நடிகை கேத்ரின் தெரசா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் கார்த்தியின் “மெட்ராஸ்” திரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் கணிதன்,கலகலப்பு-2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் திரை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரை படத்துக்கு கதாநாயகியை […]
Category: சினிமா
நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய […]
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் […]
எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த ஆண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் மக்களிடையே எஸ்.ஜே. சூர்யா நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக எஸ்.ஜே. சூர்யா காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண்டின் இறுதியில் மக்களுக்கு இன்னொரு ஸ்பெஷலான செய்தியையும் அவர் வழங்கியிருக்கிறார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் பொம்மை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. […]
#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் […]
தெலங்கானா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பின்னணியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வன்முறை’. இப்படம் குறித்த இயக்குநரின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ… ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அர்ஷிதா ஸ்ரீதர், வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் என பலரும் இப்படத்தில் […]
விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]
சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பிரபல சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே நிஷாவுக்கும் அவரது கணவர் ரியாஸ் அலிக்கும் பள்ளி செல்லும் மகன் இருக்கிறார். சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்படங்கள் என பிஸியாகவே இருந்த நிஷா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது சொந்த ஊரான அரந்தாங்கியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நிஷாவுக்கு […]
திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]
சுந்தர். சி நடிப்பில் வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர் சாக்ஷி சௌத்ரி. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இவர், தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருட்டு படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் : சிறுத்தை தோல் போர்த்திய கவர்ச்சிக் கன்னி […]
கேங்ஸ்டர்கள் வரிசையில் மாஃபியா ராணியாக வலம் வந்த கங்குபாயாக மேக்கப்போட்டு நடிக்க தொடங்கியுள்ளார் ஆலியா பட். ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர். […]
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தற்போது தொடங்கிய இதன் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான […]
பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிக்காக அஜித் பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்து படப்பிடிப்பு குழுவையே அதிரவைத்துள்ளார். அஜித் நடிப்பில்உருவான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைபடம் ரீமேக் கதை என்பதால், அடுத்த திரைபடமான வலிமையை மிக பிரம்மாண்டமாக […]
இயேசுவை வணங்கும்போது உச்சரிக்கும் அல்லேலூயா சொல்லை பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தியதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக நடிகை ரவீனா டண்டன் விளக்கமளித்துள்ளார். கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக விடியோவை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரவீனா டண்டன். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயேசு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக நடிகை ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது பஞ்சாப் […]
பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்துவரும் ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த […]
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் ‘டிமாண்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். […]
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கும் நிலையில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி […]
2020ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் ‘தலைவர் 168’ ரஜினிகாந்த்-கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 திரைப்படம் 2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வலிமை’ அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை திரைப்படம் 2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ விஜய்சேதுபதி-மோகன்ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட […]
வாஷிங்டன்: 2005ஆம் ஆண்டு பிரிவுக்குப் பிறகு விடுமுறை நாளில் ஒன்றாக இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் ஜெனிபர் அனிஸ்டன் – பிராட் பிட் : நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னாள் காதலர்களான ஜெனிபர் அனிஸ்டன் – பிராட் பிட் மீண்டும் தங்களுக்குள்ளான உறவை புதுப்பித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திர காதலர்களாக வலம் வந்த அனிஸ்டன் – பிராட் பிட் 2000ஆவது ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதையடுத்து 2005ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகை […]
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக, ’விக்ரம்-58’ படத்தை இயக்குக்கின்றார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என்று முழுக்க […]
ஆக்ஷனில் குதிக்கும் அனுஷ்கா…!!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ஆக்ஷனில் களமிறங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்திற்கு பின் அவர் நடித்து வெளிவந்த ‘பாகமதி’ படமும் பெரும் வெற்றி பெற்றது .இப்போது ‘நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 படங்களில் […]
