நடிகர் ஷாம் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாம். இவர் தளபதி விஜய் உடன் குஷி படத்தில் முதல் முதலில் நடித்திருந்தார். பின்னர் கதாநாயகனாக “12B” என்று படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்து வெளியான இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்களால் மேலும் பிரபலமானார். “பார்ட்டி” என்ற படத்தில் நடிகர் ஷாம் கடைசியாக நடித்திருந்தார். இந்த நிலையில் உடற்பயிற்சியின் போது நடிகர் […]
Category: சினிமா
இளையதளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட அதே நாளில் பிகில் படத்தில் நடித்த சௌந்தரராஜன் குழுவினர் 1000 மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு நல்வழியில் கொண்டாடுவதற்காக மரக்கன்றை நட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய 3 பேருக்கும் மரக்கன்றுகளை நடும் படி சவால் விட்டிருந்தார். அதனை ஏற்கும் வகையில் நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு அந்த புகைப்படத்தை […]
ஆலியா பட் நடிப்பில் வெளியாக இருக்கும் சதக் 2 படத்திற்கு 22 மணிநேரத்தில் 4.5 மில்லியன் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் ஆலியா பட் நடிப்பில் வெளியாகியிருக்கும் சதக்2 படத்தின் ட்ரெய்லர் வெளியான 22 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர்க்கான டிஸ்லைக் இன்னும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இது ஆலியா பட் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி மக்களிடையே இந்த ட்ரெய்லர் வெறுப்பை சம்பாதித்ததற்கான […]
ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள சடக் 2 படத்தின் டிரைலர் அதிக டிஸ்லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது பாலிவுட்டில் சுமார் 20 வருடங்களுக்கு மகேஷ் பட் இயக்கிய சடக் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பட்டின் மகள்களான பூஜா பட் மற்றும் அலியா பட் இருவரும் நடித்துள்ளனர். முகேஷ் பட் தயாரித்து மகேஷ் பட் இயக்கிய இந்த படத்தில் ஆலியா பட்க்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார். இந்த படம் […]
65 வயதுக்கும் மேலானவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனக்கு வருத்தமளிப்பதாக அமிதாப்பச்சன் கூறியுள்ளார். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை கடந்தவர்கள் பங்கேற்கக்கூடாது என்று மராட்டிய மாநில அரசு சில நாட்களுக்கு முன் நிபந்தனை விதித்திருந்தது. அந்த நிபந்தனையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கும் மேலானவர்கள் படபிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளித்தது. இது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், “65 வயதுக்கும் மேலானவர்கள் […]
பாகுபலியில் நடித்த பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ 70 கோடி சம்பளமாகவும், 30 கோடி பிற மொழிகளில் டப்பிங் செய்வதற்கான உரிமைக்கும் பெறுகிறார். நடிகை தீபிகா படுகோனே இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான “நடிகையர் திலகம்” […]
கமலஹாசன் இளைஞர்கள் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச உலக இளைஞர் தினம். இந்த நன்னாளில் இளைஞர்களின் சிறப்பு குறித்தும், இளைஞர்களால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் கமலஹாசன் இளைஞர்கள் தினம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாளையின் முன்அறிவிப்பாளர்கள். மூதறிஞர்கள், முன்னோடிகள் இளைஞர்கள் தான். அவர்கள் […]
தனக்கு எதிராக பேசுவோர் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா கூறிய கருத்தை பாராட்டி வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக விளங்கி வருகிறார் மீரா மிதுன். நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினர் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. இந்நிலையில் இதற்கு நடிகர் சூர்யா, தன்னை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது […]
நடிகர் விஜயை மீண்டும் சீண்டும் விதமாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் சமீப நாட்களாக நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை தாக்கிப் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது குறித்த பல கேள்விகளை பல பிரபலங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யாவும் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என […]
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 படம் அடுக்கடுக்கான புகார்களால் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. விக்ரம் குமார் தெலுங்கில் “மனம்” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் “24” என்ற படத்தை இயக்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர். சூர்யாவின் 2d நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு […]
பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் ராசியில்லாத நடிகை என தமிழ் மற்றும் மலையாளத்தில் நீக்கப்பட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார் வித்யாபாலன். ஆனால் அவரை ராசி இல்லாதவர் என ஒதுக்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” நான் முதல் முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு 8 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. […]
