Categories
சினிமா தமிழ் சினிமா

‘டைம் அப் ‘படத்தில் ஹீரோவான மொட்டை ராஜேந்திரன் … படம் குறித்து வெளியான தகவல்கள்…!!

பிரபல வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ‘டைம் அப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் வில்லனாக மிரட்டி வந்த மொட்டை ராஜேந்திரன் காமெடி கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தார் . தற்போது இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார் . ‘டைம் அப் ‘ என்ற படத்தில் ராஜேந்திரன் ஹீரோ , வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்கியுள்ள மனு பார்த்திபனும் படத்தில் ஹீரோ, வில்லன் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… படப்பிடிப்பில் இணைந்த சமந்தா…!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததுள்ளது. தற்போது இவர் இயக்கத்தில் தயாராகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து நடிகை சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ்… சூடுபிடிக்கும் கோழிப்பண்ணை டாஸ்க்… வெளியான முதல் புரோமோ ‌…!!

பிக்பாஸ்வீட்டில் இரண்டாவது நாளாக கோழிப்பண்ணை டாஸ்க் தொடர்கிறது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . இதில் கோழி, நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும், நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவிஞர் வைரமுத்து… திடீரென மருத்துவமனையில் அனுமதி…!!!

கவிஞர் வைரமுத்து இதயநோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வைரமுத்து மருத்துவமனையில் என்பது பற்றி அவரின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ முதல் பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன் …ட்விட்டரில் நன்றி தெரிவித்த த்ரிஷா…!!

‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு ட்விட்டரில் நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் ‌. Happy to release the 1st single from @trishtrashers ‘s #Raangi #Paniththuli […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அரசியலில் களமிறங்கும் அடுத்த நடிகர்… கட்சியின் பெயரை வெளியிட்டார்..!

“நான் அரசியலுக்கு வருவேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை” என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி விருது விழாவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசியதாவது: , […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்திய திரைப்பட விழா… பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது…!!

இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதுவை அரசு சார்பில் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது . புதுவை அரசின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரிலான இந்த விருதினை முதலமைச்சர் நாராயணசாமி இயக்குனர் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கமல், ரஜினியை தொடர்ந்து…. பிரபல தமிழ் நடிகர் புதிய கட்சி …!!

தமிழகத்தில் இரு ஆளுமைகளாக விளங்கிய முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி திரைப்பிரபலங்கள் அரசியலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்நிலையில்,  நடிகர் கமலஹாசன் – ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல் அகர்வால்… படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ படப்பிடிப்பில் நடிகை காஜல்அகர்வால் கணவருடன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவில் தேனிலவை முடித்து விட்டு மும்பை திரும்பிய காஜல்அகர்வால் விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் தற்போது நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்குக்கு நன்றி தெரிவித்த நடிகர் ஜெய்… என்ன காரணம் தெரியுமா?…!!

நடிகர் ஜெய் தனக்குள் இருந்த இசைக்கலைஞனை வெளிக்கொண்டுவந்த ஊரடங்குக்கு நன்றி கூறியிருக்கிறார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஷிவ ஷிவா’ . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சரத், சத்ரு, பாலசரவணன், அருள்தாஸ், காளி வெங்கட், ஜேபி, முத்துக்குமார், இயக்குனர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ‌. முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பனித்துளி விழுவதால் அணையாது தீபம்’… திரிஷாவின் ‘ராங்கி’ பட முதல் சிங்கிள் ரிலீஸ்…!!

நடிகை திரிஷாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் ‌. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் உஸ்பெகிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த  படப்பிடிப்பு கடும் குளிரையும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் சந்தானத்தின் மகன்… யார் படத்தில் தெரியுமா?…!!

நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் ,நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் தயாராகியுள்ள நிலையில் கார்த்திக் இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்திருப்பதாக தகவல் பரவி பின்னர் மறுக்கப்பட்டது . இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமேசான் பிரைமில் வெளியாகும் நடிகர் மாதவனின் ‘மாறா’… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அலெக்சாண்டர் பாபு, ஷிவதா, எம்.எஸ். பாஸ்கர், கிஷோர் ,அபிராமி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதிமேனன் மற்றும் டொவினோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபப்பட்டு பேசிய அர்ச்சனா… மனமுடைந்து பாலாவிடம் புலம்பும் ரியோ … வெளியான மூன்றாவது புரோமோ…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த டாஸ்க்கில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். #Day72 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘பிசாசு 2’ … படத்தின் ஒரு பாடலை பாடியுள்ள சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா…!!

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிசாசு’. இந்தப்படத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் ‘பிசாசு 2’ திரைப்படம் தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று இயக்குனர் மிஷ்கின் பூஜையுடன் ‘பிசாசு2’ படத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளார். இசையமைப்பாளர் கார்த்திக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நெகட்டிவ் கேரக்டரில் சமந்தா… சண்டைக்காட்சிகளில் மிரட்டிவிட்டார்… புகழும் இயக்குனர்…!!

நடிகை சமந்தா ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் சண்டைக்காட்சிகளில் மிரட்டியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஹிந்தி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரியாமணி ,ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . தற்போது இந்த தொடரின் 2வது சீசன் தயாராகியுள்ளது . இதில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இது குறித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… புதிய பரபரப்பை கிளப்பிய மாமனார்…!!!

நடிகை சித்ராவின் தற்கொலை பற்றி அவரின் மாமனார் வெளியிட்டுள்ள தகவல் மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நரி கூட்டமா தான் வரும்ன்னு சொன்ன அர்ச்சனா… நான் செஞ்சு காட்டுறேன்னு சவால் விடும் ஆரி… குழப்பத்தில் ஹவுஸ் மேட்ஸ்…!!!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கோழிப் பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா மற்றும் ஆரி இடையே வாக்குவாதம் நடக்கிறது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இனிவரும் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும் ‌ என தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்போ அடுத்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான் … பக்கா பிளான் போட்ட ‘தளபதி 65’ படக்குழு…!!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகவுள்ள ‘தளபதி65’ படம் குறித்து படக்குழு திட்டமிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜயின்’தளபதி 65′ படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற புத்தாண்டில் இந்த படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி 65 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ செத்து தொல’… சித்ரா தற்கொலை… இதுதான் காரணம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால் மனமுடைந்தது  தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய மிஷ்கினின் ‘பிசாசு- 2’… வெளியான தகவல்கள்…!!

இயக்குனர் மிஷ்கினின் ‘பிசாசு-2’ படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப்படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல் ,சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப்படத்தில் நாகா,ராதாரவி, பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் ‘பிசாசு -2’ தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இந்நிலையில் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… கணவர் கைது… பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற சித்ரா… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகளிடம் இருந்து வந்த தகவல்… ரியோவை கன்பெக்சன் ரூமுக்குள் அழ வைத்த பிக்பாஸ்…!!!

நேற்றைய எபிசோடில் ரியோவின் மகளிடம் இருந்து வந்த தகவலை கன்பெக்சன் ரூமுக்குள் ரியோவிடம் கூறியுள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரியிடம் பேசிக்கொண்டிருந்த ரியோவை கன்பெக்சன் ரூமுக்கு வரச்சொன்னார் பிக்பாஸ். உங்களுக்கு ஐ லவ் யூ சொல்றதா? முத்தம் கொடுக்கிறதா? என தெரியல பிக்பாஸ் என்றார் ரியோ . பின்னர் ரியோவிடம் நல்லா விளையாடுறீங்க. நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோழிப்பண்ணையாக மாறிய பிக்பாஸ் வீடு … தாறுமாறாக சண்டை போடும் போட்டியாளர்கள்… ஸ்பெஷல் பவர் யாருக்கு ?…!!!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது . பிக்பாஸ் 4-நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இனிவரும் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும் ‌ என தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முல்லை கதாபாத்திரத்தில்… இனிமேல் இவங்க தான்… வெளியான அறிவிப்பு..!!

பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தை பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை காவியா தற்போது கையில் எடுத்துள்ளார். பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா. தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது நடிப்பில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு காரணம் பாரதிகண்ணம்மா இவருக்கு கிடைத்த முக்கிய கதாபாத்திரம். நாயகனின் தங்கையாக நடித்த அறிவுமணி கண்ணம்மாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாலேயே சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஊரடங்கு தொடங்கிய காலத்தில் ஏராளமான போட்டோ […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

சித்ரா கணவருக்கு சிறை….. விசாரணையில் பரபரப்பு வாக்கு மூலம் …!!

சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். கடந்த ஆறு நாள்களாக ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். மேலும், நேற்று (டிச. 14) ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவுள்ள நிலையில், காவல் துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சித்ரா மரணம்” கணவர் கைது… பரபரப்பு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் நேற்று இரவு அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டை யில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக போலீசார் சித்ராவின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவிற்கு திருமணம் முடிந்து விட்டதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்… விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை படம்… வெளியான அறிவிப்பு..!!

செஸ் ஜீனியஸ் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக செஸ் சாம்பியனாகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை கதையை பாலிவுட்டில் படமாக எடுக்க உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த், சூசன் என்கிற எழுத்தாளருடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் பெஸ்ட் செல்லராக விளங்கியது. அந்நூலை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் படமாக்கவுள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2020யில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள்… லிஸ்டில் இடம் பெறாத லேடி சூப்பர் ஸ்டார்… ரசிகர்கள் வருத்தம்…!!

2020யில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆண்டுதோறும் சமூக வலைதளமான ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்கள், நடிகர்கள் , நடிகைகள் குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதில் இந்த வருடம் அதிகம் ட்விட்டரில் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தை நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பெற்றுள்ளது . அதேபோல் அதிகம் ட்வீட்  செய்யப்பட்ட நடிகர்கள் பட்டியலில் விஜய் 3வது இடத்தையும், சூர்யா 5வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன ரீயூனியன் போட்ட பிக்பாஸ் பிரபலங்கள் … சுசித்ரா, சனம் வராததன் காரணம்… ரேகா வெளியிட்ட வீடியோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் -4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா ,வேல்முருகன் ,சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ,சனம், ரமேஷ் ,நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . இந்நிலையில்  வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் ஆகியோர் ஒரு சிறிய ரியூனியன் போட்டுள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட சிம்ரன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

நடிகை சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித் ,விக்ரம், சூர்யா என பல  முன்னணி கதாநாயகர்களின்  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் . பின்னர் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . When your hairstyle and makeup […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதல் ‘ பட பரத் -சந்தியா… 16 வருடங்களுக்குப் பின் சந்தித்து எடுத்துக் கொண்ட செல்ஃபி…!!!

‘காதல்’ படத்தில் நடித்திருந்த பரத் மற்றும் சந்தியா இருவரும் 16 வருடங்களுக்குப் பின் சந்தித்து எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் இன்றுவரை மறக்க முடியாத திரைப்படம் ‘காதல்’. 2004 ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா நடித்திருந்தனர் . இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூலை வாரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… படம் குறித்து வெளியான தகவல்கள் …!!!

நடிகர் அசோக்செல்வன் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும் அறிமுகமாகிய பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இதன் பின்னர் அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது . இவர் நடிகர் கார்த்தியின்  ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் ,எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்திலும், அருண் விஜய்யின் ‘மாஃபியா’ படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்டிஓ விசாரணை… சித்ராவின் தாய் பரபரப்பு பேட்டி…!!!

தன் மகள் சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம் என்று ஆர்டிஓ விசாரணையில் கூறியிருப்பதாக சித்ராவின் தாய் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாருக்கு ஜோடியாக ரெண்டு ஹீரோயின்ஸ் … படத்தோட டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார் . இந்தப் படத்தில் சசிகுமாருக்குஜோடியாக நடிகை வாணி போஜன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்… வெளியான சூப்பர் தகவல்கள்…!!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் அசத்தி வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி . இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு ,நட்பே துணை ,நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது இவரது அடுத்த படத்தை பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், நெப்போலியன், விதார்த், காஷ்மிரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ச்சனா குரூப்புக்கு ஆப்பு வைக்கும் போட்டியாளர்கள் … நாமினேசனில் சிக்கியது யார்?…!!

