Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச பட விழாவில் கார்த்தி படம்…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!

கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் சர்வதேச படவிழாவில் வெளியிட இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கார்த்திக், நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் “கைதி”. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மட்டுமே மையமாக வைத்து திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி திரைப்படம். இப்படத்தினால் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி அங்கிள்” மறக்க முடியுமா…? புகைப்படத்தை பகிர்ந்து நினைவுகூர்ந்த மீனா…!!

நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் நினைவுகளை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் துள்ளிக்குதித்து ரஜினி அங்கிள்… என பாசம் பொங்க அழைக்கும் மீனாவின் குரலை எளிதில் நம்மால் மறக்க இயலாது. பின் அழகிய இளம் நடிகையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இன்று அவருடைய மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 36 வருடங்களுக்குப் பிறகு அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை மீனா நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து  சமூகவலைதளத்தில் சில புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளார். “அன்புள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

உடல் ஆரோக்கியம் அவசியம்…. சைக்கிளில் வலம் வரும் பிரபல நடிகை….!!

பாலிவுட் முன்னணி நடிகை மும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் சென்று உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் மும்பை வீதிகளில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பையின் பிரதான சாலையில் கருப்பு நிற டீசர்ட், மாஸ்க், கிளவுஸ், தொப்பி அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு…. “இதற்கு பயந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்” – கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். “தாம் தூம்” திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தற்சமயம் வாழ்கை கதையான “தலைவி”  படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்சமயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம்  என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணத்தை எட்டும் 7 வருட காதல்….. திருமண தேதியை அறிவித்த மலையாள நடிகை….!!

மம்முட்டியின் படத்தில் இணைந்து நடித்த கதாநாயகி பிராச்சி தனது காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிராச்சி தெஹ்லான். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. டெல்லியை சேர்ந்த இவர் கைப்பந்து வீராங்கனை யாகவும் திகழ்கிறார். அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றுள்ளார். பிராச்சிக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ரோகித் சஹோரா என்ற தொழிலதிபரை மணக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்” நானும் ரோஹித்தும் ஏழு வருடங்களாக காதலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதிராஜா …!!

புதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி இருப்பதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாக உள்ளதாகவும் அந்த சங்கத்திற்கு திரு.பாரதிராஜா தலைவராக செயல்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுட்டர் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இதுவே சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்” நண்பர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்…!!

சுஷாந்தின் தற்கொலைக்கு இதுதான் காரணம் அவரது நண்பர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் தற்கொலைக்கான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் மும்பை காவல்துறையினர் அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுஷாந்த் நண்பரான சித்தார்த் பிதானி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது” […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

எல்லாருக்கும் நன்றி…. உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்…. அப்பா வீட்டில்…. நான் மருத்துவமனையில் …!!

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததை அடுத்து வீடு திரும்பிய நிலையில் வீட்டிலேயும் தனிமையில் இருக்கப்போவதாக கூறியுள்ளார்.  இந்தியத் திரையுலகில் ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஜூலை 11-ம் தேதி அன்று கொரோனா தொற்று  உறுதியானதைத் அடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கற்பழிப்பு மிரட்டல்….. எனக்கு ஏதாச்சும் ஆனா சூர்யா தான் பொறுப்பு…. மீரா மிதுன் சர்ச்சை கருத்து…!!

எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சூர்யா தான் காரணம் என மீராமிதுன் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலம் என அழைக்கப்படும் மீரா மிதுன் பிக்பாஸில் இருக்கும்போதே பல சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வைரலானவர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்பும் பல சர்ச்சை செயல்களில் ஈடுபடுவதாக சமூக வலைதள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் வீடியோக்களை பதிவிடுவார். அதில் ஏதேனும் ஒரு சர்ச்சை கருத்துக்களை அவரை பாலோ  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஆபத்து வந்தா அதுக்கு சூர்யா தான் காரணம் – மீரா மிதுன்

பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் சூர்யாதான் என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளார். தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு பிரபலமாகியுள்ளார். இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கூட “திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக்கூறி பரபரப்பாக்கினார். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள், ரஜினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகும் நயன்தாரா…? அண்ணாத்த படத்தில் புதிய முயற்சி…!!

