Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கில் முத்தம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்… யாருக்கு தெரியுமா?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சார்மிக்கு முத்தம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். படையப்பா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன், பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ராஜ மாதாவாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபாலும் உண்டா ? பிரபல நடிகரின் வாழ்க்கை கேள்வி குறி …!!

விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டதற்கு அவர்  பதிலளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. தற்போது அவர் நடித்த எப்ஐஆர் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டு நடிகர் கே. நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால், 2018 ஆம் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நாட்டின் விதிமுறைகளை கடைபிடியுங்கள் – ரஜினிகாந்த் வேண்டுகோள் ..!!

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு கொரோனா விழிப்புர்ணர்வு குறித்து நடிகர் ரஜினிக்காந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு கொரோனா குறித்து விழுப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாட்டில் வாழும் தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை மாநில செய்திகள்

பாதுகாப்பாக இருங்க ”இதுவும் கடந்து போகும்” ரஜினி ட்விட்

இதுவும் கடந்து போகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்த்தை தெரிவித்துள்ளார். இன்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்களத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது தனது பக்கத்தில்,இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையில் அஜித்தின் முதல் காட்சி….. இதுவரை பார்க்காத அரிய புகைப்படம்….!!

திரையில் அஜித் குமார் நடித்த முதல் காட்சியின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமார் தனது விடா முயற்சியினாலும் சிறந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தல எனும் பெயரில் அதிக இடத்தை பிடித்தவர். அஜித் குமார் எச். வினோத் இயக்கிவரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை காரணமாக அப்படம் அடுத்த வருடம் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல வெற்றிப்படங்களை கொடுத்த தல அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகனுக்கு எதுவும் ஆக கூடாது – விஜயின் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற தனது மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக வெளிவருவது தடைப்பட்டு பிரச்சினைகள் முடிந்த பின்னர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஆழ்ந்த துயரத்தில் இருந்து வருகிறார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு டூப் போட்டது இவர்தானாம் – பத்து வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்….!!

ரஜினியின் எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு தான் டூப் போட்டதாக தெரிவித்து புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர் இயக்கி ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் எந்திரன். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் இருவேடங்களில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் சிட்டி மற்றும் வசீகரன் என இரண்டு கதாபாத்திரங்களும் ஒருசேர வரும் காட்சிகளில் ரஜினிக்கு பாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசின் தடை உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி…. பரிசீலனை செய்யுங்கள்… தமிழக முதல்வருக்கு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை!

இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற  தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா அச்சத்தில் செல்ல பிராணிகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் – சாடிய ரஜினி பட நடிகை

கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி வீட்டின் முன் நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் போராட்டம்…!!

ரஜினியின் வீட்டு முன்பு நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதனால் பலரும் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் வருமானம் இன்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பெப்சிக்கு ரூபாய் 50 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல சீரியல் நடிகை மர்மான முறையில் மரணம் – போலீசார் தீவிர விசாரணை

தெலுங்கு சின்னத்திரை நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கு சின்னத்திரை நடிகையான சாந்தி என்கிற விஷ்வா சாந்தி சீரியலில் நடிப்பது மட்டுமன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் எல்லரெட்டிக்குடா  என்ற பகுதியில் காலனி ஒன்றில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் சில தினங்களாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எஸ் ஆர் நகர் காவல் துறையினருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு நாள் கோரிக்கை வேற… என்ன டிசைன் இவனுங்க… குடிமகன்களை திட்டி தீர்த்த திரௌபதி இயக்குனர்

ஐந்து மடங்கு விலை கொடுத்து மது வாங்க நிற்கும் குடிமகன்களை மோகன் ஜி ட்விட்டரில் திட்டி தீர்த்துள்ளார்  திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன்ஜி தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் சமூக சார்ந்த பிரச்சினைகளுக்கு கருத்துக்கள் தெரிவித்தும் வருகிறார். தற்போதைய நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் இவர் மது பிரியர்களை திட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்…!!