பிக்பாஸ்-4  நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று இருவர் வெளியேற்றப்பட்டனர் . இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது . அதில் ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காரணத்தோடு இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே 2 புரோமோக்கள்  வெளியான நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருகில் மகளுடன் ‘அண்ணாத்த’ கெட்டப்பில் ரஜினி… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

‘அண்ணாத்த’ பட கெட்டப்பில் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அருகில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் திரைப்படம் ‘அண்ணாத்த’ .இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர் ‌. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன் பேச தைரியம் இல்லாம போரிங்க… வம்பிழுக்கும் அனிதா… டென்சனாகும் ரியோ…!!!

பிக்பாஸ்-4  நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதா மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் நடக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த வாரம் யாரும் எதிர்பாராதவிதமாக டபுள் எவிக்சன் நடைபெற்று இருவர் வெளியேற்றப்பட்டனர். அதில் அர்ச்சனாவின் அன்பு டீமில் இருந்த ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியதால் அந்த குரூப்பில் இருந்தவர்கள் சோகத்தில் இருந்தனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் வீட்டுக்குள் ஓபன் எவிக்ஷன் நடைபெறுகிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறந்த பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை… ஒரு மாதத்துக்கு பின் உடல் அடக்கம்… கண்ணீர்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது சீசன் 4 நடந்து வருகிறது. கடந்த சீசனில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த மாதம் கனடாவில் திடீரென உயிரிழந்தார். அது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பிறகு ஒரு மாதத்துக்கு பின் மரியநேசன் உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2020யில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்கள்… முதலிடத்தை பிடித்து மாஸ் சாதனை படைத்த ‘மாஸ்டர்’ படம்…!!

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்தியப் படங்களில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது . ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. https://twitter.com/TwitterIndia/status/1338346797706539008 அதில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய திரை பிரபலம்… சென்னையில் திடீர் மரணம்… சோகம்…!!!

3 முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்ற சென்னையில் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் இந்த வருடம் மிக மோசமான வருடமாக அமைந்துள்ளது. கொரோனா முதல் புயல் வரை பல்வேறு பாதிப்புகள் மக்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் திடீர் மரணம் அடைகின்றனர். அது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டையை கிளப்பும் ‘ஈஸ்வரன்’ படத்தின் தமிழன் பாட்டு … உற்சாகத்தில் ரசிகர்கள் …!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் ‘தமிழன் பாட்டு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்பதும் அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவின் படத்தில் அறிமுகமாகும் அருண் விஜய் மகன்… வாழ்த்தும் திரையுலகம்…!!!

நடிகர் அருண் விஜய்யின் மகன் பிரபல ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் இவரது மகன் அர்னவ் விஜய் சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். With all your blessings, extremely happy to announce that my son Arnav […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெல்கம் டு அறந்தாங்கி நிஷா’… ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட நிஷாவை  அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முதலாவதாக சனிக்கிழமை எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து நேற்றைய எபிசோடில் அறந்தாங்கி நிஷா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் கண்ணீரோடு அவரை வழியனுப்பி வைத்தனர் . ஆனால் நிஷாவின் குடும்பத்தினர் அவரை ஆரத்தி எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகை மரணம்… தொடரும் மர்மம்… முக்கிய தகவல்…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்டிஓ இன்று முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… சோகம்…!!!

நாட்டுப்புற இசையில் முதல் கருப்பின சூப்பர் ஸ்டாரான பிரபல பாடகர் சார்லி பிரைட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதும் உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது வரை முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவியின் ‘பூமி’… படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு …!!!

நடிகர் ஜெயம்ரவி  ‘பூமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார் .  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’ . இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் ‌ . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்… ஹீரோயின் யார் தெரியுமா?…!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது இவர் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் […]

Categories

Tech |