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சென்ற வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா  பூகம்பத்தால் படப்பிடிப்பு 4 மாதங்களாக நின்றுவிட்டது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் சந்தேகம் நிலவி […]

Categories
இந்திய சினிமா சினிமா

3 கோடி சம்பளம் வேணும்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகை…!

பிரபல முன்னணி நடிகை மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான பிறகு ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி வசித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். எனவே பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். அவரை புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்… குவியும் பாராட்டு…!!

பிரபல நடிகர் சோனு சூட் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தனது பொறுப்பில் தத்தெடுத்து பாராட்டுகளை குவித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் நடிகர் சோனு சூட் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, காய்கறி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தது போன்ற செயல்களால் பாராட்டுகளை குவித்தவர். தற்சமயம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது மூலம் இன்னும் மேம்பட்டு உள்ளார். ராஜம் கர்ணன் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் ஆந்திர […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – மும்பையில் போலீஸ் ஒத்துழைக்கவில்லை …!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரை உலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி 2 கதாநாயகி யார்…? விளக்கம் கொடுத்த லாரன்ஸ்…!!

‘சந்திரமுகி 2’ திரைப்படம் பற்றி பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளுக்கு லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில், 15 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வர இருக்கிறது என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த படக்குழு…!!

விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது தயாரிப்பு பணியை ஊரடங்கு முடிந்தபின் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். பாரம்பரிய நிறுவனங்களில் தமிழ் திரையுலகில் விஜயா ப்ரொடக்ஷனுக்கு முக்கிய பங்கு உண்டு. “எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, நம் நாடு”, “சிவாஜி கணேசன் நடித்த வாணி ராணி”, “ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி”, “கமலஹாசன் நடித்த நம்மவர்” , “அஜித் நடித்த வீரம்”, “விஜய் நடித்த பைரவா” உள்ளிட்ட வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வருடம் விஜயா புரொடக்சன் தயாரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு ஒன்றுதான் உண்மை…. வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்….!!

லதா ரஜினிகாந்த் சொந்த முயற்சியால் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லதா ரஜினிகாந்த் அவர்களின் “அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை, அன்பு இல்லாத ஒரு உள்ளம் இல்லை” என்ற பல்லவிகளைக் கொண்ட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வரிகளில் அன்பின் பெருமையையும், குடியின் கேடுகளையும் விவரித்துள்ளார். “மனதை அழித்தான், தன்னையும் மறப்பான், நான் என்ற அகந்தை கடலில் மிதப்பான்” என்ற மதுவுக்கு எதிரான கருத்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயமாகும் புதிய தயாரிப்பாளர் சங்கம்…? அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா….!!

பாரதிராஜா தலைமையில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட இருப்பதாக பரவிய செய்தி பற்றி பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த முறை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று தலைவரானார்.அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றம் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இப்படி பண்ணாதீர்கள்… உங்களுக்கும் காத்திருக்கும்… கண்டனம் தெரிவித்த மிருணாளினி…!!

நடிகை மிருணாளினி கொரோனா நோயாளிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மிருணாளினி. விக்ரமுடன் தற்போது கோப்ரா, எம். ஜி. ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்துவருகிறார். கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிடும் அவமதிப்பை கண்டித்து மிர்னாலினி கூறுவன” உங்கள் வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டு அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அவரை புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்காதீர்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் மரணத்தின் மர்மம்…. “நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள்” பிரதமரிடம் வேண்டுகோள் வைத்த சகோதரி…!

