Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரொம்ப… ரொம்ப சிம்பிளா…. ஹிந்தி பட அப்டேட் கொடுத்த தனுஷ்….. குஷியில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவர் தனுஷ். அசாத்திய நடிப்புத் திறமை கொண்ட இவர், பல தேசிய விருதுகளை வாங்கியதுடன் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் ஹாலிவுட் படத்திலும் நடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் அத்ராங்கி ரே என்ற படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெய் நடிக்கும்… அதிரடி கிராபிக்ஸ் திரைப்படம் “பிரேகிங் நியூஸ்”…!!!

நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படத்தில், அவர் மிக ஒத்துழைப்புடன் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது: நடிகர் ஜெய் அவர்கள் தற்பொழுது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் தனக்காக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். தற்போது நடித்து கொண்டிருக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படம், “வேற லெவெளில்”நடித்துள்ளார் என தெரிகிறது. திருகடல் உதயம் அவர்கள் தயாரிப்பில், ஆண்ட்ரு  இயக்கியுள்ள படம்தான் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் ஜெய்க்கு திருப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பண மாலையணிந்த பிரியா ஆனந்த் … வைரலாகும் புகைப்படம் …!!

நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ள ஹிந்தி வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை பிரியா ஆனந்த் ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது நடிகை பிரியா ஆனந்த் ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JustNow: மிக பிரபல தமிழ் நடிகர் மதுரையில் காலமானார் – அதிர்ச்சி செய்தி …!!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சற்று முன் காலமானார். 60 வயதான இவர்  அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மருத்துவ உதவி கோரிய நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பொருளாதார உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்களையும், நடிகர்களையும் தவசியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு இரட்டை வேடமா?… வலைத்தளங்களில் பரவும் செய்தி… விளக்கமளித்த தயாரிப்பாளர்…!!

‘மாநாடு’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு  போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முதல் போஸ்டரில் இஸ்லாமிய இளைஞன் போல் தோற்றமளிக்கும் சிம்பு தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரார்த்தனை செய்வது போல் அமைந்திருந்தது . இரண்டாவது போஸ்டரில் சிம்புவின் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற போஸ் இருந்தது […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BigBreaking: நடிகர் தவசி காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி …!!

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி (60) சிகிச்சை பலனின்றி காலமானார். உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தவசி. ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் தவசி. தவசி சிகிச்சைக்காக நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தவசி. தவசின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதமுக்கு செல்போன் மீது காதல் … கணவர் பற்றி காஜல் அளித்த பேட்டி…!!

நடிகை காஜல் அகர்வால் அவரது கணவர் கவுதம் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார் . தமிழ் திரையுலக பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவுடன் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்  கணவர் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. நானாக தான் அவரை உட்கார வைத்து படம் பார்க்க வைப்பேன் . கவுதமிற்கு அவரது செல்போன் மீது  காதல், அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

VPF கட்டணம் செலுத்த முடியாது என உறுதி – தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி

VPF  கட்டணம் செலுத்த முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு. முரளி தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் ரகிட ரகிட நடனம்’… பிரபல இயக்குனர் வெளியிட்ட வீடியோ…!!

நடிகர் தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு இயக்குனர் செல்வராகவன் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ ஜகமே தந்திரம்’ . மே மாதம் திரைக்கு வரவேண்டிய இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் ‘ ரகிட ரகிட ‘ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு குழந்தைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புரமோஷன் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டாத அதுல்யா … ‘என் பெயர் அனந்தன்’ படக்குழு புகார்…!!

நடிகை அதுல்யா  புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நான்கு முறை சிறந்த படத்துக்கான விருதினை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரிந்து சென்ற மனைவி… சினிமா வாழ்க்கையும் போய்விட்டது… விரக்தியில் இம்ரான்கான் எடுத்த முடிவு…!!