தயாரிப்பாளர் சுவாமிநாதன் இறந்தது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் நேற்று கொரோனா தொற்றால் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து திரையுலகினர் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “என் மகிழ்ச்சியை சில நேரங்களில் உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். அதே போல எனது துக்கங்களை பகிரும் கட்டாயமும் ஏற்பட்டது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஒரு நல்ல கம்பெனி, […]
நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். விஜய் மற்றும் சூர்யா மீது மீரா மிதுன் வைத்த குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளத்தில் சில தினங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருக்கிறது. விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவும், மீரா மிதுன் ட்விட்டர் வீடியோ பதிவில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். மீரா மிதுனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு பலரும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா நேற்று […]
தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சவாலை அவர் ஏற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இந்திய நாட்டையே முடக்கி போட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு நிறுத்தப்பட்டு அனைத்து பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வீட்டில் இருந்து கடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ட்விட்டர் மூலமாக பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனிடையே தெலங்கானா எம்.பி சந்தோஷ் […]
சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரியா மீதான விசாரணைக்கு தடை இல்லை என தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அதேபோல் அவரது காதலியான ரியா மீது சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, சகோதரர் சோவிக், தந்தை இந்திரஜித், […]
நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வராமலும் நான் பொது சேவையை செய்வேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு பல கோடி நிதி வழங்கியுள்ளார். மேலும் அம்மா உணவகங்களில் இலவச உணவிற்கு பணம் கொடுத்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல உதவியுள்ளார். அத்துடன் அவர் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளையும் […]
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி மற்றும் சுவாச கோளாறு ஏற்படவே அவரை லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வந்தது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை […]
நடிகை வனிதா தன்னை களங்கப்படுத்தி இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது தவறு என்றும் விமர்சித்தனர். வனிதாவிற்கும் லட்சுமி […]
பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே முரளிதரன் ஜி வேணுகோபால் இவர்களுடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, இது போன்று பல படங்களை தயாரித்து […]
நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடலை கேட்டு பலரும் பாராட்டி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் நடிகை ஸ்ருதிஹாசன் எட்ஸ் என்ற ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” உண்மையில் ஒரு வித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது குழுவினரின் கூட்டு முயற்சி இது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. […]
இயக்குனர் பாரதிராஜா சமூக ஊடகங்களில் நடிகர் விஜய், சூர்யா குறித்து அதிகரிக்கும் அவதூறு பேச்சுகளை கண்டு அதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் தமிழ்சினிமாவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் உள்ளது என நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் வாரிசு […]
ஹாலிவுட் படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி நாளை வெளியிட உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகதிறமைகளை கொண்டவர். இவர் ‘ ட்ராப் சிட்டி’ எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கை பா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக விக்கி ப்ருச்சல் இயக்கும் இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடிக்க உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதையை இந்த டிராப் சிட்டி. […]
தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் இணைந்து நடிப்பதற்காக பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர். ரஜினி படையப்பா என்ற மெகா ஹிட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் மகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் […]
இயக்குனர் ஜமில் சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் இவர் தான் என ஹன்சிகாவை புகழ்ந்து கூறியுள்ளார். யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில், மதியழகன் தயாரிப்பில் நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் “மஹா”. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவினர் ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ‘போஸ்டர்’ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. நடிகை ஹன்சிகா குறித்து இயக்குனர் ஜமீல் கூறுகையில்” சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் […]
நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க முடியாது என தளபதி விஜய் குறித்து பதிவிட்டுள்ளார். வாரிசு அரசியல் குறித்த சர்ச்சைகளால் நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய், சூர்யா, ஜோதிகா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்காக சூர்யா மற்றும் விஜய்யின் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/meera_mitun/status/1292050238375464960 நடிகை ஆர்த்தி மற்றும் சனம் ஷெட்டி போன்றோரும் மீராவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். […]
நடிகர் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு திரையுலக வாழ்விற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. அதன்பின்பே பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 வருடங்கள் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 45 வருட திரையுலக பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். ஆதலால் ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு ரஜினி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில்” என்னுடைய திரையுலக பயணத்தில் நாற்பத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவுபெறும் இந்த நாளில் என்னை வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான […]
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் திருமண குழப்பத்தில் உள்ளார். தமிழில் அமரகாவியம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ் . இவர் நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் மியா ஜார்ஜுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கொரோனாவால் தேதி […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு சமூக வலைத் தளங்களின் வாயிலாக சவால் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விடுத்து வருவது பிரபலமாகி வருகிறது . அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை உலக சுற்றுச் சூழல் தினத்தன்று தொடங்கி வைத்தார். […]
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமான தொடர்பாக நடிகர் ரியாவிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கு, நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என்று அதிகாரிகள் […]
மதுரையில் விஜய் ரசிகர்கள் தலைவா திரைப்படம் வெளியாகியது தினத்தை முன்னிட்டு அரசியல் வசனங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தளபதி விஜய் நடித்த ” தலைவா” திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 20-ஆம் தேதி பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் தமிழகத்தில் வெளியானது. தலைவா திரைப்படத்தின் ஏழாவது ஆண்டு வெளியீட்டு நாளையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அரசியல் சர்ச்சைக்கான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. […]
நடிகர் சிம்பு மற்றும் பார்த்திபன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு இயக்கி வரும் “மாநாடு” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தை கொரோனா அச்சுறுத்தல் முடிந்து நிலைமை சீரானதும் இயக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதுவரை பார்த்திபன் – சிம்பு இணைந்து ஒரு படம் கூட நடித்ததில்லை. இருப்பினும் பார்த்திபன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது ” சிம்பு தொடர்பான […]
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலைக் கேட்டு குழந்தைதுள்ளி குதிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவராக திகழ்கிறார். மாநகரம் மற்றும் கைதி என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் பெரிய அளவில் பிரபலமானார். மேலும் கார்த்திக் நடிப்பில் இவர் இயக்கிய கைதி திரைப்படம் மாறுபட்ட கதைகளத்தில் உருவானதால் மக்களிடையே பேராதரவைப் பெற்றதோடு சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழில் ” கை கொடுக்கும் கை” என்ற படத்தில் அறிமுகமாகிய சின்னி ஜெயந்த் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இவருடைய மகன் ஸ்ருஜன் ஜெய் இந்தியாவிலேயே எழுபத்தைந்தாவது இடம்பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். பலரும் […]
பிரபல நடிகரான நிதின் திருமண விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் தற்போது எளிமையாக நடைபெற்று வருகின்றன. திரையுலகின் பிரபலங்களின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகழும் இதுபோன்றே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் நடைபெற்றது. […]
நடிகர் பிரபாஸ் தனது 21 வது படத்திற்கு சுமார் 70 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா நடிகரான ரஜினிகாந்த் தான் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்குவதாக இதுவரை சொல்லிக் கொண்டிருந்தனர். இவர் அதிகபட்சமாக 60 அல்லது 70 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் ‘மாஸ்டர்’ படத்தில் […]
நடிகர் விஷ்ணு விஷால் அனைத்து நடிகர்களுக்கும் அதிரடி நாயகனாக நடிக்கத்தான் ஆசை இருக்கும் என கூறியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடி” குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருகிறார். “ராட்சசன்” படத்தின் நடித்து அதன்மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களின் ஒருவராக திகழ்கிறார். இவரின் மார்க்கெட் அந்தஸ்தையும் இப்படம் உயரச் செய்துள்ளது. பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் தற்போது வந்துள்ளது. அடிதடி […]
அண்ணாத்த படம் முடிவடைய தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் தற்போது தெலுங்கில் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன் “மாநகரம்”,”கைதி ” என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியதற்கு அப்படங்களின் வெற்றியே காரணம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். […]