சுஷாந்த் சிங் மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமருக்கு சுஷாந்த் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்த பட வாய்ப்புகளை தட்டிப் பறித்ததுமே இவரின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்திற்கு  மனரீதியாக தொல்லை தந்ததும், அவரின் கிரிடிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக பாரதிராஜாவின் தலைமையில் உதயமான புதிய சங்கம்….!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக புதிய சங்கம் பாரதிராஜாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக விஷால் இருந்த பதவிக்காலம் முடிவடைந்து உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னொரு புதிய சங்கம் உருவாக்கியுள்ளனர். ‘தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர். சங்கத்திற்கு தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஆர். பிரபு மற்றும் தனஞ்ஜெயன் துணைத் தலைவராகவும், டி. சிவா […]

Categories
சினிமா

நடிகர் சோனு சூட்டின் சமூக சேவை… “எங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்” உண்டியலை உடைத்த அக்கா-தம்பி…!!

அக்கா-தம்பி இருவரும் இணைந்து சோனு சூட் செய்துவரும் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு செய்து தங்களது உண்டியலை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் டிராக்டெர் இல்லாத விவசாயி ஒருவர் தனது இரு மகள்களைக் கொண்டு உழவு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஒரு டிராக்டரை பரிசாக அளித்துள்ளார். இதனையடுத்து சோனு சூட்டின் சமூக சேவைக் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனை அறிந்த டெல்லி திகாரைச் சேர்ந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்து மதம் குறித்து அவதூறு…. பிரபல இயக்குனர் கைது….!!

திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் மீது இந்து மதம் பற்றிய அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் இந்து மதம் குறித்து தவறான செய்தி பரப்பியதாக அவர் மீது பாரத் முன்னணி புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வைத்து இயக்குனர் வேலுபிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு….!

விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் “துக்ளக் தர்பார்”. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துவருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். #TughlaqDurbar First Single – #அண்ணாத்தேசேதி – #AnnatheSethi from Monday 5pm on […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி பாராட்டு…!-“இந்த நாளுக்காக காத்திருந்தேன்”…துல்கர் பட இயக்குனரின் உற்சாக பதிவு…!

ரஜினி பாராட்டியதை இயக்குனர் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சககத்துடன் பதிவிட்டுள்ளார். மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊராடங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் வெளியான சில படங்கள் மட்டுமே அமோக வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வகையில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் உள்ளது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை பாராட்டி இருப்பது அவருக்கு கிடைத்த மிகசிறந்த கொடையாக மாறியுள்ளது. இதுகுறித்து […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் மரணம் கொலையாக இருக்கலாம் – சுப்ரமணியன் சுவாமி சந்தேகம்…!!!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங்கின் உடல் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கைப்பற்றப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது காதலி எனக் கூறப்படும் பாலிவுட் நடிகை ரேகா சக்கரவர்த்தி பாலிவுட் திரைப்பட தயரிப்பளார் ஆதித்ய சோப்ரா, திரைப்பட […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு – பீகார் அரசு வழக்கறிஞர் குற்றச்சாட்டு…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மரணம் தொடர்பாக பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்ரபோத்தி தொடர்ந்த வழக்கில் பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் வழக்கறிஞர் முகுஸ் ரோத்தகி தொடர்பு இருப்பதாக பீகார் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதாவிடம் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார். சமூக வலைத்தள நேரலை  விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டிற்கு நல்லதல்ல….. எல்லாரும் படிங்க….. வீடியோ போடுங்க….. நடிகை ஆத்மிகா ஆதங்கம்….!!

நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரை தொடர்ந்து நடிகை ஆத்மிகா EIA 2020 குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக EIA 2020 ஆர்டிகள் அமைந்திருப்பதாக பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்களும் இந்த EIA 2020க்கான வரைவு அறிக்கையை படித்துவிட்டு இது நல்ல முடிவு அல்ல என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர்களான சூர்யா கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் EIA […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிறந்த நாளை முன்னிட்டு 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு… நடிகர் சோனு சூட்…!!

பிரபல நடிகர்  தனது பிறந்தநாளை முன்னிட்டு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி  கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தியவர் சோனு சூட். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திறமை தான் காரணம்…. அதிக சம்பளம் கேட்பதில்லை…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ்ராஜ்….!!