பல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர் படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவரது அடுத்த படத்தின் வேலையை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபொழுது கொரோனா ஊரடங்கினால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆரம்பிக்க  இருந்ததாகவும் ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன் டிவியை பின்தள்ளி முதலிடம் பிடித்த சேனல்…. குழம்பி நிற்கும் ரசிகர்கள்

பிரபல சேனலான சன் டிவியை TRB -யில் இரண்டாம் இடத்திற்கு தள்ளி டிடி சேனல் முதலிடத்தை பிடித்துள்ளது சன் டிவி தான் இந்திய தொலைக்காட்சிகளில் எப்போதும் நம்பர் 1  இடத்தில இருக்கக்கூடிய ஒன்று. அதிலும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கும். இந்நிலையில்  சன் தொலைக்காட்சி கடந்த வாரம் இந்தியளவில் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இது கூடஆச்சர்யம் இல்லை. முதலிடத்தை பிடித்திருப்பது டிடி நேஷ்னல், அதுவே  பலரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. கேபிள் டிவி வந்த பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு 100 மூட்டை அரிசி, 3.5 லட்சம் வழங்கிய விவேக்…!!

ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு  நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலமான அபிராமி திடீர் முடிவு..!!

பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர்களை மிஞ்சும் லாரன்ஸ்…. சங்கரை விட அதிக சம்பளம்…!!

ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும்  ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் – பாடி அசத்திய நாய்

பிரபல இசையமைப்பாளர் வளர்க்கும் நாய், அவர் இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் பாடி அனைவரையும் அசத்தி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி பலியானோர் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்து சமூக வலைத்தளங்கள்  மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் பிரபல இசையமைப்பாளர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஏ.ஆர். ரகுமான்…!!

தனது பாடல்களை தொடர்ந்து  ரீமிக்ஸ் செய்வதால் வெகுண்டெழுந்த ரகுமான் டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ஹிந்தி படங்களுக்கு இவர் இசையமைத்து அதிலும் பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் சிலர் அவர் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறோம் என சொதப்பி வைத்துவிடுகின்றனர். இதை பல இடங்களில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி எனும் பாடலையும் ரீமேக் செய்துள்ளதை அறிந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் தான் சூப்பர் ஸ்டார் – நச்சுன்னு பதிலளித்த நடிகை

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அத்தியாவசியமான பொருட்களை பதுக்க வேண்டாம் – வேண்டுகோள் வைத்த அமிதாப்பச்சன்

அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தயவுசெய்து பதுக்காதீர்கள் என மக்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசு மிகவும் கவனமாக இருக்கின்றன. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரிக்கும் விஜய் பட நடிகர்…!!

கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார் கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கிய யோகி பாபு….!!

நடிகர் சங்கத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு அரிசி வழங்கியுள்ளார் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டில் அடை பட்டுள்ளனர். வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். ஆனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது தொடர்ந்து தங்களால் முடிந்த உதவியை பல நடிகர்களும் வழங்கி வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச வீடியோவில் வருவது நான் இல்லை… வீடியோ வெளியிட்டவருக்காக பரிதாபப்படுகிறேன் – ஜூஹி

கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை இணையதளத்தில்  வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்து வருபவர் ஜூஹி ரஸ்டகி. இவர் நடித்த உப்பும் மிளகும் என்ற தொடர் கேரள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகளைத் தேடி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா நிதி திரட்ட களமிறங்கிய ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா…!!

கொரோனா ஊரட‌ங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்ட ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில் தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு திட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ள சூழலில் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே  நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி…. நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த நிதி அளிக்கலாம் என மக்களிடையே கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், பெரிய நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கர் பண்ணுறீங்க, பாடுறீங்க, ஆடுறீங்க செம…. விஜய் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய பாவனா… தீயாக பரவும் வீடியோ!

தொகுப்பாளினி பாவனா ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு  பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு  பரதநாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. கடந்த சில காலமாக தமிழர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர்  படத்தின் இசை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதி… படத்தின் பெயர் அறிவிப்பு..!!

 5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.  விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலைக்கு துணிந்த மனோரமாவின் மகன்.. பரபரப்பு தகவல்..!!

மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவர் இரவு நேரங்களில் மாத்திரை போடுவார். அதில் நேற்று இரவு  வழக்கமாக உள்ளதை விட கூடுதலாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். இதனால் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது.  இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிக்சை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனோவால் மிரண்டுபோன சல்மான்கான்..!!

