந்த ஈஸ்வரன்” என்று சிம்பு பேசும் ஒரு வசனம் காட்சியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுப்பதற்காகவே வேண்டும் என்று இந்த காட்சி வைத்து இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன்’… அதிதி ராவ் பேட்டி…!!!

நடிகை அதிதி ராவ் ‘என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன்’ என்று கூறியுள்ளார் .  தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் கார்த்தியுடன் இணைந்து காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர். இதையடுத்து செக்கச் சிவந்த வானம்,  சைக்கோ ஆகிய படங்களிலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் . மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை அதிதி ராவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘சினிமா முழுவதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவை விட்டு விலகியது ஏன் ?… நடிகர் அப்பாஸ் விளக்கம்…!!!

சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை நடிகர் அப்பாஸ் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் காதல் நாயகனாக வலம் வந்து ஏராளமான இளம் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அப்பாஸ். இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் நடிகர் அப்பாஸ் பெரும்பாலான படங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார் . பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு ‘திருட்டுப்பயலே’ படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தார் . அதன் பின்னால் எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய சுந்தர்.சி… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

இயக்குனர் சுந்தர் .சியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது மனைவி குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 1995ஆம் ஆண்டு ‘முறைமாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இந்த படத்தில் குஷ்பூ, கவுண்டமணி, ஜெயராம், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது சுந்தர் சி க்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்  . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்… வெளியான தகவல்கள்…!!

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி  கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் . நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி , குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது நட்சத்திர ஹோட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் . நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திராவுக்கு திருமணம்… மாப்பிள்ளை இவர்தான்…!!!

பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். பிரியங்கா ,டிடி, ரம்யா, திவ்யா என பல தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . அந்த வகையில் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி நக்ஷத்திரா . ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ ஆக மாறிய தனுஷ்… சிம்புவுக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளாரா?…!!!

நடிகர் தனுஷ் ட்விட்டரில் தனது பயோவில் ‘அசுரன் நடிகர்’ என  குறிப்பிட்டிருப்பது  சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’ . இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ‘நீ அழிப்பதற்கு வந்த அசுரன்னா, நா காப்பதற்கு வந்த ஈஸ்வரன்’ என்ற வசனத்தை பேசியிருந்தார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘கலியுகம்’… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கலியுகம்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன், விக்ரம் வேதா ,ரிச்சி, கே 13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . சமீபத்தில் இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘மாறா’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது . இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் இணையும் ‘சலார் ‘… படத்தில் வில்லன் இவர் தானா ?…!!!

கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த  இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். தமிழ் ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’… அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் ஆரியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைசுழி’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன் பின்னர் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆரி. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் பிறந்தநாளுக்கு….”படக்குழு கொடுத்த பரிசு”…. குஷியான ரசிகர்கள்…!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “என்றென்றும் புன்னகை”, ஆம்பள” போன்ற படங்களிலிருந்து சந்தானத்திற்கேன்றே  தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பின்னர் சந்தானம் “தில்லுக்கு துட்டு” ,” சக்க போடுபோடு ராஜா”, “பிஸ்க்கோத்” போன்ற படங்களில் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த பிரண்ட்ஸ்… பிக்பாஸ் கேபி செம கொண்டாட்டம்…!!!

பிக்பாஸில் இருந்து வந்த கேபிக்கு அவரது நண்பர்கள் சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது . இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சிறப்பான வரவேற்புகள் கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரியல்லாவுக்கு அவரது நண்பர்கள் சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் . தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘சகுந்தலம்’… படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ… யார் தெரியுமா?…!!!!

நடிகை சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே சரித்திர, புராண படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . மேலும் புராண கதையம்சம் கொண்ட படங்கள் வசூலையும் வாரி குவிகிறது . இதனால் இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியுள்ளது . அந்த வகையில் சகுந்தலை புராண கதை தமிழ் ,தெலுங்கு மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது . ‘சகுந்தலம்’ என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த படத்தை பொல்லாதவன், ஜிகர்தண்டா ,ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் . மேலும் இந்த இப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… படத்தில் இணைந்த விஜய் பட நடிகர்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் பட நடிகர் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , நடிகைகள் நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர் . கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு உடல்நிலை சரியில்லை’… பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்றவர் ஆரி. இந்த சீசனின் டைட்டில் வென்ற ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆரிக்கு கோடிக்  கணக்கில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரியை நேரில் சந்திக்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானியின் மாற்றம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஷிவானியின் மாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேல் பங்கேற்றவர் ஷிவானி நாராயணன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம் . இதுயடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ரசிகர்கள் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’க்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா… அஜித் ரசிகர்கள் செய்த செயல்… இணையத்தில் செம வைரல்…!!!