சினிமா நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்லை என பிரகாஷ்ராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சினிமாவில் விஜய்,அஜித், தனுஷ், ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கான சம்பளத்தை மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து அதிகமாக கேட்பதாகவும் கேட்ட தொகையை கொடுத்த பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது சினிமா ஹீரோக்களின் சம்பளம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அனில் முரளி மரணம்… சோகத்தில் திரையுலகினர்..!!

நடிகர் அனில் முரளி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் முரளி (56).. அதுமட்டுமன்றி தமிழில் தனி ஒருவன், நிமிர்ந்து நில், மிஸ்டர் லோக்கல் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையில் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொச்சியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா

சுஷாந்த் சிங்கிற்கு அடுத்து… மராட்டிய நடிகர் அசுதோஷ் பக்ரே தற்கொலை…!!

மராட்டிய நடிகர் அசுதோஷ் பக்ரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகர்’, ‘இச்சார் தர்லா பக்கா’ போன்ற மராட்டியப்படங்களில் நடித்தவர் அசுதோஷ் பக்ரே. இவர், மராட்டிய நடிகையான மயூரி தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அசுதோஷ் பக்ரே தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்ற சில நாள்களாக அசுதோஷ் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது தற்கொலை தொடர்பாக சிவாஜி நகர் காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்கள் அன்பில் திக்குமுக்காடிப் போனேன்” ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்…!!

ரசிகர்களாகிய உங்களால் நான் பெருமையும், கர்வமும் கொள்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்: “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய் விட்டேன். அனைத்து பொதுவான முகப்பு படங்கள் (common DP), கலவை வீடியோக்கள் (Mash up video), […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதுப்பட போஸ்டர்… இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு 4,000 ரூபாய் அபராதம்…!!

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அவருடைய புதிய  “பவர் ஸ்டார்”  படத்தின் போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது ‘பவர் ஸ்டார்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் தனது இணைய வழி திரையரங்கில் விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டிகளை அரசாங்க சொத்துக்கள் மீது ஒட்டியதற்காக ஹைதராபாத் பெருநகராட்சி ராம்கோபால் வர்மாக்கு 4 ஆயிரம் ரூபாயை அபராதம் விதித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மத்திய அரசு கொண்டு வந்த இ.ஐ.ஏ சட்டம் – தம்பியை போல அண்ணன் சூர்யா எதிர்ப்பு …!!

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சுற்றுச் சூழலைக் காக்க மௌனம் கழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை பகிர்த்துள்ள சூர்யா பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். காக்க காக்க சுற்றுச்சூழல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய்… இதயம் கரைந்து விட்டதாக உருக்கம்..!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யாரய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நன்றி கலந்த உருக்கமான பதிவு ஒன்றை ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ராக்கியை மிரட்டவரும் ‘அதீரா’..!!

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் ‘அதீரா’ கதாப்பாத்திரத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதை அடுத்து அந்தப் போஸ்டர் தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கன்னடத் திரையுலகில் 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்’. இப்படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’… தல அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தல அஜித் நடிக்கும் வலிமை படம் முதன்முதலாக இந்தியிலும் வெளியாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படங்களில் அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ் ரசிகர்களே…. பாலிவுட் ஷூட்டிங் இப்ப நம்ம ஊருல….. எங்கனு தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!

தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட்டில் நடிக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் மதுரையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் திறமையான நடிகர் தனுஷ். இவரது திறமைக்கு உதாரணமாக ஏராளமான தமிழ் படங்களை கூறலாம். அதே போல் இவரது திறமைக்கு தக்க பரிசாக பிற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் நடிகர்கள் ஒரு சிலரில் தனுஷும் ஒருவர். ஆனால் ஹாலிவுட் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

காக்க…. காக்க…. சுற்றுச்சூழல் காக்க….. நம் மௌனம் கலைப்போம்…. மாஸ் ட்விட் போட்ட சூர்யா …!!