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கேரளாவில் நடக்கும் கோர சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் வீடுகளில் புகுந்துள்ளது. கேரளாவிலுள்ள மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 தமிழர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு துபாயிலிருந்து 197 பேருடன் […]
நடிகை பூமி பெட்னேகர் சிறிய மாற்றங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ளது. பருவநிலையின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இயல்பான நிலைக்கு தெற்கே இது உள்ளது. அது மேற்கு பகுதியில் இருந்து படிப்படியாக வடக்கு நோக்கி இமய மலையின் அடிவாரத்தை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட […]
நடிகர் சூர்யா அருவா படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றும் படம் வரத்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது மார்ச் 1 ம் தேதி ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “அருவா”என்ற படம் உருவாகும் என அதிகாரபூர்வமாக வெளியிட்டன. சூர்யாவின் 39வது படமான இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் என்றும் சூர்யா, ஹரி ஒன்றாக இணைந்து தயாரிக்கும் ஆறாவது படம் எனவும் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டனர். […]
சமூகவலைதளத்தில் நடிகர் விக்ரமின் புதுவிதமான புகைப்படங்கள் வெளியானதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விக்ரம் நடிப்பதற்காக தனது உடலை உருக்கி வெவ்வேறு வடிவங்களில் காட்டி வருகிறார். ஐ படத்திற்காக அவரின் உடல் அமைப்பில் காட்டிய வித்தியாசங்களும், நடிப்பும் பலரால் வியப்புடன் பாராட்டப்பட்டு வருகிறது. அவரது மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சியான் ரசிகர்களிடம் அது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போர் வீரனை போல எழிலான பின்னணியில் அவர் நிற்கிறார். அடர்த்தியான டாடி, […]
நடிகர் சாந்தனுவை “இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார். விக்ரம் சுகுமாரன் “மதயானை கூட்டம்” படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது “ராவண கோட்டம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். கண்ணன் ரவி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இது முதல்கட்ட படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்பு ‘மாஸ்டர்’,’ வானம் கொட்டட்டும்’ போன்ற மற்ற படங்களில் சாந்தனு பிஸியானார். எனவே ‘ராவண கோட்டம்’ படத்தில் நிலை […]
படப்பிடிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான உத்தரவை மும்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா படப்பிடிப்புகளை துவங்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தின் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கடும் […]
தஞ்சை மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நன்கொடை வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தஞ்சையில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா பொதுமக்கள் கோவில்களுக்கு செலவு செய்வதை போலவே பள்ளிக்கூடங்களுக்கும், தரமான மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கும் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தற்போது எந்தவித உரிய வசதியின்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் […]
நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்திற்காக வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் கீழ் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர். பாரதிராஜா இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக டி. சிவா மற்றும் […]
நடிகர் விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றி அவதூறாக பேசியதற்கு நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தளபதி விஜயின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில்” விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே.. நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் துணை நடிகை மற்றும் மாடல் என சொல்லப்படும் மீரா மிதுன் கீழ்த்தனமாக பதிவு செய்துள்ளார். அவரை வன்மையாக கண்டிப்பதுடன் புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது நஷ்ட […]
நடிகை எமி ஜாக்சன் குதிரைக்காக கண்ணீர் வடித்தார் என இயக்குனர் விஜய் கூறியுள்ளார். எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இங்கிலாந்தின் பிரபல மாடலாக இருந்தவர் இவர். ரஜினி, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன்பின் தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியானதால் நடிப்பதற்கு இடைவெளி கொடுத்திருந்தார். மீண்டும் விரைவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் விஜய் மதராசபட்டினம் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார். […]
கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு […]
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை தவறாக பேசி வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். நடிகை மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோரை பற்றி தவறான கருத்துகளை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பெரும்பாலானோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் […]