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான செயலை செய்துள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட்க்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபலம்… யார் தெரியுமா?…!!!

பிகில் , மாஸ்டர் படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபலம் ஒருவர் ‘தளபதி 65’ படத்திலும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்குகிறார்  . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பூவையார் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் புதிய படம்… டைட்டிலுடன் வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானம் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சந்தானத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு தான் நடித்துவரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி சூப்பர் ஸ்டார்…. சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள்…!!

காமெடி நடிகர் சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். லொல்லு சபா நிகழ்ச்சியின் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சந்தானம். இவர்  திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டினார். இதையடுத்து கதாநாயகர்களுக்கு போட்டியாக சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்நிலையில் எத்தனை நாட்களுக்கு தான் காமெடியாகவே நடப்பது என்று ஹீரோ அவதாரம் எடுத்தவர். தற்போது தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் கோலிவுட்டை கலக்கி வருகிறார். இன்று அவருக்கு பிறந்த நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

25 வருட இயக்குனர்…. பல வெற்றி படங்கள்…. ரசிகர்கள் மனதில் நிற்கும் சுந்தர் சி…!!!

மக்கள் படம் பார்ப்பதே தங்கள் கவலைகளை மறந்து சந்தோசமாக இருக்க தான் அந்த வகையில் என்றும் மக்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை கொடுப்பவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவர் தனது ஆரம்ப நாட்களில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. முதல் படமே இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“சந்தானம் ஸ்பெஷல்” டீ கடை பெஞ்சில் தொடங்கி…. கவுண்டர்களால் ரசிகர்களை அள்ளியவர்…!!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக மாறி இருப்பவர்தான் சந்தானம். இவர் கொடுக்கும் டைமிங் கவுண்டருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. திரைப்படங்களில் பலரையும் கலாய்த்து ரசிகர்களை சிரிக்க வைக்கும் சந்தானம் பற்றிய தொகுப்பு சாந்தானத்தின் ஆரம்ப வாழ்க்கை  சந்தானம் சென்னை தாம்பரத்தில் ஜனவரி 21 1980இல் பிறந்தார். சிறுவயது முதல் குறும்புத்தனம் செய்யும் குணமுடைய சந்தானம் படிப்பில் சுமாராக இருந்துள்ளார். டிப்ளமோ முடித்த சந்தானம் ஆரம்பத்தில் வீட்டின் அருகே இருந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’… பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோவின் முதல் பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் ஆரி 16 கோடி வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார் . இதையடுத்து பாலாஜி இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது முதல் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் . அதில் ‘எல்லோரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லேடிஸ் ஹாஸ்டல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்… வெளியான தகவல்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் லேடிஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . தெலுங்கு திரையுலகில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பானு ஸ்ரீ ரெட்டி . இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . தற்போது ‘கேட்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆத்ரேயா விஜய் நடித்துள்ளார் . […]

Categories
சினிமா

நடந்தவரைக்கும் போதும்..! இனி அப்படி செய்ய மாட்டேன்… வனிதா எடுத்த முடிவு …!!

நடிகை வனிதா இனிமேல் நான் யார் பெயரையும் பச்சை குத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அதன்பின் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்கள் தற்போது பிரிந்து விட்டனர்.வனிதா மற்றும் பீட்டர் பால் சேர்ந்து இருந்த போது வனிதா பீட்டர் பாலின் பெயரையும், பீட்டர் பால் வனிதாவின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் வனிதா குத்தியிருந்த பீட்டர்பாலின் பெயரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட ரஜனி, கமல் பட மூத்த நடிகர் காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி…!!!

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமாகியுள்ளார் . தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான  நடிகர்களில் ஒருவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி . இவருக்கு வயது 98 ஆகும். இளமைப் பருவத்திலிருந்தே உடல் நலனில் அதிக அக்கறை கொண்ட இவர் பாடிபில்டராக இருந்துள்ளார் . இவர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் மற்றும் ரஜினியின் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் குணமடைந்தார் . […]

Categories
சினிமா பல்சுவை

பின்னணி இல்லாமல் வளர்ந்தவர்…. ஒரே படத்தில் பிரபலமானவர்…. சுஷாந்த் சிங் வரலாறு…!!

