பிக்பாஸ் சோம் வீட்டில் அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான ரோனி இறந்து விட்டதாக குடும்பத்தினர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் . பிக்பாஸ் வீட்டில் சோம் அவரது செல்லப்பிராணி குறித்து அடிக்கடி கூறி இருப்பார் . குட்டு என்ற நாய் குட்டியை மிஸ் செய்வதாக அவர் பலமுறை தெரிவித்திருந்தார் . கடிதம் […]
Category: சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் இவர் தளபதி விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் . நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான […]
சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தது விஜய் சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]
பிக்பாஸ் ஆரியின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . இவர் பிக் பாஸுக்கு முன் நெடுஞ்சாலையில் ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஆரிக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் […]
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து வித்தியாசமான ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இந்த படம் கொரோனா ஊரடங்கால் தாமதமானது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம்வரும் நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகும் என […]
பிக்பாஸ் பிரபலம் கவின் நடிகர் அருண் அலெக்சாண்டர் மறைவு குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராக வலம் வருபவர் அருண் அலெக்சாண்டர் . கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக இருந்து வந்த இவர் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் . இவர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் , நெல்சன் திலீப் குமாரின் கோலமாவு கோகிலா மற்றும் கார்த்தியின் கைதி ,விஜயின் பிகில் உள்ளிட்ட படங்களில் […]
டெல்லியில் நடைபெற்று வந்த ‘அத்ரங்கிரே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் கதை இரண்டு வெவ்வேறு […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வர்த்தமனம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்க கேரள சென்சார் போடு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்க்குள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நுழைந்த ஒரு கும்பல் மாணவர்கள் மீதும், விரிவுரையாளர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத் திரைப்பட இயக்குனர் சித்தார்த சிவா ”வர்த்தமனம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகை பார்வதி தெரேவேத்து இத் […]
பிக்பாஸ் அனிதா அவரது தந்தை மறைவுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4-வது சீசனில் கலந்துகொண்டவர் அனிதா சம்பத் . இவர் கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார் . இன்று அனிதாவின் தந்தையும் பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான ஆர்.சி. சம்பத் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவால் அனிதா குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர் . தற்போது அனிதா வெளியிட்டுள்ள பதிவில் ,’என் தந்தை மதிப்பிற்குரிய ஆர்.சி.சம்பத் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக இறுதி நாட்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும் . இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் சிவானியின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் . முதலில் கண்கலங்கி கட்டியணைத்த ஷிவானியின் தாய் பின்னர் அவரை தனியே அழைத்துச் சென்று கேள்விகள் கேட்கிறார் . #Day86 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் […]
ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]
சமூக வலைத்தள பக்கத்தில் ‘ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம்’ என்ற ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அனிதா கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் . இவர் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு அணியுடனும் இணைந்து விளையாடாமல் தனித்துவமாக விளையாடுவதால் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். ஆனால் சில சமயங்களில் இவர் கோபத்தில் பத்ரகாளியாக மாறி […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் நேற்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பில் […]
நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாறா. இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,சிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக் . மலையாளத்தில் துல்கர் சல்மான் ,பார்வதிமேனன், நெடுமுடி வேணு […]
நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . பின்னர் நடிகர் சூர்யாவின் ‘என் ஜி கே’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . இதன் பின் மீண்டும் கார்த்தியுடன் ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் நடிகை […]
நடிகர் சூர்யாவின் படங்களை இனி ஓடிடி தளங்களிலேயே ரிலீஸ் செய்து கொள்ளட்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது . கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படமும் ஒரே தேதியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இரண்டு படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது . […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி-13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் பட வெளியீடு மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே […]
பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ்வீட்டில் அனைவரோடும் சண்டை போட்டு அதிகமாக பேசி வந்தார். மேலும் ஆரியிடம் தன குடும்பத்தை பற்றி பேச வேண்டாம் என்று ஆக்ரோஷமாக பேசினார். இதன் காரணமாகவோ, என்னவோ கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே சிறிய நாட்களிலேயே அவருடைய தந்தை ஆர்.சி சம்பத் இன்று திடீரென மாரடைப்பு […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி நாட்களை நெருங்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறும் . பிரீஸ் டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருகை தந்து உற்சாகப்படுத்துவர். இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் […]
பிக்பாஸ் அனிதாவின் தந்தையும் ,பத்திரிக்கையாளரும் ,எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் . 84 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அனிதா மக்களில் குறைவான வாக்குகளை பெற்று கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் . புத்தாண்டை எனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என நினைப்பதாக தெரிவித்த அனிதா வீட்டில் எதிர்பாராத துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தின் தந்தையும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான […]
பிரபல நடிகர் நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் நிவின் பாலி ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . இந்நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான ராம் இயக்கவுள்ள […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட அனிதா சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த நிலையில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்கள் ஒருவரான அனிதா சம்பத் ஆரியிடம் கோபப்பட்ட காரணத்தினால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் தாய் தந்தை கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார். ஆனால் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அனிதா […]
நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் . இவர் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதையடுத்து சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள ‘பத்து தல’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகவுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டீஸர் இணையத்தை தெறிக்க விட்டது . இதையடுத்து இந்தப் படத்தில் மலையாள பிரபல நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி நாட்களை நெருங்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறும் . பிரீஸ் டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருகை தருவர் . #Day86 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – […]
பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]
நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் மீண்டு வருவேன் என்றும், கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காமெடி நடிகர் யோகி பாபுவிற்க்கு மகன் பிறந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தன்னுடைய திறமையான உச்சத்தை தொட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் யோகிபாபு. இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை எளிமையாக திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். திருமண வரவேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் யோகிபாபு மனைவி கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து தற்போது அவருக்கு ஆண் குழந்தை […]
நடிகர் அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். இவர் மாநகரம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கியமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியிட உள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சோம் சேகர் செல்போன் பயன்படுத்துவது போன்று வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் யாரையும் சந்திக்க […]
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி நாளை 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ், கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எனவே மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் […]
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடிகர் துல்கர் […]
987 வது தடவையாக லயன் கிங் பார்ப்பதாக ட்வைன் ஜான்சன் தெரிவித்துள்ளார். ராக் என்று அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன் நடிப்பில் கடைசியாக Jumanji: The next level திரைப்படம் ரிலீஸானது. அடுத்ததாக Jungle Cruise திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட நாள் காதலி Laura Hashian-க்கு ஜாஸ்மின் என்ற மகள் பிறந்தபிறகு அவரை, கடந்த ஆண்டு திருமணம் ட்வைன் ஜான்சன் திருமணம் செய்துகொண்டார். மகள் ஜாஸ்மினுடன் லயன் கிங் படம் பார்க்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ட்வைன் […]
விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் 2017ல் ரிலீஸானது. இப்படத்தை புஷ்கர் காயத்ரி இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எப்போதுமே எங்கள் ராணி’ என பதிவிட்டு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் . அவரது மறைவால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர் . மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Always our queen pic.twitter.com/dWNc0MHeJ9 — G.V.Prakash Kumar (@gvprakash) December 28, 2020 ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் இசையமைப்பாளர் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படும் என, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல நடிகைகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் விலகி சென்று உள்ளனர். அவர்களில் சிலரை பற்றி இதில் பார்ப்போம். தல அஜித் படத்தில் நடித்தவர் பிரியா கில். இந்த படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்த பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காததால் திரையுலகில் இருந்து அப்படியே விலகிவிட்டார். அதேபோன்று அஜித்தின் […]
சூது கவ்வும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சூது கவ்வும்’ . இந்த படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது . கடந்த சில வருடங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது […]
நடிகை ராகுல் பிரீத் சிங் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . மேலும் நடிகர் சூர்யாவுடன் ‘என் ஜி கே’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா […]
அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]
நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘பூலோகம்’ பட இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர்கள் ஏராளம் . ரீமேக் படங்கள் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் பாலா மற்றும் கேபி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குறை கூறி பேசுகின்றனர் […]
நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் மனோபாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வரும் யோகி பாபு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது . யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் ,நண்பர்களும் கலந்துகொண்டிருந்தனர். நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… […]
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த […]
நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படத்தின் டிரைலர் நாளை அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக்தான் மாறா. மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான […]
பிக்பாஸ் பிரபலம் அனிதாவின் கணவர் சமூகவலைத்தள பக்கத்தில் என் தேவசேனா திரும்பி வந்து விட்டாள் என பதிவிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா. செய்தி வாசிப்பாளரான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் . நேற்றைய எபிசோடில் மக்களில் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார் . இவர் பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு அணியுடனும் சேராமல் தனித்துவமாக நின்று விளையாடி வந்தார் […]
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறும். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி நாட்களை நெருங்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் ‘பிரீஸ் டாஸ்க்’ நடைபெறும் . இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருவார்கள் . […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார். எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் […]
மறைந்த திரைப்பட பாடகரும், நடிகருமான எஸ் பி பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் புதுச்சேரி திரைப்படம் மெல்லிசை கலைஞர் சங்கம் சார்பில் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மெல்லிசை கலைஞர்கள் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் பாடல்களை பாடினர்.