சிரிப்பு, அழுகை, முகபாவணை என அனைத்திலும் மகாநடி படத்தில் சாவித்திரியை உரிதெடுத்தாற்போல் திரையில் தோன்றி சிலிர்க்க வைத்த கீர்த்தி சுரேஷுக்கு, ‘தலைவர் 168’ படக்குழுவினர் சர்ப்ரைஸாக கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை: ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின், ‘தலைவர் 168’ படக்குழுவினர்கள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘மகாநடி’. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் […]
நடிகர் அஜித் நடிப்பில் 2019 இந்த ஆண்டில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது . சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் .இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா,காமெடி நடிகர்களாக யோகிபாபு ,ரோபோசங்கர்,ஆகியோர் நடித்திருந்தனர்.இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்தார்.ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சணையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை படைத்தது.இந்தப்படத்தில் அப்பா […]
வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் ‘அடவி’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நந்தா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ‘கிரீடம்’, ‘நான் மகான் அல்ல’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோத் கிஷன். தற்போது இவர் இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ […]
‘ஆதித்ய வர்மா’ படத்தின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள துருவ் விக்ரம் சென்சாரால் படைப்பாளிகளின் சுதந்திரம் கத்தரிக்கப்படுவதை மறைமுகமாகச் சாடியுள்ளார். இதைத்தொடந்து படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், தற்போது படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள், வசனங்களின் தொகுப்பை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், இந்த காட்சிகள், சில வசனங்களும் வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். ஆதித்ய வர்மாவின் சில தருணங்கள் என்று […]
கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. […]
அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) வழங்கும் இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதருக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வென்றுள்ளார். முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரை இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதராக அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கமுறையை பின்பற்றிவரும் மனுஷி சில்லர், இதுவரை தனக்குக் கிடைத்த பல்வேறு […]
படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார். A.R.முருகதாஸ் ,ரஜினிகாந்த் கூட்டணியில் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது .இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் .குஸ்பு ,மீனா,கீர்த்திசுரேஷ்,நடிகர் சூரி,சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் படப்பூஜை நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இதற்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து […]
தல அஜித்தின் மகள் அனுஷ்கா கிறிஸ்துமஸ் விழாவில் பாடல் ஒன்று பாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் மகள் அனுஷ்கா பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது ஆங்கில பாடல் ஒன்றை பாடும் விடியோவை ரசிகர் ஒருவர் #2019Memoriesof thala என்ற ஹேஸ்டேக்வுடன் சேர்த்து பகிர்ந்துள்ளார். ஏற்கனவே பேட்மிட்டன்,நடனம்,உள்ளிட்டவற்றில் பங்கேற்று வரும் அஜித்தின் மகள் தற்போது பாடல் பாடியும் புதிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் .
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என திரைப்பட நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், ரயில்வே காலனியில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஒத்த செருப்பு’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அரசின் பரிந்துரை இல்லாமல் தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை, ஆஸ்கர் தேர்வுக் குழு பட்டியலில் உள்ள ‘ஒத்த […]
அரண், ஜில்லா, காப்பான் என தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். திர்ஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கும் ராம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் . இதில் அவருக்கு ஜோடியாக. திரிஷா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இதன் பட தொடக்கவிழா நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு மோகன்லால் துபாய் சென்றார். அங்கு அவர் வலது கையில் திடீர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். வலது கையில் […]
மும்பை: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனநாயகத்தில் வன்முறை பொருத்தமானதல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தின் விலை தெரியுமா என்றும் வன்முறையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நடிகை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். மும்பையில் நடந்த திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்துக் கொண்ட கங்கனா இதுகுறித்து கூறும்போது, ”எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்து இங்கு வன்முறையில் ஈடுபட உங்களுக்கு […]
சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் விருதை நடிகர் ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார். சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்தவர் மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை […]
குடியை நிறுத்திவிட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார் . ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உட்பட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:- சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 […]
66ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்திலிருந்து பல சினிமா பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர்கள் சுந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா தொகுத்து வழங்கினர். திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள் : தமிழ் : சிறந்த படம் – பரியேறும் பெருமாள், சிறந்த இயக்குநர் – ராம் குமார் […]
‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ ‘தர்பார்’ இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் ‘இந்தி’ படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது […]
டெல்லியில் தேசிய விருது பெற்ற திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை இன்று வழங்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்கள் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறந்த தமிழ் படமான பாரம் படம் விருது பெறுகிறது. பாபாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் இந்த விழாவில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். மேலும் உடல்நலக்குறைவினால் மருத்துவர் தன்னை பயணம் செய்ய […]
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகன காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. தமிழ் திரையுலகில் 2008-ம் ஆண்டு பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உட்பட அனைத்து முன்னணி நாடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிரபலமாக உள்ளார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வர […]
மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படமான ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அப்படத்தின் கதாநாயகி ட்வீட் செய்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படம் மகா சங்கராந்தி பண்டிகையையொட்டி 2020 ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 26ஆவது படமான இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ விஜயசாந்தி, ‘கீதா கோவிந்தம்’ படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, […]
மதுரையில் நடைபெற்ற போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதினை தன் மகன் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் சூரி . தமிழ் சினிமாவில் சமீபத்தில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் பிஸியாக இருப்பவர் சூரி.தற்போது ரஜினிகாந்த் படத்திலும் ,வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் .இதையடுத்து கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார் .மதுரையை சொந்த ஊராக கொண்டவர் சூரி .இந்நிலையில் இவருடைய மகன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார் . மதுரை கிரிக்கெட் அசோஷியன் சார்பில் நடைபெற்ற […]
ஹீரோ ,தம்பி ஆகிய இருபடங்களும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். நடிகர் கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,சவுகார் ஜானகி ,உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம்” தம்பி”.இந்த படம் நேற்று வெளியானது .இதே போன்று சிவகார்த்திகேயன் ,அர்ஜுன் ,கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பலர் நடித்த “ஹீரோ” படமும் நேற்று முன்தினம் வெளியானது . கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கும் நிலையில் ,அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்படுவதால் இந்தசமயத்தில் இருபடமும் வெளியிடப்பட்டது .இதனால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் […]
நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட குடும்பப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் ‘ராட்சசன்’ திரைப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைமைப்பாளர் என நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. ராட்சசன் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் […]
KGF 2 படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்…!! கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான KGF 2 மிக பெரிய பொருட்செலவில் […]
தன்னை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடிவேலு. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் […]
சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள “சைக்கோ” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் அதிதி ராவ், […]
நடிகர் ஜெய் தனது பெயரை மாற்றப்போவதாக அறிவித்துள்ளார். விஜய் நடித்த “பகவதி” படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.தொடர்ந்து ‘சென்னை 28,கோவா , எங்கேயும் எப்போதும்,சுப்புரமணியபுரம்’ போன்ற பல படங்களை நடித்தார்.சமீபத்தில் கேப்மாரி என்ற அடல்ட் படத்தில் நடித்தார்.இப்போது சூப்பர் ஹீரோ கதையை கொண்டு உருவாகும் பிரேக்கிங் நியூஸ் போன்ற சில படங்களில் நடித்து வருகிறார்.நீண்ட காலமாக இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாயின.ஆனால் அவர் எங்கும் அதை சொன்னதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இவர் […]
ஒரு பாடல் 10கோடி செலவில் உருவாகி வரும் சரவணா ஸ்டோர் உரிமையாளரின் புகைப்படங்கள் வெளியீடு . சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் நடிப்பில் உருவாக்கி வரும் படத்தின் பாடல் கட்சிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .சரவணா ஸ்டார் உரிமையாளர் அருளின் புரொடெக்சன் நம்பர் 1நிறுவனம் தயாரிப்பில் பெயரிடப்படாத திரைப்படத்தில் அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி ,பிரபு ,விவேக் ,விஜயகுமார் ,நாசர் ,கோவைசரளா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள் . இந்தநிலையில் 10கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின் ஒரே […]
சிம்புவிற்கு வில்லனாக சுதீப் நடிப்பதால் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்பு நடிப்பில் “மாநாடு” படம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்காததால் கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தையே டிராப் செய்வதாக அறிவித்தார்.இயக்குனர் வெங்கட் பிரபுவும்,வெப் சீரிஸ் ஒன்றை இயக்க சென்றார். இந்நிலையில் சிம்புக்கும் ,சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர்.இதையடுத்து மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.வரும் ஜனவரி மூன்றாவது […]
பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டு தோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுவருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருமானம் புகழ் மற்றும் சமூக வலைத்தளத்தில் உள்ள வரவேற்பை கணக்கிட்டு 100 பேர் பட்டியல் […]