தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தொடங்கி தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உச்சம் பெற்றவர் நடிகை நயன்தாரா. நட்சத்திர நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் பெறும் நாயகியாக விளங்கும் நயன்தாராவுக்கு வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு இல்லாத ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் […]
Category: சினிமா
நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் ரேஞ்சர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ் திரையுலகில் நடிகர் சிபிராஜ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது சிபிராஜ் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் .இந்த திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை அடித்துக்கொன்று தின்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக […]
நடிகர் ஆர்யா மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அடையாளம் தெரியாதபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில் நடிகர் ஆர்யா பல ஹிட் படங்களை கொடுத்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வருபவர். இவர் நடிகை சாய்சாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனாவால் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் வெளியாவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. Travel mode for the first time after Covid […]
90 கிட்ஸ்களுக்கு பிடித்தமான டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் திரைப்படமாக வெளியாக உள்ளது 90 கிட்ஸ்களால் அதிகமாக பார்க்கப்பட்ட கார்ட்டூன் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி. தற்போது உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் மூழ்கி இருப்பதனால் இது போன்ற கார்ட்டூன்களை பார்ப்பதில்லை. காமெடி, பாசம், சண்டை என அனைத்தும் நிறைந்ததாகவே டாம் அண்ட் ஜெர்ரி இருக்கும். தற்போது 90ஸ் கிட்ஸ்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படமாக வெளியாக உள்ளது. படத்தின் அனிமேஷன் ட்ரைலர் வெளியாகியிருக்கும் […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகளை வெவ்வேறு தேதிகளில் அறிவிப்பதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஓயாத அலைகள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த அணியின் வேட்பாளரான தயாரிப்பாளர் திரு. விஜயசேகரன் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகளை ஒரே தேதியில் அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை வெளியிடுவதாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுல பிரபல நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் மாநாடு திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை 09:09 மணிக்கு வெளியிடுவதாக இயக்குனர் வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார். […]
நடிகர் விஜயின் 65 -வது திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இது விஜயின் 64-வது படமாகும். இதை தொடர்ந்து தளபதியின் 65 -வது திரைப்படத்தை இயக்குவது யார்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கவிருந்த நிலையில் சம்பள பிரச்சினையால் படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பின் இப்படத்தை மகிழ்திருமேனி, பேரரசு ,மோகன்ராஜா, ஹரி ஆகியோர் இயக்க வாய்ப்புகள் […]
நடிகை நயன்தாரா தற்போது நடித்துவரும் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக விளங்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் . இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் டோரா ,அறம் ,கோலமாவு கோகிலா ,ஐரா ,கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படத்திலும் […]
தமிழ் திரையுலக பிரபல வில்லன் நடிகர் டுவிட்டரில் ‘எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன் தான் ‘ என்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். பின்னர் ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். ஆனந்தராஜ் கொடூர வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் தான் அவருக்கு சிறந்த […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உதவி கோரிய நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார். உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் […]
நடிகர் சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டிவி சேனல் பெற்றுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் சந்தானம் காமெடி நடிகராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக அவதாரமெடுத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நடிப்பில் ‘பிஸ்கோத்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் தாரா அலிசா ,லொள்ளு சபா மனோகர் ,மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]
நடிகர் சிம்பு நீச்சல் குளத்தில் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து பெரிய தாடி, மீசை என அசத்தலாக மாறி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “THE BEST PROJECT […]
நடிகர் சரத்குமார் உடற்பயிற்சி செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலக முன்னணி ஹீரோவாக இருந்த சரத்குமாரின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றது . இவர் நடிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம் ,நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி சரத்குமார் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சரத்குமாரா இது ? 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா ? என ரசிகர்களை […]
நடிகை திரிஷா குதிரையேற்ற பயிற்சியை முறையாகப் பயின்று அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களுடன் ஹிட் படங்கள் கொடுத்தவர். திரிஷா சாகசங்களில் செய்வதில் ஆர்வம் கொண்டவர். வானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் , ஆல் கடலில் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் என பல சாகசங்களை ஆர்வத்தோடு செய்துள்ளார். தற்போது இவர் குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்து இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்று அசத்தியுள்ளார் […]
நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through […]
நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் இயக்குனர் செல்வராகவன் நாயகனாகவும் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் ,சூர்யா ,கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களின் பல வெற்றிப்படங்களை உருவாக்கிய இயக்குனர் செல்வராகவன். தற்போது இவர் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி , நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றது . இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை […]