சுற்றுசூழல் விஷயத்தில் நாம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தற்போது கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் நடிகர் சூர்யா டுவிட்டரில் இந்த பதிவினை போட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஏற்கனவே அவருடைய சகோதரர் கார்த்திக்   திருக்குறளை மேற்கோள் காட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நடிகர் சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் மிக ஆபத்தானது காக்க காக்க சுற்றுச்சூழல் காப்போம் […]

Categories
சினிமா

ஏ ஆர் ரகுமானின் குற்றச்சாட்டு…. வருத்தம் தெரிவித்த அமைச்சர்…!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அளித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் இந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளர விடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்து கொண்டிருக்கிறது என கூறியிருப்பது திரைப்பட உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகுமானின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இணையதளங்களில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொந்தளித்துக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இதனை இழந்தால் ஒருபோதும் திரும்பப் பெறமுடியாது…. அமைதியாக இருங்கள் – ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களிடம் அமைதியாக இருங்கள் இதையும் கடந்து செல்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்திப் படவுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும், வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹாஸ்டேக்செய்து ரசிகர்கள் கொந்தளித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது விடுமுறையல்ல….. சொன்னவாரே இப்படி செய்யலாமா…? பிரபல நடிகர்கள் மீது வழக்கு….!!

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடிகர்களான சூரி விமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கானது தொடர்ந்து 6 வது கட்டநிலையில் அமுலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழ்நிலையில் வேலைக்காக வெளியூர் சென்று மாட்டிக் கொண்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை

சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம்  மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.   ப்ரண்ட்ஸ் , பாஸ் என்கிற பாஸ்கரன் ,மீசைய முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமி தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் …!!

கொரோனா பாதிப்பிலிருந்து  குணமடைந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது மகன் ஆராத்ய மருத்துவமைகளிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 தேதி அன்று கொரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய்,பேத்தி ஆராத்ய ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமிதா பச்சன் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமையில்  உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

” உன் ஆசீர்வாதங்கள் எல்லையற்றவை”-கண்ணீருடன் பதிவிட்ட அமிதாப் …!!

அமிதாபச்சன் தனது மருமகள் மற்றும் பேத்தி வீடு திரும்பியதை என்னி ஆனந்த கண்ணீருடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் 17 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி அமிதாபச்சன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களாக மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாபச்சன், நேரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு “ரகிட… ரகிட… ரகிட” கலக்கல் பாட்டுக்கு…. ஆட்டம் போடும் ரசிகர்கள்….!!

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து ரகிட ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது. இந்தியன் ப்ரூஸ்லீ, இளைய சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான இளம் அசத்தல் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தனுஷின் பிறந்தநாள் என்று ஆரவாரத்தோடு இருக்கும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதமாக அவர் நடிக்கும் ஜகமே தந்திரம் என்கிற படத்திலிருந்து சூப்பர் ஹிட் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு சிக்கல்….!! கவலையில், சூர்யா, கார்த்தி ரசிகர்கள் …!!

நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. சினிமா துறையிலும் ஏராளமான மாற்றங்கள் கொரோனவால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளதால், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT  தளத்தில் வெளியாகியது. இதற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையில் திரையிடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிவந்தனர். இது நீண்ட நாட்களுக்கு முன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது ரொம்ப பெரிய டாஸ்க்…. எனக்கு உதவியாக இவர்கள் இருந்தார்கள்…. அனுபவத்தை பகிர்ந்த ஸ்ருதிஹாசன்….!!

நடிகை ஸ்ருதிஹாசன் மலைப்பாதையில் தான் லாரி ஓட்டிய அனுபவம் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஊரடங்கு நாட்களில் சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் பலரும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியில் ‘யாத்ரா’ என்ற டிஜிட்டல் படத்திற்காக லாரி ஓட்டிய அனுபவத்தை நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது ” நான் பெரிய டிரைவர் இல்லை என்பது நிறைய பேருக்கு தெரியாது. எனக்கு துணையாக ஸ்டண்ட் கலைஞர்கள் இருந்தனர். எனக்கு […]

Categories

Tech |