சுஷாந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு.  இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா என்ற ஊரில் 4 பெண் குழந்தைகளுக்கு பிறகு ஒரு அழகான குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையா அதுவும் ஒரு ஆண் குழந்தையாக பிறந்தார் சுஷான் சிங் ராஜ்புட். அவருடைய இளமை காலத்தில் அவருடைய குடும்பத்தில்  மிகவும்  செல்லப் பிள்ளையா இருந்ததற்கு காரணம் அவர் நான்கு பெண் பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை என்பதால் தான். அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமலுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி மெசேஜ்… வைரலாகும் டுவிட்…!!!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றவர் ஆரி. 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவுடன் பங்கேற்று டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் , திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ஆரி தனது சமூக வலைத்தளம் மூலம் நன்றியை தெரிவித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஜய்யின் பூனை வந்த அளவுக்கு கூட படத்தில் நீங்க வரலையே’… கலாய்த்த ரசிகர்… பதிலடி கொடுத்த ‘மாஸ்டர்’ நடிகர்…!!!

‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து கலாய்த்த ரசிகருக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது . ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பல நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வில்லை. குறிப்பாக சாந்தனு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக பிரபல நடிகர் காலமானார் – பெரும் சோகம்…!!

பிரபல நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உயிரிழந்துள்ளது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பம்மல் கே சம்பந்தம், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 97. ஏற்கனவே அவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அவர் திடீரென்று மரணம் அடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்’…ஆரியின் ரசிகர்கள் வேற லெவல்…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் ரசிகர்கள் காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும், சமூக சேவைகளையும் செய்து வந்தார் . பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் அதன் மூலம் கிடைத்துள்ள புகழை கொண்டு ஆரி இன்னும் பல சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FlashNews: நடிகை சித்ராவின் மரணம் – போலீசார் பரபரப்பு அறிவிப்பு…!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து காவல்துறையினர் பரபரப்பு தகவலை அறிவித்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய கணவரை காவல்துறையினர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகமடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது நெருங்கிய தோழியை சந்தித்த நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நதியா தனது நெருங்கிய தோழியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மலையாள திரையுலகில் நடித்து வந்த நடிகை நதியா தமிழ் திரையுலகில் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1985ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பாஸில் இயக்கியிருந்தார் . இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் ,பிரபு ,சிவகுமார் ,சத்யராஜ், மோகன், சுரேஷ் உட்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் . இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை” தாய் காரணமா….? வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு தொடர்பாக கணவர் ஹேம்நாத்தின் வாட்ஸ்அப் உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  டிவி தொடரில் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஹேம்நாத்தின் நண்பரான சையது ரோஹித் என்பவர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முடிந்து வீட்டுக்குப் போன ரியோ… செல்ல மகள் ரித்தியை கொஞ்சும் வீடியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு சென்ற ரியோ தன் மகளை கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரியோ ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் . இதையடுத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ‌. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சனம் ஷெட்டி நடிப்பில் ‘குருதிக்களம்’ வெப் தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

பிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்துள்ள ‘குருதிக்களம்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்ற வெப் தொடர் வருகிற ஜனவரி 22ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . கிரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த வெப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதமாகும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… இயக்குனர் சிவா எடுத்த அதிரடி முடிவு …!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் சிவா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ ,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா , சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்ம ஸ்மார்ட்டு ‘தல’ … வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்திற்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் . போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஜி கே ,தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘மே டே’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’…. படம் குறித்து இயக்குனர் ஓம் ராவத் டுவிட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சஹோ  படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை’… நடிகை சமந்தா முடிவு…!!!

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை’ என நடிகை சமந்தா முடிவு செய்துள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பின்னும்  படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார் . அதில் ‘நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன . அந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது . நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ படத்தில் வந்ததே ஏழு செகண்ட் தாண்டா’… கலாய்த்த ரசிகர்… தீனாவின் உருக்கமான பதில்…!!!

‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து கலாய்த்த ரசிகருக்கு தீனா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது . ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது என்று விமர்சனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்… கொந்தளித்த இயக்குனர்…!!!

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இயக்குனர் லக்ஷ்மண் டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் லக்ஷ்மண் தயாரிப்பில், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பூமி. அந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படம் எடுத்தேன். உங்களுக்காக தான் […]

Categories

Tech |