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற காமெடியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தவசி. மீம்ஸ்களின் மூலம் பலர் மனதில் பதிந்த அவரது முகம் தற்போது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். அவர் தனக்கு உதவ வேண்டி மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்நிலையில் சரவணா மருத்துவமனையில் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டது. தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் […]
பிரபல வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி (85) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடலில் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தாதா சாகிப் பால்கே, பத்மபூஷன் உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இவர் தீன் கன்யா என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். உலகப் புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேயின் ஏராளமான திரைப்படங்களில் […]
மாஸ்டர் படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன . கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை ரசிகர்கள் உற்சாகத்துடன் காணும் […]
இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா ,யோகி பாபு நடிப்பில் தயாரான ‘சலூன் ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, தமிழ் படம் என பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். காமெடி நடிகராக […]
சேரன் டுவிட்டரில் லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் லாஸ்லியாவும், சேரனும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் பாசம் வைத்திருந்தனர். சேரன் லாஸ்லியாவை தனது மகள் போல கவனித்து கொண்டார். லாஸ்லியாவும் சேரனை பார்க்கும் போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறினார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இதனால் சேரன் ட்விட்டரில் லாஸ்லியாவின் தந்தை […]
நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகர் ,நடிகைகளை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் என கூறியுள்ளார். தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தென்னிந்தியாவில் மக்கள் சினிமாவிற்கு அதிக ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகர், நடிகைகளை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் . தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படப்பிடிப்புகளை திட்டமிட்டு விரைவாக முடித்து விடுகின்றனர். ரசிகர்களின் பெரும் ஆதரவால் 200 கோடிக்கும் படங்கள் வசூல் செய்யப் படுகின்றன. […]
நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே திருட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஆர். ஜே.பாலாஜி நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே திருட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் சூர்யா நடிப்பில் கடந்த […]
தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடி […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தை பேசி மிகவும் பிரபலமடைந்த நடிகர் தவசி. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை வாய்விட்டு சிரிக்க வைத்த இந்த மனிதரை நாம் ஆரோக்கியமான உடல்நிலையில் கண்டிருப்போம். ஆனால் தற்போது உடல் நலம் குன்றி மெலிந்த தோற்றத்தில் எலும்பும், தோலுமாக இருக்கும் அவர் […]
தீபாவளியன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெரும்பாலும் குடும்பங்கள் கண்டுகளிக்கும் வெற்றிப்படமாக இந்த திரைப்படம் திகழ்ந்து வருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும், படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா, ஊர்வசி ஆகியோருக்கும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் மதத்தின் பெயரால் சம காலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தை கொண்டு மக்களை […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மையம் அமைக்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருக்கிறார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபல தமிழ் நடிகரான விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டீசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், குறுகிய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று, உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இது நம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் நூறு கோடி […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான லாஸ்லியாவின் தந்தை திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அவருக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளங்களில் பல ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை லாஸ்லியா மற்றும் இயக்குனர் சேரன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆயிரம் பேரிடம் நிலமோசடி செய்த புகார் தொடர்பாக நடிகர் விஜய் மீது புதிய குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் ரிஜிஸ்டர் செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு ஒன்றையும் உடனடியாக வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியானது முதலே, பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து விஜய் தொடர்பாக அரங்கேறி […]
பாஜக கட்சியில் இணைய போவதாக வெளியான செய்தி குறித்து நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியில் சமீப காலங்களாக பிரபல நடிகர்கள், பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில், நடிகர் சந்தானம் பாஜக கட்சியில் இணையப் போவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சந்தானம் தற்போது விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தான் பாஜகவில் இணையப் போவதாக வந்த செய்தி வதந்தி என்றும், தான் நடித்து […]
கடந்த திங்கட்கிழமை அன்று வெளியான சூரரைப்போற்று திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தீபாவளியன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூரரைப்போற்று படத்தை போலவே, பெரிய அளவிலான வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான காரணம், அந்த படத்தின் காட்சிகளும், டிரைலரும் தான். இவை இரண்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை ஒரு சிறு விமர்சனத்தின் மூலம் […]
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பார்த்த விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நடித்ததை போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. சூரரைப் போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர் கலக்கப்போவது யாரு நவீன். அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் உடுமலைப்பேட்டையை […]