பாலிவுட்டில்  முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கான், கொரோனாவால் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். பரவி வரும் கொரோனோவால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், இந்திய திரையுலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது.  இதனால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் சிலர் நகரத்திற்கு வெளியே உள்ள தங்களது பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். அதேபோல சல்மான்கானும் தனது சகோதரர் மற்றும் மகனுடன் இணைந்து பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளிட்டார். அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

எதுவுமே செய்ய முடியவில்லை… அனுஷ்கா வேதனை..!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, கொரோனா குறித்து உருக்கமாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து உருவெடுத்த கொரோனா என்ற  உயிரை பறிக்கும் வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதன் கோர பசியை தீர்த்து வருகிறது. அதோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பாதிப்பில் இருந்து நம்மை காப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மது கிடைக்காத விரக்தி… நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி!

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் திடீரென்று தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான மது பிரியர்கள் விபரீதமான […]

Categories
உலக செய்திகள் சினிமா

கொரோனா ஊரடங்கு…பிரபல நடிகை கைது..!!

கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில்  அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.  இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை  தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ பயன்படுத்த வேண்டாம்… கர்சீஃப் யூஸ் பண்ணுங்க… விஜய் தேவரகொண்டா அறிவுரை!

நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் கொரோனா குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்த படம்… போட்டி போடும் தயாரிப்பாளர்கள்….!!

அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும். அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே  அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் வேண்டாம்… கொரோனாவை விரட்டியடிப்பதே அவசியம்… துணிச்சலாக முடிவெடுத்த கீர்த்தி…!!

திருமனத்தை பற்றி பேசுவதை விட கொரோனாவை விரட்டி அடிப்பதே முக்கியம் என  கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்த வதந்தி…. முற்று புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்…!!

நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலை சொன்ன பிரபல நடிகர்…. கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு…!!

 நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவின் காதலை மறுத்ததாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். இதனால்  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளாராம் . சமீபகாலமாகவே கீர்த்தி ஒருவரை காதலிக்கின்றார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது. இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய சித்ரா லக்ஷ்மணன் அந்த நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1.25 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் அஜித்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்… கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி  ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள்  #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது  படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும்  ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : கொரோனா நிவாரணம் : ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் அஜித்குமார்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.  இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரை இந்த வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ 25 லட்சம் நிதியுதவி!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர் அஜித்குமார்  ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். அதிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா விழிப்புணர்வு.. பிரபல நடிகர்கள் நடித்த குறும்படம்..!!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிரபலநடிகர்கள் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தினக்கூலி ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரபல நடிகர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் சோனாலி, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மக்களை ஊரடங்கை மீறி அவசர தேவை இன்றி வெளியே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட இயக்குனர்…திடீர் அறிவிப்பு… அனைத்தும் போலி கணக்குகள்..!!

தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.  லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பு பெற்று கொடுத்தது.  இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தையும் இயக்கினார். அப்படமும் நல்ல வசூல் பெற்று வெற்றி படமானது. ஆனால் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இவர் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும் சமீரா ரெட்டி..!!

அனைத்து மொழிகளிலும் நடித்த சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த ஆண்டு 2014ல் தொழிலதிபரான அக்‌ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமீரா தன்னுடைய குடும்பத்தை குடும்ப தலைவியாக நின்று கவனித்து வந்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த போதிலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுதான் இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதுகாப்பு.. பாரம்பரிய பழக்கம் கை கொடுக்கிறது – ஜெனிபர்..!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார். வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது,  வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும்.  இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு உத்தரவு – சுவாரஸ்யமான பழைய படங்கள்.. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் யோகி பாபு..!!

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலா.? ரசிகர் கேட்ட கேள்வி.. பதில் அளித்த பிந்து மாதவி..!!

நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை.  ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும்  அதை யாரிடமும் சொன்னது இல்லை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கை மீறி… ஆண் நண்பருடன் காரில் பயணம்… விபத்தில் சிக்கிய கன்னட நடிகை… சோகத்தில் ரசிகர்கள்!

ஊரடங்கு உத்தரவை மீறி தனது ஆண் நண்பருடன் காரை ஓட்டிச் சென்று கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே (Sharmila Mandre) விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு  வெளியான ‘சஜ்னி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. அதைத்தொடர்ந்து இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்தார். இவர் தமிழிலும் ‘மிரட்டல்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வரவேற்பைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்த லேடி சூப்பர் ஸ்டார்!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். […]

Categories

Tech |