பிரபல இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் இம்ரான் கான் ‘ஜனே து யா ஜனே நா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர்  ஐ ஹேட் லவ் ஸ்டோரி, ஹிட்நேப், ஹோரி தேரே பியார் மெய்ன், டெல்லி பெல்லி, கட்டி பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில்  நடித்திருந்தார்.   முதல் படத்திற்குப் பிறகு இம்ரான் கான் நடிப்பில் வெளியான அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று எனப்படுகின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்து வரும் நிலையில் சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பி.ல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதில் பி.ல். தேனப்பன் மட்டும் எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றமா?… பிக்பாஸ் குறித்து வெளியான தகவல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும்  சுசித்ரா ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். நேற்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்த நிலையில் வீட்டினுள் இன்னும் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற தேனாண்டாள் முரளி …!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்  தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும்  இந்த தேர்தலில் துணைத்தலைவர் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு  வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் ஒரு சாதனை… பட்டிதொட்டியெங்கும் ”மாஸ்டர்”….. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் …!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பை நடத்துகிறோம் … சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி…!!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்தது. தற்போது இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில்  அனிருத் இசையமைத்த ‘செல்லம்மா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது . இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிப்பு கேட்கணும் இல்லன்னா ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்கணும்… பிக்பாஸ் பாலாஜி மீது பாய்ந்த வழக்கு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக ஜோ மைக்கேல் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன்  தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4-வது சீசனில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் என்ற போட்டியாளரின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அழகிப்போட்டி ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டி ஏற்பாட்டாளரையும் அவர் கம்பெனியில் கலந்துகொண்ட பெண்களையும் பற்றி பாலாஜி தவறாக சித்தரித்துள்ளார். தற்போது அந்த அழகிப்போட்டியின்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை காப்பவர் இவர்தான்’… சுசித்ரா போட்ட ஆன்மீக பதிவு… வாழ்த்திய ரசிகர்கள் …!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுசித்ரா இன்ஸ்டாகிராமில் ஆன்மீக புகைப்படம்  ஒன்றைப் பகிர்ந்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா ,வேல் முருகன் மற்றும் சுரேஷ்  ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப்பெற்று சுசித்ரா வெளியேறப் போவதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் அடுத்த படம்… ஹீரோயின் இவர்தான்… வெளியான தகவல்…!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின்- 40வது திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யாவின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  ராஷ்மிகா மந்தனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதை கூறிய நெல்சன்… ஓகே சொன்ன விஜய்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய்யின் தளபதி 65 இயக்குவது யார்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த  இயக்குனர் நெல்சன் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது நிஜ பாம்பு இல்லை… விளக்கமளித்த சுசீந்திரன்… ஏற்றுக்கொண்ட வனத்துறை…!!

‘ஈஸ்வரன்’ திரைப்பட விவகாரத்தில் சுசீந்திரன் அளித்த விளக்கத்தை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டனர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’  திரைப்படத்தில் சிம்பு பாம்பு ஒன்றை கையில் பிடித்திருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சைக்குள்ளானது . அந்தக் காட்சி நிஜ பாம்பை வைத்து படமாக்கப்பட்டதாக சந்தேகித்து ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.     இதையடுத்து இயக்குனர் சுசீந்திரன், ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு என்றும் அதற்கான ஆதாரங்களையும் நேரில் ஆஜராகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் நம்ப வேண்டாம்… ரஜினி குறித்து பரவும் வதந்தி… விளக்கமளித்த பி.ஆர்.ஓ

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரது  பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரஜினியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைலன்ஸ் எதிர்பார்த்தபடி இல்ல… “இனி இவங்க கூட மட்டும் தான் நடிப்பேன்” அனுஷ்கா அதிரடி முடிவு…

வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கப்  போவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.  தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகை அனுஷ்கா, அவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பலகி ஆகிய முக்கிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.  இவர் தனது  நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடிப்பில் தற்போது வெளியான சைலன்ஸ் படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால்  பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று  படங்கலை நிராகரித்து விட்டதாக  கூறப்படுகிறது. மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை சனாகானின் திடீர் திருமணம்… வைரலாகும் திருமண வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பாலிவுட் நடிகை சனாகான் சூரத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை சனாகான் ஈ, சிலம்பாட்டம், பயணம், தம்பிக்கு இந்த ஊரு, ஒரு நடிகையின் கதை ,ஆயிரம் விளக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் இவர்மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்றைய நிகழ்ச்சி : புதிய பிரபலம் என்ட்ரி…. எலிமினேஷன் இவர்தான்…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு காரணம் கடந்த காலங்களை விட இந்த சீசனில் ஏராளமான சண்டை நிகழ்வுகளும், சுவாரசியமான நிகழ்வுகளும் அதிகம் நடப்பதே. அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகளும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இந்நிலையில்  வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலம் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கும். இதுவரை இந்த சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகும் சின்னத்திரை நடிகர்… வெளியான தகவல்…

பிக்பாஸ் -4  நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் -4ஆம் தேதி  தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இதுவரை ரேகா ,வேல் முருகன் ,சுரேஷ் ஆகியோர்  வெளியேற்றப்பட்டுள்ளனர் .மேலும்  அர்ச்சனா ,சுசித்ரா ஆகியோர்  வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் கொடுத்த பரிசு… சஞ்சீவ் போட்ட பிரெண்ட்ஷிப் பதிவு… குவியும் லைக்ஸ்…!!

நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் விஜய்யுடனான நட்பு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ மாஸ்டர் ‘ திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் விஜய்யுடனான தனது நட்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் அணிந்திருந்தது போன்ற சட்டையை சஞ்சீவ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. Okey! I've come across lot of collage pics regarding this costume. Yes! It's a […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… வெளியானது ‘மாநாடு’ செகண்ட் லுக்… வெளியிட்ட வெங்கட் பிரபு…!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’ . இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று காலை மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு டுவிட்டரில் வெளியிட்டார். அதில்  சிம்பு இஸ்லாமிய தோற்றத்துடன் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்க பிரார்த்தனை செய்வது போல் அமைந்திருந்தது. இந்த போஸ்டரை சிம்புவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் – 4 ல் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்…. வெளியான தகவல்…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சுசித்ரா வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் -4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இந்த சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் மக்களின் குறைவான வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் பிக்பாஸ் சீசன் 4… இவரா இந்த வாரம் எலிமினேட்?… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…!!!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீகாந்த்தின் ‘எக்கோ’…. படத்தில் இணையும் பிரபல நடிகர் … வெளியான தகவல்…!!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘எக்கோ’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘எக்கோ’. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் வித்யா பிரதீப் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில்  இந்த திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி ஒரு வருஷத்துக்கு ஒரு படம் தான் … அனுஷ்கா எடுத்த முடிவு… காரணம் என்ன தெரியுமா?

நடிகை அனுஷ்கா ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை அனுஷ்கா தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்  இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியைக்கண்டது. இந்நிலையில்  தற்போது நடிகை அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தொடங்குகிறதா படப்பிடிப்பு ? … ‘இந்தியன்- 2’ குறித்து வெளியான தகவல்…!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் -2 ‘ திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார். அதன்பிறகு தொடங்கப்பட்ட படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து உயிரிழப்பு ஏற்பட்டது. பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டைய கிளப்பும் ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக்… வெளியிட்ட சிம்பு… வைரலாக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு அசத்தலாக  நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக  நடித்துள்ளார் . மேலும் இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். #MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பர்களின் வருத்தம்… ஜி.ஆர்.கோபிநாத்தின் விளக்கம்… ‘மசாலா’வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது…!!

சூரரைப் போற்று திரைப்படம் குறித்து அதிருப்தி அடைந்த தனது நண்பர்களுக்கு ஜி.ஆர்.கோபிநாத் விளக்கமளித்துள்ளார் . சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தைப் பற்றி ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். இந்நிலையில் ஜி. ஆர்.கோபிநாத் சூரரைப்போற்று திரைப்படம் Simply Fly புத்தகத்தில் கூறப்பட்ட உண்மை சம்பவங்களை காட்டவில்லை என தனது நண்பர்கள் சிலர் அதிருப்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கபடதாரி’ முடித்து ‘ரேஞ்சர்’… படப்பிடிப்பில் வேகம் காட்டும் சிபிராஜ் … பாராட்டும் ரசிகர்கள்…!!!

நடிகர் சிபி சத்யராஜ் கபடதாரி பட பணிகளை முடித்து ரேஞ்சர் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபி சத்யராஜ். தற்போது இவர் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர்’  திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் மற்றும் மதுசாலினி நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்திற்கு அரோல்கரோலி  இசையமைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துக் கொன்று தின்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா ரசிகர்களுக்கு இன்ப செய்தி : டிசம்பர் 5,6இல் முற்றிலும் இலவசம்….. வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே சினிமா ரசிகர்கள் அனைவரும் OTT தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்களுக்குச் சென்று படங்களை பார்வையிட தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டை விட தற்போது OTT தளங்களில் வெப்சீரிஸ் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தியர்களில் பலர் நெட்ப்ளிக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவிற்கு திருமணம்… அடுத்த ஆண்டில் நல்ல வரன் கிடைக்கும்… சொன்னது யார் தெரியுமா?…!!

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி அவரது தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர்  உறுதியான தகவல் அளித்துள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. அதோடு சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திலும் சிம்பு  நடித்துள்ளார் .சமீபகாலமாக சிம்பு  சமூக வலைத்தளங்களில் தன் படங்கள் குறித்து அவ்வப்போது அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் அறிய அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்றாவது ஒரு நாள்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… வலைத்தளங்களில் வைரல்… மகிழ்ச்சியில் படக்குழு…!!

இயக்குனர் வெற்றிமாறன் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குனர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் நடிகர் வித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘என்றாவது ஒருநாள்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சேதுபதி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்த ராகவன் நடித்துள்ளார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். கிராமப்புற மக்களின் எளிமையான வாழ்வையும் கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவையும், உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் புதிய படம் குறித்து வெளியான தகவல்கள்… எகிறும் எதிர்பார்ப்பு…!!