தமிழ் திரையுலக பிரபல நடிகர் சந்தானம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிய ‘பிஸ்கோத்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தியேட்டர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறந்திருப்பதால் பொதுமக்களை நேரடியாக சந்திக்க தியேட்டருக்கே சென்றிருக்கிறார் சந்தானம். பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் திரைப்படத்தை முதலில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய நினைத்திருந்ததாகவும் பின்னர் திரையரங்குகள் திறப்பதால் அவசரமாக வெளியிட்டதாகவும் தெரிவித்தார். கொரோனா பயத்தால் தியேட்டருக்கு மக்கள் வருவார்களா? என்று பயம் […]
பழம்பெரும் நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல வங்காள நடிகரான சவுமித்ரா சாட்டர்ஜி(85) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகின் முன்னோடி இயக்குனரான சத்யஜித்ரே அவர்களுடைய ஏராளமான படங்களில் சவுமித்ரா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் பத்மபூஷன் மற்றும் தாதா சாகிப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த அறுபது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான படங்களில் இவர் நடித்துள்ள இவருக்கு […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகன் ,ஆண்ட்ரியா , ஸ்ரீமன், சாந்தனு , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் […]
தமிழ் திரையுலக பிரபல நடிகர் ஜெய் அவர் நடித்துள்ள படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளியான இன்று வெளியாகியது . இந்த திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இயக்குனர் சுசீந்தரன் இந்தப் படத்திற்கு முன்னதாகவே நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மீனாட்சி […]
தமிழ் திரையுலகில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தையை பெற்ற பிரபல சினிமா நடிகைகள் இவர்கள் தான். ஸ்ரீதேவி: தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி மிதுன் என்ற நடிகரை திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் உடன் டேட்டிங் சென்றதில் தான் கர்ப்பமாக இருப்பதை தைரியமாக தெரிவித்து போனி கபூரை திருமணம் செய்து பின்னர் குழந்தை பெற்றுள்ளார். சரிகா: நடிகை சரிகாவுக்கு நடிகர் கமல்ஹாசனுடன் […]
பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998ஆம் ஆண்டு வோஹ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் […]
நடிகர் விமல் , நடிகை வரலட்சுமி இணைந்து நடித்த கன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து , கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கன்னி ராசி ஆகும். இந்த படத்தில் பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிதுள்ளனர். இப்படமானது காதல், காமெடி மற்றும் குடும்ப பின்னணியில் தயாராகிஉள்ளது , கொரோனா ஊரடங்கிற்கு […]
தயாரிப்பாளர் தரப்பில் நடிகைகளின் புதிய சம்பளப் பட்டியல் தயாராக இருப்பதாகவும் இதில் நயன்தாரா முதல் இடம் பிடித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. நடிகைகளின் சம்பளமானது படத்துக்குப்படம் வேறுபடுகின்றது. அதாவது படம் சூப்பர் ஹிட் ஆனால் நடிகைகலாகவே சம்பளத்தை ஏற்றிக்கொள்வதும் இதுவே படம் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்கள் பார்த்து குறைந்து விடுவதுமாக இருந்து வருகின்றது. தற்போது லாக்டௌன்க்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகிக் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. […]
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மீண்டும் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என போட்டியாளர் சுரேஷ்சக்ரவர்த்தி தெரிவித்துளார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகும். இவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டத்தில் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வெளியேற்றப்பட்டதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதாக என்னி சிலர் சந்தேகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் அவர் தனது யூட்யூப் […]
மாநாடு படத்தில் நடிக்கும் சிம்புவின் மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனதாக பிரபல நடிகர் கூறிருக்கிறார். தற்போது நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படமானது ஊரடங்குக்கு முன்பாகவே ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக இந்த படப்பிடிப்பின் வேலைகள் நின்றுபோனது. எனவே நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் எடுக்கப்பட்ட ஈஸ்வரன் […]
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “நாங்கள் திரைப்படம் தயாரிப்பதை அதனை வெளியிடுவதற்கு தான். மேலும் திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காக மட்டுமே. விபிஎப் சம்பந்தமான பெண்கள் சங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரோடக்சன் நிறுவனங்கள் திடீரென விபிஎப்- […]
பிரபல நடிகரின் மகன் தற்போது மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹிந்தி காமெடி நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரபல நடிகரான ராஜீவ் நிகமின் மகன் தற்போது மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் ராஜீவ்க்கு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தற்போது அவருடைய மகன் இறந்துள்ள செய்தியை […]
நடிகர் சூரி அளித்த 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பண மோசடி புகார் மீதான வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் குடவலா தனது முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். விரத்திறன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ஊதியமாக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய்க்கு பதில் நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் […]
திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதை அடுத்து திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கள் தமிழகம் முழுவதும் கடந்த 7 மாதங்களுக்கும் மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவிகித இறக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாவது […]
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? அரசியல் கட்சி தொடங்குகிறாரா? என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு முழு காரணம் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக அவர் பதிவு செய்ததற்கு பிறகுதான் இப்படியான பரபரப்பு செய்திகள் வலம் வந்தன. தந்தையின் இந்த முடிவுக்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்தது அதிரடியை காட்டிய நிலையில் விஜயின் அரசியல் நிகழ்வு அடுத்தடுத்துச் சென்று கொண்டு இருக்கின்றது. […]
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமலஹாசன் நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடினார். நவம்பர் 7 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திரைத் துறையைச் சார்ந்தவர்கள், பல்வேறு ஆளுமைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கமல் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் […]