நடிகர் கார்த்தி நடிப்பில்  தயாராகும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் கார்த்தி பல ஹிட் படங்கள் கொடுத்து அசத்தியவர். இவர் நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது இவர் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார் .இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்த திரைப்படத்தில் கார்த்தி 2 கதாநாயகிகளுடன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கார்த்தியின் இரட்டை வேட நடிப்பில்  வெளியான  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையா பேய் படத்துக்கு ரூ.2 கோடி … பிரம்மாண்டமா செட் போட்ட சுந்தர்.சி… பயங்கரமா உருவாகும் “அரண்மனை 3″…!!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 3 திரைப்படத்திற்கு ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சண்டைக் காட்சிகள்  படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ‘அரண்மனை 3’ உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படத்தில் சுந்தர். சி, ஆர்யா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத் ,விவேக், மனோபாலா ,வேல  ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் முறையாக பேய் படத்துக்கு 2 […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: வலிமை சூட்டிங்கில் அஜித் காயம் – அதிர்ச்சி தகவல் …!!

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம்  ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் வலிமை படத்தின் சூட்டிங் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

இன்டர்நேஷனல் ஆல்பம் படைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் … வெளியானது இரண்டாம் சிங்கிள்… பாராட்டும் இசைப் பிரியர்கள்…!!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ட்ராப் சிட்டி ‘ ஹாலிவுட் திரைப்படத்தின்  இரண்டாம் பாடல் வெளியானது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி . பிரகாஷ் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் அடங்காதே , ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ,4G, ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் முதல் முதலாக ஜி.வி. பிரகாஷ் ஹாலிவுட்டில்’ட்ராப் சிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மையா…. பொய்யா…. சிம்பு டீசர் பகிர தடை…. விலங்குகள் நலவாரியம் உத்தரவு…!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வெளியான டீசரில் நடிகர் சிம்பு தனது கையில் பாம்பு ஒன்றை தூக்கி வருவது போல காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிக்கு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், ஈஸ்வரன் பட குழுவின் சார்பில் அது கிராபிக்ஸ் காட்சி என்று விளக்கம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய அனுமதி பெறும் வரை, படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தலைவி” இறுதிகட்ட படப்பிடிப்பு… ஹைதராபாத் கிளம்பிய கங்கனா… புகைப்படத்துடன் போட்ட ட்வீட் …!!

நடிகை கங்கனா ‘தலைவி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்க்கு கிளம்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது கங்கனா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். It’s never easy to say bye but time to […]

Categories
சினிமா

முறுக்கு மீசையுடன் வந்து “I am back ” சொல்லுங்க…. தவசிக்கு நம்பிக்கையூட்டிய ரோபோ சங்கர்…!!

மீசையுடன் மீண்டு வர வேண்டும் என்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட தவசிக்கு ரோபோ சங்கர் நம்பிக்கையூட்டி உள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார். உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உறவுக்கார பெண்ணுடன் மலர்ந்த காதல்… ரகசியமாக திருமணம் செய்த பிரபுதேவா… வெளியான தகவல்கள்…!!

பெற்றோர் சம்மதத்துடன் பிரபுதேவா ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபுதேவா. பல வருடங்களுக்கு முன்  பிரபுதேவா நடிகை நயன்தாராவை விரும்புவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரபுதேவா அவரது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். அனால் நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்ததால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராபிக்ஸ் பாம்பாவே இருந்தாலும் அனுமதி வாங்கிருக்கனும் … டீசர், போஸ்டர் பகிர்வத நிறுத்துங்க… ‘ஈஸ்வரன்’ க்கு வந்த சிக்கல்…!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீஸர் ,போஸ்டர் பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசரும் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படக்குழு வெளியிட்ட மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த படக்குழு அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என தெரிவித்தனர்.  திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் செய்த உதவி… ஏழை மாணவியின் டாக்டர் கனவு… குவியும் வாழ்த்து…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பல ஹிட் படங்கள் கொடுத்து நட்சத்திர நாயகனாக வலம் வருபவர். சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் சிவா நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு ஹீரோவாக மாறியுள்ளார். அந்த வகையில் தற்போது ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியிருக்கிறார். பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் சஹானா. இவர் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு அருகில் துப்பாக்கி… பின்னணியில் நடக்கும் கலவரம்…பரபரப்பா இருக்கும் ஃபஸ்ட் லுக் அப்டேட்….!!!

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மீசை, பெரிய தாடி என அசத்தலான தோற்றத்துடன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்திருக்கிறார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Inshallah First […]

Categories

Tech |